சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தைத் தெரிவிக்க வில்லை.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இதே போன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் USGS என்று அழைகப் படும் அமெரிக்க புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இ எ நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் ,அந்த தீவுகளுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் அதனைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் நம்பப் படுகிறது.இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று ஒரு கண்டத்திற்கு அடியில் குறிப்பாக கடலுக்கு அடியில்,அடுத்த கண்டத்தின் கடல் தளம் உரசியபடி நகர்ந்து செல்வதால், நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அப்பொழுது அந்த பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள். கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும்,பத்து கோடி , தென் துருவப் பகுதியில் , ஒன்றாக இணைந்து அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்தந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பிறகு , இந்த இரண்டு கண்டங்களும் கடல் தளங்களுடன் தனித் தனியாகபி பிரிந்து வாடா கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடை வெளியில் அமைந்து இருக்கிறது. அத்துடன் இந்திய நிலப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும்,ஆஸ்திரேலியாக் கண்டமானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. அது மட்டுமின்றி, அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு, நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 01.10.2005 அன்று முதலில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி சென்றதால்தான் சுனாமி ஏற்பட்டது என்று டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together) ஆனால் ,அதே நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் தெற்காசிய சுனாமி, ஏற்பட்டது ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)என்று அடிப்படை ஆதாரமின்றி, முன்னுக்குப் பின் முரணாக, இரண்டு உறுதி படுத்தப் படாத விளக்கங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். இன்று வரை எந்த ஒரு ஆராய்ச்சியாளராலும் தெற்காசிய சுனாமிக்கு சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன? குறிப்பாகக் கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, அந்தப் பகுதியில் இருந்த 'சிமிழு' என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது, கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதே சிமிழு தீவில், 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகளானது,எரிமலைகளைச் சுற்றிலும் உருவாகி இருப்பதை, எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள, நான்கு எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை, பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றிலும், வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு, அந்த எரிமலைகளானது, சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, அந்த எரிமலைகளைச் சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் அளவுக்கு, உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது, என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது குமுறும் எரிமலைகளில் சுற்றிலும் மேடுபள்ள வளையங்களானதுஉருவாகி இருக்கிறது, என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று, பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே, தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று, பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதைப் போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதைத் தற்செயலானது என்று கருத இயலாது. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட,சரியான விளக்கத்தை கூற இயலாததை போலவே , வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி தீவில், 12.1.2010 அன்று, சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு கூட, கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட ,சரியான விளக்கத்தை கூற இயல வில்லை. தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள், வட அமெரிக்கக் கண்டமானது,கடல் தளத்துடன் ஒரு கண்டத் தட்டாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்புகின்றனர்.அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது,கடல் தளத்துடன் ஒரு கண்டத் தட்டாக வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்புகின்றனர்.இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டமானது, ஒரு தனிப் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.ஆனால் குறிப்பாக கரீபியன் பாறைத் தட்டானது, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது,தற்பொழுது இருக்கும் எப்படி வந்தது,தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று யாராலும் உறுதியாகக் கூற இயல வில்லை. ஏனென்றால் அந்தப் பாறைத் தட்டானது எங்கே உருவானது என்று யாருக்கும் தெரிய வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தொடர்ச்சியாக உருவாகி இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதன் அடிப்படையில், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்து உண்மை என்றால்,அட்லாண்டிக் பெருங்கடலின் மத்திய பகுதியில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதி வரை, தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிககள் பதிவாகி இருக்க வில்லை. இதனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், எல்லையை வரையறை செய்ய முடிய வில்லை.எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது, ''வரையறை செய்யாத எல்லை பகுதி'' ( UNDEFINMED BOUNDARY )என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் அட்லாண்டிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அட்லாண்டிக் கடல் தளம் நிலையாக இருப்பதற்கு இன்னொரு ஆதாரம். கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் மத்திய கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு, வெளி வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் மதியப் பகுதியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும், பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும், கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும், அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாகத் தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில், எரிமலை செயல் பாட்டால், கரீபியன் தீவுக் கூட்ட மானது, உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில், மேற்கு திசையை நோக்கி நகரும் அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் தீவுகளுக்கு அடியில் சென்று, உருகிப் பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தை பொத்துக் கொண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்கு திசையில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளாக உருவாகி இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது, குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,பல சிறிய எரிமலைத் தீவுகள் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,பல சிறிய எரிமலைத் தீவுகள் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,கரீபியன் பாறைத் தட்டு கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகரும் அட்லான்டிக் கடல் தளமானது கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாகி ,மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தை பொத்துக் கொண்டு உயர்ந்து கடல் தளத்துக்கு மேலே வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் இந்தக் கருத்தில் உள்ள முக்கியமான பிரச்சினை என்ன வென்றால், தற்பொழுது இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும், பாலம் போன்று இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து, கரீபியன் பாறைத் தட்டு, பசிபிக் கடல் பகுதியில் இருந்து, தற்பொழுது இருக்கும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, உருவாகி இருக்க வில்லை என்றும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் பாறைத் தட்டு நுழைந்த பிறகே , மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யூகித்தனர். