ஜப்பான் சுனாமிக்கு காரணம் எரிமலை .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
ஜப்பான் தீவிற்கு அடியில் பசிபிக் கடல் தரை நகர்ந்து சென்றதால்தான் ஜப்பானில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக ஜப்பான் தீவுகள் பசிபிக் பெருங் கடலுக்கு வடமேற்கு பகுதியில் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் பசிபிக் கடல் தட்டானது பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்கு பகுதியில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கடலடி மேட்டு பகுதியில் பத்து கிலோ மீட்டர் தடிமன் உடையதாக கருதப் படும் கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள கடலடி மேட்டுப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வரும்பொழுது குளிருந்து இறுகி புதிய கடல் தட்டாக உருவாகிறது என்றும்,இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு புதிதாக பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தட்டை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்ந்தி விட்டு மத்திய பகுதியில் புதிய கடல் தட்டாக உ...