பொய்த்துப் போன கருத்தாக்கங்கள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி

கண்டத் தட்டு நகர்ச்சி மற்றும் வெப்ப மையக் கருத்தாக்கம்
அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இணையாக உருவாகி இருக்கின்றன.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களிலும் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த மெசோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் தரையில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் அக்ன்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க இயலாது.
எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் பிறகு பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.(continental drift)
ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்ந்தும் சக்தி எது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கேட்ட கேள்விக்கு வெக்னரால் உறுதியாக ஒரு பதிலைக் கூற இயலவில்லை.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடை பெற்ற பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றில் பணி புரிந்த ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர் அந்தக் கப்பலில் சோனார் என்ற கருவியைப் பயன் படுத்தி ஒலி அலைகளை கடலுக்குள் செலுத்தி அந்த அலைகள் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் கப்பலை வந்தடைந்த பொழுது நுட்பமான கருவிகள் மூலம் பதிவு செய்து கடல் தரையின் மேடு பல விவரங்களை பதிவுசெய்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் இருந்து தென் பகுதிவரை நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் இருப்பதை அறிந்தார்.மேலும் ஆய்வு செய்ததில் அந்தக் கடலடி மலைத் தொடரில் பல எரிமலைகள் இருப்பதும் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
அத்துடன் அந்தக் கடலடி மலைத் தொடரானது பல கிளைகளாகப் பிரிந்து இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் பசிபிக் பெருங் கடலுக்கு அடியிலும் செல்வது அறியப் பட்டது.



இதன் அடிப்படையில் ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது ஒரு பாத்திரத்தில் நீர் கொதிக்கும் பொழுது அடிப்பகுதியில் வெப்பமடைந்த நீர் இலேசாகி மேற்பகுதிக்கு வந்த பிறகு மறுபடியும் அடிப்பகுதிக்கு செல்கிறது.
அதைப் போன்றே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகிறது.
 இதே போன்று மறுபடியும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மத்தியப் பகுதிக்கு வரும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல் தளத்தை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில்  புதிய கடல் தளமாக உருவாகிறது.
இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹெஸ் கூறினார்.(sea floor spreading)அத்துடன்  அட்லாண்டிக் கடலின் இரு புறமும் இருக்கும் கண்டங்களும் கடல் தளத்தின் மேல் இருந்தபடி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.(plate tectonic)
அப்படியென்றால் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
பூமி விரிவடைய சாத்தியம் இல்லை எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகும் கடல் தளமானது வேறு சில இடங்களில் மறுபடியும் கண்டங்களுக்கு அடியில் சென்று பூமிக்குள் சென்று அழிகிறது என்று விளக்கம் கூறப் பட்டது.
வெப்ப மையை கருத்தாக்கம்
குறிப்பாக பசிபிக் பெருங் கடல் பகுதியில் இவ்வாறு கடல் தரையானது கண்டங்களுக்கும் தீவுகளுக்கு அடியில் சென்று அழிவதாக கூறப் பட்டது.
இந்த நிலையில் பசிபிக் பெருங் கடல் பகுதியில் தென் கிழக்குப் பகுதியில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி வரிசையாக ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பது அறியப் பட்டது.


(பசிபிக் கடல் தரையில் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலை வரிசைத் தீவுகள் -ஹவாய் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் இணை பேராசிரியர் எரிமலை இயல் வல்லுநர் டாக்டர் கென் ஹோன் வெளியிட்ட பசிபிக் கடல் தரை படம் )

அதாவது பசிபிக் கடல் தளமானது தென் கிழக்குப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலை மையத்தால் தொடர்ந்து துளைக்கப் பட்டதாலும் அதே நேரத்தில் பசிபிக் கடல் தளமும் தொடர்ந்து உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாலும், பசிபிக் கடல் தரையின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவானது என்று விளக்கம் கூறப் பட்டது.
இந்தக் கருதாக்கமானது வெப்ப மையக் கொள்கை (hot spot theory)என்றும் அழைக்கப் படுகிறது.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவுகளைப் போலவே பத்துக்கும் மேற்பட்ட எரிமலைத் தீவு வரிசைகள் உருவாகி இருக்கின்றன.
எனவே உண்மையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்குப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் பசிபிக் கடல் பகுதியில் உள்ள மற்ற எரிமலைத் தீவு வரிசைகளும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு தென்பகுதியில் உள்ள லைன் எரிமலைத் தீவு வரிசையும் லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகாமல் தென் திசையை நோக்கி அதிகமாக வளைந்து உருவாகி இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசைகள் ஒன்றுக் கொண்டு இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
எனவே கடலுக்கு அடியில் புதிய கடல் தளம் உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல்  இருந்தபடி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கங்களும் தவறு என்பதும் நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.