நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பத்திரிக்கை செய்தி வெளியீடு.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?-விஞ்ஞானி.க.பொன்முடி.

முதலை போன்ற தோற்றத்தில் இருக்கும் இருக்கும் மெசோ சாராஸ்
என்று விலங்கு இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை ஏரி போன்ற நீர் நிலையில் வாழ்ந்த விலங்காகும்.


இந்த விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலால் பிரிக்கப் பட்ட தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து அகழ்வாய்வு மூலம் எடுக்கப் பட்டது.

இதன் அடிப் படையில் நிலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்க இயலாது.

எனவே இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா கற்றும் ஆப்பிரிக்கா முதலான கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்திருக்க வேண்டும் என்றும் பிறகு தனித் தனியாக பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் கூறினார்.

இன்றும் கூட இந்தக் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

உண்மையில் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறதா?

குறிப்பாக கண்டங்கள் பக்க வட்டில் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் கருதப் படுகிறது.

ஆனால் இவ்வாறு விளக்கம் கூறுபவர்களால் கண்டத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் கூற இயலவில்லை.

குறிப்பாக கண்டங்களின் மத்தியப் பகுதிகளிலும் மலைகளின் மேலும் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

எனவே நிலப் பகுதிகள் யாவும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் அமிழ்ந்து இருந்த நிலப் பகுதிகளே தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருக்கின்றன.

இவ்வாறு நிலப் பகுதிகள் அங்காங்கே மேல் நோக்கி உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

அப்படியென்றால் முதலை போன்று நிலத்தில் வாழ்ந்த மெசோ சாராஸ் போன்ற விலங்கின் எலும்பு புதை படிவங்கள் பல கண்டங்களில் காணப் படுவதற்கு என்ன காரணம்?

கடலின் சராசரி ஆழம் நன்கு கிலோ மீட்டர்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் தற்பொழுது கடலால் சூழப் பட்டு தீவுக் கண்டங்களாகவும் தீவுகளாகவும் உருவாகி இருக்கும் நிலப் பகுதிகளுக்கு இடையே தரைவழித் தொடர்பு இருந்ததே தரையில் வாழ்ந்த விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம்.

ஆதாரம்.

நார்வே கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.

கண்டங்கள் நகரவில்லை என்று உறுதியாகக் கூறுவதற்கும் ஆதாரம் இருக்கிறது.

கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களைக் குறிக்கும் வரை படம் ஒன்று தயாரிக்கப் பட்டது.

அதில் ஆப்பிரிக்கக் கண்டதை சுற்றிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருந்தது.இதன் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டமானது ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் அமைந்து இருக்கிறது என்று கருதப் படுகிறது.

குறிப்பாக பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியும் ஆஸ்திரேலியக் கண்டமும் தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்து இருந்தது என்றும் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தன என்றும் கருதப் படுகிறது.

இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் தென் துருவப் பகுதியில் அருகருகே இருந்த பிறகு தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் விலகி வந்திருப்பது உண்மையென்றால் ; இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டின் மேல் அமைந்து இருக்க வேண்டும்.

குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டதைச் சுற்றிலும் நில அதிர்ச்சிகள் பதிவாகி இருந்ததின் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டமானது ஒரு தனிப் பாறைத் தட்டின் மேல் இருப்பதாகக் கருதப் படுகிறது.

எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் அமைந்து இருப்பது உண்மையென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தைச் சுற்றிலும் நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வேண்டும்.


ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறிக்கும் வரை படத்தில் ஆப்பிரிக்கக் கண்டதைச் சுற்றிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருந்ததைப்
போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தைச் சுற்றிலும் நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.



எனவே இந்திய நிலப் பகுதியும் ஆஸ்திரேலியாக் கண்டமும் முன்னொரு
காலத்தில் அருகருகே ஒன்றாக இருந்ததாகக் கருதுவதற்கும் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.

அதே போன்று கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான்
நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று கருதுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுதே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததாலேயே மலைகள் மற்றும் பள்ளத் தாக்குகள் உருவாகின.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.