கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.



பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவியோட்டைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வதால் எரிமலைகள் உருவாகின்றன.இந்த நிலையில் கடல் தரையும் கண்டங்களும் நகர்ந்தால் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கடல் தரையிலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருக்கின்றன.உதாரணமாக பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையும் லைன் எரிமலைத் தீவு வரிசையும் லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஒன்றுக் கொண்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.எனவே கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது கடல் தாரையின் மேலும் கண்டங்களின் மேலும் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் நிரூபணமாகிறது.
உதாரணமாக பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவுகளானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கின்றன.இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகளானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்குப் பகுதியில் கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் ஒரு எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.இந்த எரிமலைத் தொடர் பகுதியில் குறிப்பாக மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறைகளாக உருவாகுவதாகவும் இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு தொடர்ந்து பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை தென் கிழக்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

hap.gif Image Source: Eruptions of Hawaiian Volcanoes: Past, Present, and Future: U.S. Geological Survey General Interest Publication. http://volcano.oregonstate.edu/vwdocs/vwlessons/hotspots.html
இதனால் கிழக்கு கடலடி மேட்டுப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் உருவாகி தென் கிழக்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் இதில் தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தரையானது தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று வெப்பத்தால் உருகி மேல் நோக்கி உயர்ந்து தென் அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு ஆண்டிஸ் எரிமலைத் தொடராக உருவாகி இருக்கின்றன என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று வட மேற்கு திசையை நோக்கி நகரும் கடல் தளமானது பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய தீவுகளுக்கு அடியில் சென்று மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து எரிமலையாக உருவாகின்றன என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு பசிபிக் கடல் தரையானது வட மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெப்ப மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால்தான் பசிபிக் கடல் தரையின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகளானது வரிசையாக உருவாகியது என்று விளக்கம் கூறப் படுகிறது.
hawaii age.jpg
உண்மையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பால் ஹவாய் எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவாகி இருந்தால் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் தென் கிழக்கு பகுதியில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையானது குறைவானதாகவும் அதே நேரத்தில் வட மேற்கு திசையை நோக்கி செல்லச் செல்ல ஹாவாய் தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையானது படிப படியாக அதிகரிக்க வேண்டும்.ஆனால் புவியியல் வல்லுனர்கள்  ஹவாய் எரிமலைத் தீவுகளில் இருந்து பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ததில் அவ்வாறு ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கிச் செல்லச் செல்ல தீவுகளின் பாறைகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது தெரியவந்துள்ளது.
hage10.jpg
குறிப்பாக ஹவாய் எரிமலைத் தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது ஐந்து லட்சம் என்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் ஹவாய் எரிமலைத் தீவில் இருந்து வட மேற்கு திசையில் 519 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவாய் எரிமலைத் தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 5.1 மிலியன் ஆண்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் ஹவாய் தீவிற்கு வட மேற்கில் 565 கிலோ மேட்டர் தொலைவில் உள்ள நியாகு தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 4.89 மிலியன் ஆண்டுகள் தொன்மையானது என்பது தெரியவந்துள்ளது.

ischain age.gif

இதே போன்று ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3520 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உர்யாகி தீவில் உள்ள பாறைகளின் தொண்மையானது 43.4 மிலியன் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.ஆனால் ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3668 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்மி தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 39.9 மிலியன் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று ஸ்கிரிப்ட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அந்தோணி கொபெர்ஸ் என்ற புவியியல் வல்லுநர் பசிபிக் கடல் பகுதியில் உள்ள லைன் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளிலும் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றின் தொண்மையை மதிப்பிட்ட பொழுதும் அந்தத் தீவு வரிசைகளில் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாக தெரிவித்து இருக்கிறார்.இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள துமாத்து எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் பாறைகளின் தொன்மையும் படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும் தெரியவந்துள்ளது.எனவே பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
lohi2.jpg
இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சிசுன் ஹுவாங் மேற்கொண்ட ஆய்வில் ஹவாய் தீவில் உள்ள மோனா லோவா எரிமலை மற்றும் மோனா கியா எரிமலைப் பாறைகளின் வேதிச் சேர்மாணமும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மோனோ லோவா எரிமலைப் பாறையில் ஈயத்தின் ஐசோ டோப்புகளான ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது அதிகமாகவும் அதே நேரத்தில் மோனோ கியா எரிமலைப் பாறைகளில் ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது குறைவாக இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஹவாய் தீவில் உள்ள இந்த இரண்டு எரிமலைகளும் தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதாக சிசுன் ஹுவாங் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு ஒரே தீவில் உள்ள எரிமலைகளானது தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள சமோவா எரிமலைத் தொடரிலும் உள்ள தீவுப் பாறைகளின் வேதிச் செர்மாணமும் வேறுபட்டு இருப்பதுடன் மார்கொசாஸ் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் வேதிச் செர்மாணமும் வேறு பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இவ்வாறு பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் வேதிச் செர்மானமானது வேறுபட்டு இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.