பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.-விஞ்ஞானி.க.பொன்முடி.

நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பதற்கு வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கானது ஆறாயிரம் அடி உயரத்திற்கு பல்வேறு பாறைத் தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று அமைந்திருக்கிறது.

குறிப்பாக கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கானது வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எனவே பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததாலேயே கொலராடோ பீட பூமி உருவாகியிருக்கிறது.

அதே போன்று பாறைத் தட்டுகள் மேலும் மேலும் உயர்ந்ததால் நிலம் பிளவு பட்டு கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கு உருவானது.


ஆனால் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆறாயிரம் அடி உயரம் வரை அமைந்து இருக்கும் அடுக்குப் பாறைத் தட்டுகளை, பிளவுப் பள்ளத்தாக்கிற்கு இடையே ஓடிக் கொண்டு இருக்கும் கொலராடோ ஆறு அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது.


முக்கியமாக கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கை விட பல மடங்கு பெரிய ''அடுக்குப் பாறைத் தட்டு பிளவுப் பள்ளத்தாக்கு'' செவ்வாய் கிரகத்தில் உருவாகியிருப்பது செயற்கைக் கோள் புகைப் படம் மூலம் தெரிய வந்திருக்கிறது.


குறிப்பாக கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கானது 446 கிலோமீட்டர் நீளமும் 29 கிலோமீட்டர் அகலமும் 1.83 கிலோமீட்டர் ஆழமும் உடையது.


ஆனால் செவ்வாய் கிரகத்தில் உள்ள வேலஸ் மாரினர்ஸ் என்று அழைக்கப் படும் அடுக்குப் பாறைத் தட்டு பிளவுப் பள்ளத் தாக்கானது 4000 கிலோ மீட்டர் நீளம் உடையது.அதாவது வட அமெரிக்கக் கண்டத்தின் மொத்த நீளம்.50 முதல் 100 கிலோமீட்டார் அகலம் உடையது. 10 கிலோ மீட்டர் ஆழத்தைக் கொண்டிருகிறது.


அதாவது கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கை விட ஆறு மடங்கு அதிக ஆழமுடையது.


எனவே எனவே நீரோட்டத்தின் விளைவால் ''அடுக்குப் பாறைத் தட்டுகளால் ஆன பிளவுப் பள்ளத் தாக்கு'' உருவாக வில்லை என்பதையே மிகவும் பெரிய அளவில் உருவாகியிருக்கும் வேலஸ் மாரினர்ஸ் பிளவுப் பள்ளத் தாக்கு மூலம் உறுதியாகிறது.


முக்கியமாக வேலஸ் மாரினர்ஸ் பள்ளத் தாக்கில் ஒரு இடத்தில மெலஸ் காஸ்மா என்று அழைக்கப் படும் பள்ளத் தாக்குப் பகுதியில் ''நீர் உள்ளே செல்வதற்கோ வெளியேறுவதற்கோ வழி இல்லாமலிருப்பதையும்'' ஆராய்ச்சியாளர்கள் கண்டிருகின்றனர்.


எனவே அடுக்குப் பாறைத் தட்டுகளால் ஆன பிளவுப் பள்ளத் தாக்குகள், தரைக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதாலேயே உருவாகின்றன என்பது, செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட செவ்வாய் கிரக அடுக்குப் பாறைத் தட்டு பிளவுப் பள்ளத் தாக்குப் புகைப் படம் மூலம் நிரூபணமாகிறது.

எனவே பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதும் நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.