எரிமலைத் தொடர்கள் மூலம் கண்டங்கள் நிலையாக இருப்பது தெரியவந்துள்ளது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.



ripo.jpg
ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கானரித் தீவுகள் என்று அழைக்கப் படும் ஏழு எரிமலைத் தீவுகள் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கின்றன. ஸ்பானிய மொழியில் கானரி என்றால் நாய் என்று பொருள். இந்தத் தீவுகளின் பூர்வீக குடிகள் நாயை தெய்வமாக வழிபட்டதால் இவ்வாறு அழைக்கப் படுகின்றன.
 
canchain7.jpg
மேற்குப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியபடி அமைந்திருக்கும் லான்சரோட் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத் திட்டுப் பகுதியில் அமைந்திருக்கின்றன.கிழக்கு கோடியில் உள்ள எல் கிரரோ என்ற தீவும் அதற்கு அடுத்தபடியாக உள்ள லா பாமா எரிமலைத் தீவும் அட்லாண்டிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கின்றன.
இதில் கிழக்கு கோடியில் உள்ள எல் கிரரோ எரிமலையானது அடிக்கடி குமுறும் எரிமலையாக இருக்கிறது.
இந்த ஏழு எரிமலைத் தீவுகளும் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள நிலைக்கு வந்து சேர்ந்ததாகாவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததால்தான் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
sfs70.jpg
அந்தக் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல்தளப் பாறைகளை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இது போன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அட்லாண்டிக் கடல் பகுதியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அத்துடன் அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்தபடி அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்கக் கண்டங்கள் மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திசையை நோக்கியும் கடல்தரையுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
canchain6.png
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தரையுடன் ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது பூமிக்கு அடியில் இருந்த ஒரு எரிமலை வெப்ப மையத்தின் மேல் நகர்ந்த பொழுது அந்த எரிமலை வெப்ப மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் அட்லாண்டிக் கடல் தரையில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத் திட்டு வரைக்கும் தொடர்ச்சியாக எரிமலைகள் வரிசையாக உருவாகியதாக விளக்கம் கூறப் படுகிறது.
canchain5.jpg
உண்மையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு கடல்தரையையும் ஆப்பிரிக்கக் கண்டத்தையும் துளைத்த பொழுது அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோகினகர்ந்து இருந்தால் எரிமலைத் தீவு வரிசையில் மேற்கு கோடியில் இருக்கும் எரிமலையின் தொண்மையானது அதிகமாகவும் அங்கிருந்து கிழக்கு திசையை நோக்கி செல்லச் செல்ல எரிமலைகளின் தொண்மையானது படிப்படியாக குறைய வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் கானரி எரிமலைத் தீவு வரிசையில் மேற்கு  திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி செல்லச் செல்ல தீவுகளின் தொன்மையானது படிப்படியாக குறையாமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தையொட்டியுள்ள லான்சரோட் எரிமலையின் தொண்மையானது 15.5 மிலியன் ஆண்டுகளாக இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் லான்சரோட் தீவுக்கு அடுத்தபடியாக மேற்கு திசையில் உள்ள ஃபூர்ட்டி வெஞ்சுரா எரிமலையின் தொண்மையானது குறைவாக இருப்பதற்கு பதிலாக 20.6 மிலியன் ஆண்டுகள் தொன்மையுடன் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது எரிமலை மையத்தின் மேல் ஆபிரிக்கக் கண்டம் நகர்ந்து வந்த பொழுது முதன்  முதலில் உருவானதாக நம்பப் படும் லான்சரோட் எரிமலையின் தொண்மையானது குறைவாகவும் இரண்டாவதாக உருவானதாக நம்பப் படும் ஃபூர்ட்டி வெஞ்சுரா எரிமலையின் தொண்மையானது அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதே போன்று கானரி எரிமலைத் தீவு வரிசையில் மேற்குப் பகுதியில் உள்ள டென்னெரிபி எரிமலையின் தொண்மையானது 11.6 மிலியன் ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் டென்னெரிபி எரிமலைக்கு மேற்கில் உள்ள உள்ள லா கோமிரா எரிமலையின் தொண்மையானது குறைவாக இருப்பதற்கு பதிலாக 12.0 மிலியன் ஆண்டுகள் தொன்மையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
முக்கியமாக இந்த ஏழு எரிமலைத் தீவுகளின் வேதிச் சேர்மானமும் ஒன்றுக் கொண்று வேறு பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.எனவே இந்த எரிமலைத் தீவுகளானது தனித் தனி எரிமலைப் பிளம்புகள் மூலம் தனித் தனியாக உருவாகி இருப்பது நிரூபணமாகிறது.அத்துடன் எரிமலைத் தீவு வரிசையில் எரிமலைகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் அடிப்படியில் அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையைக் இருப்பதும் நிரூபணமாகிறது.

canchain2.gif
இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல்தரையின் மேல் இருந்தபடி வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் , வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்கே  பசிபிக் கடல்தரைப் பகுதியில் புதிய கடல்தரை உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து  வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று பூமிக்குள் புதைந்து அழிவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ofs1.jpg

அத்துடன் வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் செல்லும் பசிபிக் கடல் தரையானது உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியைத் துளைத்துக் கொண்டு நிலத்திற்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் காஸ் காடியா எரிமலைத் தொடரானது இப்படி வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்ற பசிபிக் கடல்தரையானது உருகி மேல் நோக்கி உயர்ந்து வட அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு உயர்ந்ததால்தான் உருவானது என்று விளக்கம் கூறப் படுகிறது.தான் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் இந்த விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அனாகிம் எரிமலைத் தொடர் ,ஸ்டிக்கின் எரிமலைத் தொடர் மற்றும் வெல்ஸ் கிரே எரிமலைத் தொடர் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைத் தொடர்களானது வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு இன்று வரை யாராலும் விளக்கம் கூற இயலவில்லை.என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் வட அமெரிக்கக் கண்டமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
fig5.gif
இதே போன்று வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பசிபிக் கடல் தரையிலும் புதிதாக கடல் தளம் உருவாகி தென் கிழக்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.இதில் தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல்தரையானது தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாக்கி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து தென் அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு உயர்ந்ததால் ஆண்டிஸ் எரிமலைத் தொடர் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் பசிபிக் கடல் தரைக்கு அடியில் இருக்கும் எரிமலை வெப்ப மையத்தால் பசிபிக் கடல் தரையானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால்தான் பசிபிக் கடல் தரையின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி வரிசையாக ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் பசிபிக் கடல்தரையின் மேல் பத்துக்கும் மேற்பட்ட எரிமலைத் தீவு வரிசைகள் உருவாகி இருக்கின்றன.இந்த நிலையில் உண்மையில் பசிபிக் கடல்தரையானது தென் கிழக்கு திசையில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் பசிபிக் கடல்தரையின் மேல் உள்ள எல்லா எரிமலைத் தீவு வரிசைகளும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

lic1.jpg
ஆனால் அவ்வாறில்லாமல் பசிபிக் கடல்தரையில் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு தெற்கில் உள்ள லைன் எரிமலைத் தீவு வரிசையானது ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.
அதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே பசிபிக் கடல்தரையின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகளின் மூலம் பசிபிக் கடல்தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.