கண்டங்கள் நகர்வது பூகோள ரீதியில் சாத்தியமல்ல.விஞ்ஞானி.க.பொன்முடி.



தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப் படுகிறது.


இன்றும் கூடஇந்தக் கண்டங்கள் எல்லாம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது.


குறிப்பாக கண்டங்களுக்கு அடியில் உள்ள பெரிய பாறைத் தட்டுகள் நகர்வதாகவும் கண்டங்கள் எல்லாம் அந்தப் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.


இதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் கிழக்கு மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அட்லாண்டிக் கடல் தரையின் மேல் பூமிக்கு அடியில் இருந்து கடல் தரையைப் பொதுக் கொண்டு பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால்

அப்பகுதியில் புதிய கடல் தரை உருவாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தொடர்ந்து வெளி வரும் பாறைக் குழம்பால் அப்பகுதியில் பாறைகள் தொடர்ந்து

உருவாகுகின்றன அப்பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகியிருந்த பழைய கடல் தரைப் பாறைகள் பக்க வாட்டில் தள்ளப்படுகின்றன. இவ்வாறு மத்தியப் பகுதியில் தொடர்ந்து

புதிதாக பாறைகள் உருவாகி பக்க வாட்டுப் பழைய பாறைகளைத் தள்ளுவதால் கடல் தரை புதிதாக உருவாகி பிரிந்து விரிவடைந்து எதிரெதிர் திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதன் மேல் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் நகரும் பாறைத் தட்டின் மேல் உள்ள தென் அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையிலும் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசையிலும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் பூமியின் வட துருவத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனை வரை அதாவது வடக்கு தெற்காக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு, அதாவது தீர்க்க ரேகைக்கு இணையாக புதிய கடல் தளப் பாறைகள் உருவாகி, கிழக்கு மேற்காக விரிவடைந்து

நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் பாறைத் தட்டின் மேல் உள்ள தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் கிழக்கு மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால் தீர்க்க ரேகைக்கு இணையாக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு பாறைத் தட்டுகள் உருவாகி விரிவடைந்து கிழக்கு மேற்காக நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் இதே போன்று தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம் தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டதுடன் இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு தென் துருவப் பகுதியில் இருந்து பிரிந்து நகர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட இந்தக் கண்டங்கள் வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இவ்வாறு தென் பகுதிக் கண்டங்கள் தென் துருவ அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக் கண்டதைச் சுற்றியுள்ள கடல் தரைப் பகுதியில் ஏற்கனவே கூறியபடி புதிய கடல் பாறைத் தட்டுகள் உருவாகி விரிவடைந்து வடக்கு மற்றும் தெற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்..

அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் பாறைத் தட்டின் மேல் இருப்பதால் இந்தியா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.



ஆனால் தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் பூமியின் சுற்றளவு குறைவாகவும் அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடக்கே செல்லச் செல்ல பூமியின் சுற்றளவு அதிகமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.



குறிப்பாக அண்டார்க்டிக் கண்டமானது தென் துருவப் பகுதியில் அறுபது பாகை அட்ச ரேகை வரையிலான சுற்று வட்டப் பகுதிக்குள் அமைந்திருகிறது.இப்பகுதியில் பூமியின் சுற்றளவு இருபதாயிரத்தி எண்பத்தி எட்டு கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இந்தியாவோ பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.குறிப்பாக பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவு நாற்பதாயிரத்தி எழுபத்தி ஐந்து கிலோ மீட்டர் ஆகும்.



எனவே குறைவான சுற்றளவுள்ள கடல் பகுதியில் உருவான பாறைத் தட்டுகள் எப்படி அதிக சுற்றளவுள்ள பகுதியை நிரப்ப இயலும்? என்ற கேள்வி எழுகிறது.

முக்கியமாக குறைவான சுற்றளவுள்ள கடல் பகுதியில் உருவான பாறைத் தட்டுகளால் அதிக சுற்றளவில் இருக்கும் பாறைத் தட்டுகளை நகர்த்தக் கூட இயலாது.



எனவே குறைவான சுற்றுவட்டப் பகுதியான தென் துருவப் பகுதியில் புதிதாக பாறைத் தட்டுகள் புதிதாக உருவாகி, அதிக சுற்றளவுள்ள வடக்கு திசையில் நகார்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதும், அதனால் அந்தப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தவாறே கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதும் பூகோள ரீதியில் ரீதியில் சாத்தியமல்ல.

ஆனால் நிலப் பகுதிகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

இதற்கு கடலுக்கு அடியில் இருந்த கண்டங்கள் மேல் நோக்கி உயர்ந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டு இருப்பதே காரணம்.

புவித் தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் மேல் நோக்கி உஅர்வதால்தான் நில அதிர்ச்சியும் அதே போன்று கடல் தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதால் சுனாமியும் ஏற்படுகின்றது.

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.