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது என்பதும் நிரூபணம் ஆகிறது. இவ்வாறு பசிபிக் கடல் மாதிரிக்கு, மத்திய அமெரிக்க நிலப் பகுதிப் புதை படிவ ஆதாரங்கள் முற்றிலும் முரணாக இருப்பதால், வேறு சில ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில், எரிமலை செயல் பாட்டால் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம், என்றும் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்த விளக்கமானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது. முக்கியமாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது, எரிமலைத் தீவுக் கூட்டம் ஆகும்.அதிலும் குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாகக் கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும், நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக விளக்கம் கூறப் படுகிறது. உதாரணமாக பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தீவுகளானது பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.இதன் அடிப்படையில்,பசிபிக் கடல் தளமானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்குள் இருந்து ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் ,பசிபிக் கடல் தளத்தின் மேல், தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி, ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில்,அட்லாண்ட்டிக் கடல் தளமானது, அட்லாண்ட்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த நிலையில் பூமிக்குள் இருந்து எரிமலைப் பிழம்புகள் கடல் தளத்தை துளைத்தால், கரிபியன் தீவுக் கூட்டமானது, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது,நேர் கோட்டுப் பாதையில் உருவாகாமல், தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.எனவே ஆராய்ச்சியாளர்கள் முன் மொழிந்த 'அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு'முற்றிலும் முரணாக கரீபியன் தீவுக் கூட்டத்தின் அமைப்பு இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது,நேர் கோட்டுப் பாதையில் உருவாகாமல், தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் உருவாகி இருப்பதன் மூலம் கடல் தளமானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய எரிமலைப் பிழம்பானது, மறுபடியும் பூமிக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் 'அட்லாண்டிக் கடல் மாதிரி'யை முன் மொழிந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு யூகத்தைக் கூறினார்கள். ஆனால் கரீபியன் தீவுகளில் உள்ள எரிமலைகளில், இன்றும் கூட எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இது போன்ற குழப்பங்களால், இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் மூன்றாவதாக ஒரு புதிய விளக்கத்தையும், முன் மொழிந்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''தற்போது இருக்கும் இட'' மாதிரி' ( IN SITU )என்று அழைக்கப் படுகிறது. கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருந்தாலும் கூட,கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி, அட்லாண்ட்டிக் கடல் தளமானது, அட்லாண்ட்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்கிறது .அத்துடன் இன்றும் கூட கரீபியன் தீவுகளில் எரிமலை சீற்றங்கள் ஏற்படுவதால்,கரீபியன் தீவுக் கூட்டமானது,நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.எனவே ஆராய்ச்சியாளர்கள் முன் மொழிந்த ''தற்போது இருக்கும் இட'' மாதிரிக்கும் ( IN SITU )கரிபியன் தீவுக் கூட்டத்தின் அமைப்பானது முற்றிலும் முரானாக இருக்கிறது. ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாக இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பதை எடுத்துக் காட்டும் விதமாக இருக்கிறது. ஆனால், இன்று வரை கரீபியன் தீவுக் கூட்டத்தின் தோன்றம் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு, உண்மையில்,கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகித் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது, தற்பொழுது எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு இன்று வரை, உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. அதனால் அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ,ஒரு ' ' 'த ந் தி ர மா ன ' விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால், பின்னர் அதன் தோற்றம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவானது என்ற கேள்விக்கு விளக்கம் கூற வேண்டும், என்பதால் அதனைத் தவிர்க்கும் பொருட்டு,கரீபியன் தீவுக் கூட்டமானது,குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,கரீபியன் பாறைத் தட்டானது, வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற விளக்கத்தை கூறி இருக்கின்றனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறது என்ற கருத்துக்கும் கூட மேற்சொன்ன அதே விளக்கத்தை பொருத்திக் கொள்ள முடியும்.ஆக கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை கூறத் தெரியாத நிலையில்,அமெரிக்கப் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒரு விளக்கத்தைக் கூறி தப்பித்து இருக்கின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால். வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையுள்ள தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.எனவே நிச்சயம் கரிபியன் தீவுக்கு கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து இருக்க இயலாது. குறிப்பாக அட்லாண்ட்டிக் கடல் பகுதியானது, கண்டங்களின் பிரிவால் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விரிவடைந்து நகர்ந்ததால் பெரிதானதாகக் கூறப் படுகிறது.எனவே கரிபியன் தீவுக்கு கூட்டமானது அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாக்கி இருந்தால்,அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் தொலைவுக்கு, எரிமலைத் தொடர்கள் நேர்கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் அவ்வாறு பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியிலும் உருவாகி இருக்க வில்லை. என்பதும் தெளிவாகிறது.இந்த நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவாகி இருந்தால்,அட்லாண்ட்டிக் கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதால்,அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் அவ்வாறு பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வில்லை.ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் ,தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.இதன் மூலம் அட்லாண்ட்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இந்த நிலையில், கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், அதாவது நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தந்த ஒப்புதல் வாக்கு மூலம் போன்று, ''கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே'' கரிபியன் பாறைத் தட்டும், வட அமெரிக்கக் கண்டத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில், உறுதி படுத்தப் படாத விளக்கத்தை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் சரியான விளக்கத்தை,USGS என்று அழைக்கப் படும், அமெரிக்கப் புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட ,சரியான விளக்கத்தை கூற இயல வில்லை. எனவே, ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபண மாகியுள்ளது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. மேலும் கடந்த 06.02 2023 அன்று துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் கூட, துருக்கியில் உள்ள எரிமலை வரிசைக்கு இணையாகவே ஏற்பட்டு இருக்கிறது. எனவே பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை செயல்பாடுகள் காரணமாகவே துருக்கி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள மொரோக்கோவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உள்ள நிலமானது, இருபது சென்டி மீட்டர் அளவுக்கு, உயர்ந்து இருப்பதை, ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து அறிவித்து இருக்கின்றனர். குறிப்பாகக் கண்டங்களைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதுடன், அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் ,அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதன் மூலம், நில அதிர்ச்சிகளுக்கு எரிமலை செயல்பாடே காரணம் என்பதும் நிரூபணமாகிறது. அத்துடன் கண்டங்களின் மேல் பரவலகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது. அது மட்டுமின்றி கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது, அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன், அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது. இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதே போன்று கண்டங்களின் மேலும், கடல் தளத்தின் மேலும், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது குறிப்பாகக் கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும், உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும். குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தை சேர்ந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும். ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில், அருகருகே உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று,பசிபிக் கடல் தளமானது, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைச் தொடர்கள் எல்லாம் ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும், லைன் எரிமலைத் தொடரும் , ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி ,உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு, பசிபிக் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன் கண்டங்களின் மேல் பரவலகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது. அது மட்டுமின்றி கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது, அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன், அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது. இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதே போன்று கண்டங்களின் மேலும், கடல் தளத்தின் மேலும், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது குறிப்பாகக் கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும், உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும். குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தை சேர்ந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும். ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில், அருகருகே உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று,பசிபிக் கடல் தளமானது, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைச் தொடர்கள் எல்லாம் ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும், லைன் எரிமலைத் தொடரும் , ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி ,உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு, பசிபிக் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது. குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது. இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்கனவே இந்த விலங்கின் சொந்தங்களின் ,புதை படிவங்களானது வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார். அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தவறான காரணம் கூறப் படுகிறது. எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன. ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர். அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.அத்துடன் வரலாற்றுக்கு காலத்திலேயே கடல் மட்டமானது இருப்பது அடி வரை உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஆனால், தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் புதை படிவ ஆதாரங்கள் மூலம்,பனிப் பொழிவும் ,கடல் மட்ட உயர்வும், ஒரே கால கட்டத்தில் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம்,கடல் மட்ட உயர்வுக்கு, பனி உருகல் காரணம் அல்ல என்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.அத்துடன் கடல் மட்ட உயர்வால்,பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. ''உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள்'' குறிப்பாக வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது. இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்' என்று அழைக்கப் படுகிறது. இந்த பெர்மா புரோஸ்ட் நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது. குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை, விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது. ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது. சைபீரியாவில் 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக் குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி வயிற்றில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாகக் கனடா பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மாமத் என்று அழைக்கப் படும் பனி யானை இனம் ஏன் அழிந்தது என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக, ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கிய மரங்கள் இருக்கும் கடலடிக் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டது. இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது. அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. மாறாக சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக ,பூமிக்குள் சுரக்கும் நீரானது ,புவியின் மேற் பரப்புக்கு தொடர்ந்து வருவதால்,கடல் மட்டம் உயர்வதால் கடலின் பரப்பளவு அதிகரிப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைகிறது.அதன் காரணமாக குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன், அதன் காரணமாக துருவப் பகுதிகளில் இருந்த காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள், ஒரு புதிர் . கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது. மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால் இந்தக் கருத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார். சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவதிற்கு ஓட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது. பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது. தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது. கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும். எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார். இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் தனி வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன. உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள். எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் தரை வழித் தொடர்பு வழியாக மண் புழுக்கள் எரிமலைத் தீவுகளை அடைந்திருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்துக்கு அருகில் உள்ள கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் மண் புழுவினம் காணப் படுகிறது.