பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆய்வுக் கட்டுரை.விஞ்ஞானி.க.பொன்முடி.

டைனோசர்கள் போன்ற விலங்கினங்கள் பல கண்டங்களிலும் தீவுகளிலும் காணப்படுவதற்கு முன்னொரு காலத்தில் கண்டங்கள் தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருகின்றனர்.

இவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் டைனோசர்கள் எலும்புகள் பல கண்டங்களில் காணப் படுவதற்கு உண்மையில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.

குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையில் துளையிட்ட பொழுது, கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரைப் பாறையில் பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை நார்வே நட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருகிறது.

இவ்வாறு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் போன்ற விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கும்
தற்பொழுது தீவுகளாக இருக்கும் நிலப் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.

ஆனால் டைனோசர்கள் எலும்புகள் பல கண்டங்களிலும் தீவுகளிலும்
காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராயச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று கூறும் ஆராய்ச்சியாளர்களால் கண்டத்தின் ஓரப் பகுதியைத் தவிர்த்து கண்டத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விளக்கம் கூற இயலவில்லை.

இது குறித்து அமெரிக்கப் புவியியல் வல்லுநர் டாக்டர் சேத் ஸ்டீன் கூறுகையில் கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சி '' புரிந்து கொள்ள முடியாத வளர்ப்புக் குழந்தை '' போல இருக்கிறது. என்று குறிப்பிடுகிறார்.

கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு இன்னும் சில முக்கியமான ஆதாரங்களும் இருக்கின்றன.

நீர் யானைகளால் நீரில் நீந்தவோ மிதக்கவோ இயலாது.குறிப்பாக நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம் ஆகும்.

ஆப்பிரிக்காவில் குள்ள வகை நீர்யானைகளும் காணப் படுகின்றன.

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நானூறு கிலோ எடையுள்ள குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

நீந்தவோ மிதக்கவோ இயலாத நீர்யானைகள் எப்படி நானூறு கிலோமீட்டர் கடல் பகுதியைக் கடந்து ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவிற்கு வந்திருக்க முடியும்?

குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருகிறது.

அத்துடன் மடகாஸ்கர் தீவில் டைனோசர்களின் எலும்புப் புதைபடிவங்களும் காணப்படுகின்றன.இதற்கு டைனோசர்கள் காலத்தில் மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்கக் கண்டதுடன் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், பிறகு பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாக மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகளும் காணப்படுகின்றன.

டைனோசர்கள் காலத்தில் லெமூர் குரங்கினம் தோன்றவில்லை.

முக்கியமாக லெமூர் குரங்கினமும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம் ஆகும் .

எனவே லெமூர் குரங்கின் மூதாதைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம், கடலில் மிதந்தபடியே மடகாஸ்கர் தீவிற்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் நானூறு கிலோ எடையுள்ள குள்ள நீர் யானைகளால் லெமூர் குரங்குகளைப் போல கடல் தாவரங்கள் மேல் மிதந்து செல்ல இயலாது.

முக்கியமாக மடகாஸ்கர் தீவில் மூன்று வகையான குள்ள நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று வகை நீர் யானைகளின் மூதாதைகளும் தனித் தனியாகக் கடல் பயணம் செய்து மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் உண்மையில் மடகாஸ்கர் தீவில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குள்ள நீர் யானை இனத்தின் எலும்புப் புதை படிவங்கள் காணப்படுவதற்கு, இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.

இதே போன்று மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் சைப்ரஸ், கிரிட்டி, சிசிலி, மால்ட்டா ஆகிய தீவுகளிலும் வெவ்வேறு வகையான குள்ள நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

குறிப்பாக சைப்ரஸ் தீவில் கிடைத்த குள்ள நீர் யானைகளின் கால் மற்றும் பாத எலும்புகள் தரை வாழ்க்கைக்கு ஏற்ற படி இருந்தது.இது குறித்து உலகப் புகழ் பெற்ற அறிவியல் பத்திரிக்கையான நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கை '' சைப்ரஸ் தீவிற்கு குள்ள நீர் யானைகள் எப்படி வந்தன என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை '' என்று தெரிவித்து இருக்கிறது.

கடல் மட்டம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மற்றொரு முக்கிய ஆதாரமும் இருக்கிறது.

இந்தியப் பெருங் கடலின் தென்பகுதியில் மூன்று எரிமலைத் தீவுகள் அமைந்து இருக்கின்றன.

கெர்கூலியன் தீவுகள் என்று அழைக்கப்படும் அந்த எரிமலைத் தீவுகளானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலைகள் ஆகும்.

கடலுக்கு அடியில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக்
கடலடிப் பீட பூமியில், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலைப் பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும் கண்டங்களுக்கும் தற்பொழுது தீவுகளாக இருக்கும் நிலப்பகுதிகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்ததுமே, டைனோசர் போன்ற விலங்கினங்கள் உலகம் முழுவது பரவியதற்குக் காரணம்.

மற்றபடி கண்டங்கள் தீவுகள் ஒன்றாக இருந்ததாகக் கூறுவதும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதும் தவறு.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.