கெர்கூலியன் தீவானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலையின் உச்சிப் பகுதி ஆகும். இந்த நிலையில் கெர்கூலியன் தீவு எப்பொழுது உருவானது என்று அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,கெர்கூலியன் தீவு அமைந்து இருக்கும் கடலடிப் பீடபூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளைச் சேகரித்து அதன் தொன்மையை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது. அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அந்தக் குழுவினர் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் டாக்டர் மைக்கேல் காபின், தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் அந்தக் கடலடிப் பீட பூமியானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கூட கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளிலும் கூட இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாரஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்தக் கண்டு பிடிப்பனது , ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும், அதன் காரணமாகக் கெர்கூலியன் கடலடிப் பீட பூமிக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே அந்தத் தரை வழித் தொடர்பு வழியாகவே மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெர்கூலியன் பீட பூமிப் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் அந்தப் பீட பூமியானது கடலுக்குள் மூழ்கிய பொழுது, மண் புழுக்கள் தற்பொழுது கடல் மட்டத்துக்கு மேலாக தீவாக இருக்கும் எரிமலையின் மேற்பகுதிக்கு வந்து இருக்கின்றன. இடைப் பட்ட காலத்தில் மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் பரிணாம மாற்றத்தால் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் புதிய இன வகையாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கிறது. இதே போன்று ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது இருந்த தரைவழித் தொடர்பு வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற எரிமலைத் தீவுகளுக்கும் வந்த மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் காலப் போக்கில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனவகைகளாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கின்றன. கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது.கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்கின்றன.பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன. அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன. அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன.இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன.இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன. இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன. பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). விக்கி பீடியாவில் உள்ள விபரங்கள் ரிசல்யூசன் குயாட் பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது.இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது.. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன. கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள். வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது. இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன. அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. .அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது. இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அத்துடன் கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்து கொண்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது. தற்பொழுது கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதனால் சில புவியியல் அமைப்புகளுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ராட்சத உப்புப் படிவப் புதிர். குறிப்பாக, மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதற்கான காரணத்தை அறிய, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம். இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள். அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள். இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன . இது போன்று பல முறை கண்டங்களின் மேல் கடல் நீர் வந்து சென்றதால், நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன. அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும். இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராச்சத குழாய்களை செலுத்தி, துளையிட்ட பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது. சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும்.ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான். தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர். பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக்கு கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும் அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது. ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மத்திய தரைக் கடல் மற்றும் காஸ்பியன் கடல் உருவானது எப்படி? இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது. அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் அதை சூழ்ந்து பாந்தலாசா என்ற ஆழமற்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் டெதிஸ் என்ற கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது. அதன் பிறகு லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்க கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும், யுரேசியாக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கியும்,நகர்ந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில், வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று,கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது, வட மேற்கு திசையில் நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாக நம்பப் படுகிறது. அதே போன்று கோண்டுவானாவில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையில் நகர்ந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் டெதிஸ் கடல் மூடப் பட்டதாவும் நம்பப் படுகிறது.இவ்வாறான கண்டங்களின் நகர்ச்சியால் ஐரோப்பா,ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களுக்கு இடையில் சிறைப் பட்ட, டெதிஸ் கடலே மத்திய தரைக் கடலாக உருவானதாகவும் நம்பப் படுகிறது.இதே போன்றுதான் நிலப் பகுதியால் சூழப் பட்டு, காஸ்பியன் கடலும் உருவானதாகவும் நம்பப் படுகிறது.இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலில் இருக்கும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும். ஆனால் காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது மற்ற கடலில் காணப் படும் உப்பை விட மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலில் காணப் படும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதைக் காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. எனது விளக்கம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது என்று புதை படிவ ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கூறி இருந்தேன். அதன் அடிப்படையில் கடலானது பூமிக்குள் இருந்து மேற்பரப்பிற்கு சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்த நீரால் உருவானது என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன். அதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதையும் ஆதாரபூர்வமாக விளக்கம் தெரிவித்து இருந்தேன். இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்து இருக்கிறது.அப்பொழுது அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.மறுபடியும் கடல் மட்டம் உயர்ந்ததால் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. மறுபடியும் கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.இது போன்று பல முறை கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்ததால் மத்திய தரைக் கடல் தரையின் மேல் ஒன்றரை அடி உயரத்திற்கும் மூன்று அடி உயரத்திற்கும் ராட்சத உப்புப் படிவங்கள் உருவானது. இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்ததால் உப்பு படியும் வேகமும் குறைந்தது அதனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து ஏற்கனவே படிந்த உப்புப் படிவமானது கடலில் மூழ்கியது. முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பதை போலவே அட்லான்டிக் கடலுக்கு அடியிலும் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது மத்திய தரைக் கடலைப் போலவே அட்லான்டிக் கடலின் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் ஒரு ''சுண்ணாம்பு மலை'' உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த நண்டு, நத்தை, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு, அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள், கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. பனிப் பந்து பூமி. கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், பூமி முழுவதும் 1 முதல் 2 கிலோ மீட்டர் உயரத்துக்கு,பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர். அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு வளி மண்டலத்தில் திரண்டதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பனிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று கடலில் கலந்ததாகவும், அதனால் கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்த பொழுது அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர். மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மில, வாயு கடலில் கலந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது, ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளையும் முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை. எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை. வரிப் பட்டை இரும்பு படிவுகள் சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகளாக காணப் படுகிறது. குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது.இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது.ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. எனது விளக்கம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன. பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணையந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது. பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன.பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனாலும் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது. ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக்காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக்காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. எடியாக்காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதன் அடிப்படையில் நான், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து, கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாகவும் விளக்கம் கூறினேன். ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்களின் மேல் உருவான ,இரும்புப் படிவுகளுக்கு பனிப் பந்து பூமி விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதல் பனிப் பந்து பூமி முதலில் எடியாக்காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கடினமான ஓடுகளைச் சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எடியாக்காரா காலத்திற்கு முன்பு, அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு, பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது. பனிப் பந்து பூமி பல முறை ஏற்பட்டு இருக்கிறது?! வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் படிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பனியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரென்று உயர்ந்து கண்டங்களின் மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் படியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது. அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர். அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் படிவுகளுக்கு, கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு, பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர். உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது, கண்டங்களின் மேலே கடல் வருகிறது.அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாக்குகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது, படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.இவ்வாறு பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதால், பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது. அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.அதனால் கிராண்ட் கன்யன் போன்ற பிளவுப் பள்ளத் தாக்குகள் உருவாகுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது. இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார். அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது. இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார். அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார். ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார். ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும். தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன. ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும். எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும். எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது. பேலியோடிக்டின் ஐரோப்பாவில் கடற் கரையோர பாறைகளில் தேன் கூடு போன்ற வலைப் பின்னல் போன்ற சுவடுகள் இருப்பது பன்னெடுங் காலமாகவே புதிராக இருந்து வந்தது. அது ஒரு கடல் உயிரியால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்று புரிந்து கொள்ளப் பட்டது.ஆனால் குறிப்பாக அது எந்த உயிரியால் உருவாக்கப் பட்டது என்று தெரியாமல் இருந்தது.பாறைகளின் தொன்மையின் அடிப்படையில் அந்த புதை படிவ சுவடுகளானது, ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையானது என்று தெரிய வந்தது.சில ஆராய்ச்சியாளர்கள் அந்த வலைப் பின்னல் அமைப்பானது, நத்தை போன்ற ஒரு மெல்லுடல் கடல் உயிரியின் கூடு என்றும், அதனுள் நீர் நுழையும் பொழுது, நீருடன் அடித்துக் கொண்டு வரப் படும், சிறிய உயிரிகனை, அந்த மெல்லுடல் உயிரி பிடித்து உண்ணலாம் என்றும் கருதினார்கள்.ஆனால் ஒருவரும் அந்த உயிரியை கண்டிருக்க வில்லை.ஆனால் அந்த உயிருக்கு பேலியோடிக்டின் என்று பெயர் சூட்டப் பட்டு இருந்தது. இந்த நிலையில் அட்லாண்ட்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் கடலுக்கு அடியில், பல்லாயிரம் அடி ஆழத்தில், வடக்கு தெற்கு திசையை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, உருவாகி இருக்கும் மத்திய அட்லாண்ட்டிக் கடலடி எரிமலைத் தொடரின் அடிவாரப் பகுதியை, குறிப்பாக 11,500 அடி ஆழத்தில், ஆல்வின் என்ற நீர் மூழ்கிக் கலனில் இருந்து, வீடியோ எடுத்து ஆய்வு செய்த பொழுது, அங்கே பேலியோடிக்டினின் கூடுகள் இருப்பதை ஆராச்சியாளர்கள் கண்டு வியந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்தான், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பு, மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அட்லாண்ட்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகளில் காணப் படும், ஒரு கடல் உயிரியால் கட்டப் படும் சுவடுகள், அந்த கடலடி எரிமலைத் தொடரின், அடி வாரப் பகுதியில், குறிப்பாக 11,500 அடி ஆழத்தில், கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம், கடந்த ஐந்து கோடி ஆண்டு காலமாவே, அட்லாண்ட்டிக் க டல் தளம், நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.அத்துடன் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது 11,500 அடி வரை , தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதி திசைகளை நோக்கி விரிவடைந்து கொண்டு இருப்பதாக கூறப் படும், காலபாகஸ் கடலடி மேட்டுப் பகுதியிலும், குறிப்பாக 12,000 அடி ஆழத்தில், பேலியோடிக்டினின் கூடுகள் இருப்பதும், ஆல்வின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது, 12,000 அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதாவது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது மூன்றரை கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.அப்படி என்றால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பெருங் கடல்களுக்கு பதிலாக, அங்கங்கே கடல் எரிகளே இருந்திருக்கிறது.இவ்வாறு கடலின் பரப்பளவு மிகவும் குறைவாக இருந்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் கூட வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.அத்துடன் கடல் மட்டமும், கண்டங்களின் உயரமும் குறைவாக, இருந்ததால் பூமியின் அளவும் சிறியதாக இருந்ததால் துருவப் பகுதிகளின் அதிக அளவு சூரிய வெளிச்சமும் கிடைத்து இருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்து இருக்கின்றன. 0000000 கடற்பசு,கடல் மட்டம்,மற்றும் கால நிலை மாற்றம். கடல் பசு என்று அழைக்கப் படும் பாலூட்டி விலங்கினம்,கடற் கரையோரத்தில் ஏழு அடி ஆழத்தில் உள்ள கடல் தரையில் வளர்ந்து இருக்கும் புற்களை உண்டு வாழும் ஒரு சாதுவான விலங்கு. குறிப்பாகக் கடற்பசுக்கள் , வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதிக் கடல் பகுதியில் வாழ்கின்றன.கடலுக்கு அடியில் வாழ்ந்தாலும் கடற் பசுக்கள் கடல் நீரைக் குடிப்பதில்லை,ஆறு மற்றும் குளத்தில் உள்ள நல்ல நீரையே குடிக்கின்றன. அதே போன்று கடற் பசுக்கள் காற்றை சுவாசிக்கவும் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நீர்பரப்புக்கு மேல் மூக்கைத் திறந்து காற்றை சுவாகிக்கும்.நீருக்கு அடியில் சென்றதும் மூடி போன்ற தசையினால் மூக்கை மூடிக் கொள்ளும். அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் கடற் பசுவால் நீருக்குள் சுவாசிக்காமல் தாக்குப் பிடிக்க வல்லது. கடற் பசுக்களின் உடற் செயலியல் மந்தமானது என்பதால் கடற் பசுக்கள் மெதுவாகவே இயங்கக் கூடியது.ஒரு நாளைக்க எட்டு மணி நேரம் புற்களை மேயும்.ஒரு நாளைக்கு நாற்பது கிலோ எடையுள்ள புற்களை உண்கின்றன. கடற் பசுவில் இரண்டு இனங்கள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டோகோங் என்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானாட்டி என்றும் அழைக்கப் படுகிறது. டோகோங் இனத்தில் ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் திமிங்கிலம் அளவுள்ள கடற் பசுக்கள் ,பசிபிக் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன,தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது. டோகோங் இனத்தில் ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் கடற் பசுக்களின் புதை படிவங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஜெர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ் ஸ்விட்சர் லாந்து பகுதிகளில் டோகாங் வகை கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய கடற் பசுக்களின் புதை படிவங்கள் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படுவதன் மூலம்,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டம் அமைந்து இருக்கும் அட்ச ரேகைப் பகுதியில் கூட, பூமத்திய ரேகைப் பகுதியைப் போலவே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது புலனாகிறது. அதே போன்று ஐரோப்பாக் கண்டத்தின் நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டதுக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது. அத்துடன் ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையானது என்பதுடன், அந்தக் கடற் பசுக்கள் சிறிய அளவிலான தொடை எலும்புடன் வாழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது.அதனால் புல் தரைகள் காலியாக இருந்தது.அந்தக் காலத்தில் மரங்களில் பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த, ஒரு மூஞ்சூறு வகை விலங்கினமானது,தரையில் இறங்கி தாவரங்களை உண்டு வாழ ஆரம்பித்ததுடன்,பல வகையான வாழிடங்களிலும் வாழ ஆரம்பித்ததால் பல தகவமைப்புகளுடன் பல வகை பாலூட்டி விலங்கினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றின. அப்பொழுது தரைப் பகுதியில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஒரு விலங்கினம் ,ஆறு குளம்,ஏரி போன்ற நீர் நிலைகளுக்கு அடியில் இருந்த தாவரங்களை உண்டு வாழும் வாழ்க்கை வாழ்ந்ததில், கால்களை நடக்கப் பயன் படுத்துவதற்குப் பதிலாக உந்தி உந்தி நீந்தவும் நீர்ப் பரப்புக்கு மேலே எம்பவும் பயன் படுத்தியத்தில், காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகள் வளர்ந்து கடற் பசுவினம் தோன்றியது. கடற்பசுவின் மூததையானது யானை,திமிங்கிலம்,மற்றும் ஹை ராக்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு கொறித்துண்ணி விலங்கினத்தின் நெருங்கிய சொந்தம். எனவே கடற் பசுவின் தொன்மையான புதை படிவங்கள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்டது. அத்துடன் மானாட்டி வகைக் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவில் குறிப்பாக புளோரிடா பகுதியிலும் கரீபியன் தீவுகளிலும் காணப் படுவதால்,மானாட்டி வகைக் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடல் நீரோட்டங்களின் உதவியுடன் அட்லாண்டிக் கடலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பயணம் செய்து, அமெரிக்கக் கண்டங்களை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில்,ஒரு கடற் பசுவின் தலைப் பகுதியின் புதை படிவங்களை ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார். தொல் விலங்கியல் வல்லுனர்கள் தொன்மையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்ற எதிர் பார்ப்புக்கு மாறாக இந்தக் கண்டு பிடிப்பு இருந்தது. அப்படியென்றால் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் அதாவது புதிய உலகம் என்று அழைக்கப் படும்,அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம், அட்லாண்டிக் கடலில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி பயணம் செய்து.ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில்,ஒரு ஆற்றுப் படுகையில்,மீன்கள்,முதலை,குரங்கின் எலும்பு போன்ற புதை படிவங்களுடன்,காண்டா மிருகத்தின் புதை படிவத்தையும்,டாக்டர்,டாரில் டொமினிக் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் முக்கியமாக காண்டா மிருகமானது நீரில் நீந்த இயலாத விலங்கு. எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்த நிலையில் அதே ஜமைக்கா தீவில் டாக்டர் டாரில் டொமினிக், நாலு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, கடற் பசுவின் எலும்புப் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார். பிசோசைரன் என்று பெயரிடப் பட்ட அந்த விலங்கானது, நன்கு வளர்ந்த கால்களுடன் இருந்தது.அத்துடன் அந்த விலங்கானது நீர் வாழ் கடற் பசுவுக்கும் நிலத்தில் வாழ்ந்த நடக்கும் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்றும் தெரிவித்து உள்ளார். குறிப்பாக நீர் யானையானது பகலில் நீர் நிலைகளில் நீருக்கு அடியில் தாவரங்களை உண்டும், இரவில் தரைக்கு வந்து தாவரங்களை உண்டும் வாழ்கிறது.அதே போன்று ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட பிசோசைரன் விலங்கும் நீர் யானையைப் போலவே, நீரிலும் நிலத்திலும் வாழ்ந்தது என்று டாக்டர் டாரில் டொமினிக் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள டுனீசியாவில்,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் உட் செவிப் பகுதியில் காணப் படும் எலும்பின் புதை படிவங்களை,டாக்டர் ஜூலியட் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார். குறிப்பாகக் கடற் பசுவின் உட்செவிப் பகுதி எலும்பானது தனித் தனியயுடன் இருக்கும் என்பதால்,அதனை ஆய்வு செய்த டாக்டர் ஜூலியட் பினாய்ட்,அந்த விலங்கு ஒரு கடற் பசுவின் எலும்பு என்றும்,அந்த விலங்குக்கு,சாம்பி கடல் பசு என்று பெயர் சூட்டினார். அத்துடன் அந்த காதுப் பகுதி எலும்பமைப்பின் படி, அந்த விலங்கானது நீரடி வாழ்க்கைக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று இருந்தது என்றும் டாக்டர் ஜூலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார். முக்கியமாக டுனீசியாவில் வாழ்ந்த விலங்கின் எலும்பு அமைப்பானது மிகவும் தொன்மையானது என்றும்,அந்த விலங்கின் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடற் பசுவானது, ஆப்பிரிக்கப் பகுதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவுக்கு நடக்கும் கடற் பசுக்களே சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஒரே காலத்தில் அட்லாண்டிக் கடலுக்கு இரண்டு பக்கமும் நடக்கும் கடற் பசுக்கள் இருந்திருப்பது புதிராக இருக்கிறது. இதன் மூலம் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களுக்கு நடக்கும் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் மாநாட்டி வகைக் கடற் பசுக்கள் காணப் படுவதன் மூலமும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. 00000000 இகுவானா உடும்புகள் எப்படி தீவுகளுக்குச் சென்றன? தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், இகுவானா என்று அழைக்கப் படும் பச்சை நிற உடும்புகளின் வம்சாவளிகளானது,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில், ஒன்றுக் கொன்று தொடர்பே இல்லாத வகையில், அமைந்து இருக்கும்,தீவுகளில் காணப் படுவது, உயிரியல் வல்லுனர்களுக்குப் பெரும் புதிராக இருக்கிறது. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், கலாபகாஸ் தீவில் வந்திறங்கிய டார்வின்,அந்தத் தீவுகளில், இருந்த ஆமைகள்,தீவுக்குத் தீவு வேறுபட்டு இருப்பதைக் கண்டார். குறிப்பாக, அதிக செழிப்புடன் ,குறைந்த உயரத்திலேயே தாவர வகைகள் இருந்த தீவில், இருந்த ஆமைகளின் கால்களும் கழுத்தும் குட்டையாக இருந்தன,ஆனால்,வறண்ட சூழலுடன்,அதிக உயரத்தில் தாவர வகைகள் இருந்த தீவில் இருந்த ஆமைகளின் கால்களும்,கழுத்தும் நீண்டு இருந்தன. அந்த ஆமைகள் எல்லாம் ஒரே பொது மூதாதையின் வழித் தோன்றல்கள் என்றும், தீவுகளின் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு பெற்றவைகள் என்பதைப் புரிந்து கொண்ட பொழுதுதான், அவருக்கு விலங்கினங்கள் எல்லாம், ஒரு பொது மூதாதையில் இருந்து,காலப் போக்கில், சூழ் நிலைக்கு ஏற்ப, பரிணாம வளர்ச்சியில் உருவானவைகள் என்ற முடிவுக்கு வந்தார். ஆனாலும், அந்த கலாபகாஸ் தீவில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கலாபகாஸ் தீவில்,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளும் காணப் படுகின்றன. ராட்சத ஆமை மற்றும் இகுவானாக்கள் எல்லாம் தரையில் வாழக் கூடிய விலங்கினங்கள். எனவே, எப்படி இந்த விலங்கினங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று டார்வின் வியந்தார். கலாபகாஸ் தீவு ஆமையின் மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற, சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர். கலாபகாஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி, தற்செயலாகக் கலாபகாஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. இந்த முறையில், இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, காலாபகாஸ் தீவை அடைந்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. குறிப்பாக, ராட்சத ஆமைகளின் உடலில் அதிக அளவில் கொழுப்பும்,நீரும் இருப்பதால்,அந்த ஆமைகளானது,பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. இதே போன்று, கலாபகாஸ் தீவில் 'நேசோரைசோமிஸ் டார்வினி' என்று பெயர் சூட்டப் பட்ட, எலியினம் வாழ்ந்திருப்பது, புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது, அந்த எலி இனம் அழிந்து விட்டாலும், நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன. ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது, சிறிய அளவுள்ள எலியின் உடலில், கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால், எலிகளால் பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க இயலாது. இந்த நிலையில் , தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கலாபகாஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கலாபகாஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா ? என்ற கேள்வி எழுந்தது. தற்பொழுது கலாபகாஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மரபணு ஆய்வில், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள், முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும், செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும், குடியேறிய பிறகு, மற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆமைகளின் கடல் பயணத்துக்குக் கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் 'ஹிங்கிபேக்' ஆமையின் வம்சாவளி, என்பது தெரிய வந்துள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, அட்லாண்டிக் பெருங் கடலில், பல மாதங்கள் தத்தளித்த படி, மிதந்து சென்று, தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதே போன்று, கலாபகாஸ் தீவில், இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது. கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின், மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், பச்சை நிற இகுவானக்கள் ஆகும். குறிப்பாக, ஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது.ஏனென்றால் உடல் வெப்பத்தைப் பாதுகாக்கும், மயிர்த் தோல், ஊர்வன வகை விலங்கினங்களுக்கு இல்லை. தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின், உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவைப்படுகிறது. கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்த, இகுவானாக்கள் காணப் படுகின்றன.ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது. மற்றொன்று, கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது. கடலுக்குள் செல்லும், கடல் இகுவானாக்களுக்கு, உடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு, மூக்குக்கு அருகில்,விசேஷச் சுரப்பிகள் இருக்கின்றன. கடல் இகுவானாக்களும், தரை இகுவானாக்களும், ஒரே பொது மூதாதையில் இருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும். கடல் இகுவானாக்கள், கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன. அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெய்யிலில் காய்ந்து, உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன. சில சமயம் பல இகுவானாக்கள் நெருக்கமாக சேர்ந்து, உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன. அதே போன்று இரவில்,மணலில் குழி பறித்து குழிக்குள் பதுங்கியும், இகுவானாக்கள் ,தங்கள் உடல் வெப்பத்தைப் பாது காத்துக் கொள்கின்றன. உடல் வெப்பம் குறைந்தால், இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும். குளிர் காலத்தில் இகுவானாக்களின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது,இகுவானாக்களால் வேகமாகச் செயல் பட இயலாது. இது போன்ற சமயங்களில், இகுவானாக்கள் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன. இகுவானா மழை- கடந்த 2008 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம், வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தில்,குளிரில் விரைத்த இகுவானாக்களால்,மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள இயலாமல் போனதால்,மரங்களில் இருந்த இகுவானாக்கள் பொத்து பொத்து என்று சாலைகளில் விழுந்தன. அதன் பிறகு மதிய நேரத்தில் வெப்ப நிலை உயர்ந்த பொழுது சில இகுவானாக்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து மறுபடியும் மரங்களில் ஏறின. அதற்குள்,பல இகுவானாக்கள்,அந்த வழியாக வந்த வானங்களின் சக்கரங்களுக்குப் பலியாகின.இந்த நிகழ்வை,ஒரு உள்ளூர் தொலைக் காட்சி,'இகுவானா மழை' என்று தலைப்பில் ஒளி பரப்பு செய்தது. இந்த நிலையில்,தென் அமெரிக்காவில் இருந்து,இகுவானாக்கள் எப்படி,இரவு பகலாக ,கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மூலம், பல நாட்கள் பயணம் செய்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க முடியும்? இந்த நிலையில்,கலாபாகஸ் தீவின் பாறைகளின் தொன்மையை, ஆராய்ச்சியாளர்கள், மதிப்பிட்ட பொழுது,அந்த எரிமலைகளானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. ஆனால் ,மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுக் கடல் இகுவானாக்களானது, அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே,கலாபாகஸ் தீவிள் வாழும், தரை வாழ் இகுவனாக்களில் இருந்து, பிரிந்து பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே,கலாபாகஸ் தீவு இகுவானாக்களானது,தற்பொழுது இருக்கும் ,கலாபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வேறு சில தீவுகளில் வசித்து இருக்கலாம் என்றும்,அதன் பிறகு அந்தத் தீவுகள்,கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும்,நம்பப் பட்டது. இந்த நிலையில்,கடந்த 1990,ஆம் ஆண்டு,ஆரிகன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலாபகாஸ் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டத்துக்கும், இடையில்,கடலுக்கு அடியில்,ஐயாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளின் மேற்பகுதியானது,சம தளமாக இருப்பதை அறிந்தனர். அத்துடன், அந்த சமதளப் பரப்பின்மேல்,அலைகளின் அரிப்பால் உருவான கோள வடிவக் கற்களையும் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில்,அந்த கடலடி சம தள மலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு மேலாக,தீவுகளாக இருந்திருக்கின்றன என்றும்,அந்தத் தீவுகளில்,கலாபகாஸ் தீவு விலங்கினங்களின் ,பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும்,விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,தற்பொழுது கலாபகாஸ் தீவில்,வாழும் விலங்கினங்களின் மூததைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தற்பொழுது உள்ள கலாபகாஸ் தீவுக்கு வருவதற்கு,அந்தக் கடலடித் தீவுகள் பாலம் போன்று இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,பல தனிமைத் தீவுகளில் காணப் படுவதற்கு,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பது,கலாபகாஸ் தீவில் காணப் படும்,இகுவானா உடும்புகள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. பொதுவாகக் கண்டங்களில் காணப் படும், விலங்கினங்கள் ,தீவுகளில் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல், விலங்குகள் தொற்றிக் கொண்டு, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் பிஜி தீவோ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதால்,இகுவானா உடும்புகளானது,கடல் பகுதியைக் கடக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப் பட்டு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. ஆனால், நிச்சயம் அந்த சிறிய விலங்குகளால், ஆறு மாத காலம், உண்ண உணவும்,குடிக்க நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்க இயலாது. முக்கியமாகப் ,பசிபிக் கடல் நடுவே,,எட்டு மாத காலம், இரவுக் கால குளிரிலும், மழையிலும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உடும்புகளால்,உடல் வெப்பத்தை,பாதுகாத்து இருக்கவும் இயலாது. இந்த நிலையில்,மிசிசிப்பி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பிரிசி நூனான் என்ற உயிரியல் வல்லுநர், வேறு ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது,பிஜி தீவு இகுவானாக்களின் மூதாதையானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப் படும், கோண்டுவானாக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு அந்தக் கோண்டுவானாக் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்த பொழுது, பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு,இகுவானா உடும்புகள் வந்து விட்டதாகவும் பிரிசி நூனான் தெரிவித்து இருக்கிறார். ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதுடன்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, தென் அமெரிக்க இகுவானா உடும்புகளின் வம்சாவளிகள்,பசிபிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கலாபகாஸ்,பிஜி டோங்கா ஆகிய தீவுகளிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகளிலும் ,இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவிலும் (Chalarodon madagascariensis) காணப் படுவதன் மூலம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்திருப்பது, உறுதிப் படுத்துகிறது. 00000000000000000000 தென் பகுதிக் கண்டங்களில் காணப் படும் மூதாதை பாலூட்டி ''புரோட்டோ அங்குலேட்டம் டோனா'' டைனோசர்கள் காலத்தில் கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருக்கின்றன. தமிழகத்தில் ஆசிய வகை டைனோசர் ட்ரூடோண்ட் லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில் இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படும் நிலையில்,அதே கால கட்டத்தில்,ஆசியக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே லேட் கிரட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதன் அடிப்படையிலும் கூட டைனோசர்கள் காலத்தில் இருந்தே கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே நிலையாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. பிளேட் டெக்டானிக் தியரியின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கா, இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்களானது ,வட பகுதிக் கண்டங்களுடன், நிலத் தொடர்பு இன்றி இருந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் இந்தக் காலத்தில் வட அமெரிக்காவில் பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அப்குதிக் கண்டங்களான தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய கண்டங்களி காணப் படுவதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் அழிந்த காலத்தில், கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி ''பாந்த லாசா'' என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அத்துடன் அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் நம்பப் படுகிறது. அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும்,இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. அத்துடன் பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது. தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே, ஆப்பிரிக்கக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதே போன்று, இந்தியக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது,டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில்,தென் அமெரிக்கா,இந்தியா,ஆப்பிரிக்கா,ஆகிய நிலப் பகுதிகளானது, வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் ஸ்டோனி புரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த உடற்கூறியல் வல்லுனரான டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒப்பாய்வில்,வட அமெரிக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான புரோட்டோ அங்குலேட்டம் டோனா என்ற விலங்கே தற்போதுள்ள எல்லா பாலூட்டி வகை விலங்கினங்களின் பொது மூதாதை என்று தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் அந்த விலங்கானது நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும் டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது, வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு ,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி அவார்கள்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று,நேட்சர் பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்த, பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்களானது, தென் பகுதிக் கண்டங்களான, தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. 000000000000000 மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது? கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது. எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது. ஏற்கனவே சீமோ சூக்கசின் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை. 00000000000000 நன்னீர் நண்டுகள் நண்டுகள் பத்துக் காலிகள் என்று அழைக்கப் படும் ஓட்டுடலி இனத்தைத் சேர்ந்தது.இந்த இனத்தில் இறால்,லாப்ஸ்டர்,ஸ்க்ரிம்ப்ஸ் மற்றும் கிரே பிஷ் என்று அழைக்கப் படும் முதுகு எலும்பற்ற உயிரினங்கள் உள்ளன. நண்டினங்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றின.அதன் பிறகு கடலுடன் ஆறுகள் சங்கமிக்கும் முகத் துவாரப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்த நம்ண்டுகள், பின்னர் படிப் படியாக ஆறுகள் மற்றும் குளத்திலும் வசிக்க ஆரம்பித்த பிறகு, நிலத்திலும் வசிக்க ஆரம்பித்தது. நன்னீர் நண்டுகள் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நண்டினத்தில் இருந்து பிரிந்து தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றன. கடல் நண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு காரணம் பெண் நண்டுகள் கருத்தரித்த பிறகு அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் முட்டைகளை கடல் அலையில் கரைத்து விடும்.அதன் பின்னர் பல மாதங்கள் மிதவை உயிரியாக வாழும் இளம் நண்டுகள் பின்னர் கரைக்கு வந்து வாழத் தொடங்கும், கடலில் மிதவை உயிரியாக வாழும் பொழுது கடல் நீரோட்டத்தால் மற்ற தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் அடித்துச் செல்வதால் கடல் நண்டுகள் உலகெங்கும் பரவி வாழ்கின்றன. ஆனால் நன்னீர் நண்டுகளின் வாழ்க்கை முழுவதும் நன்னீர் நிலைகளிலேயே கழிவதால், நன்னீர் நண்டுகளின் பரவல் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே வரையறைப் படுத்தப் படுகிறது.இருந்தாலும் நன்னீர் நண்டினங்களும் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அத்துடன் நன்னீரில் வாழும் நண்டு தவளை போன்ற பிராணிகள் அதிக உப்புள்ள கடல் நீரில் இருந்தால் நண்டு மற்றும் தவளையின் உடலில் இருந்து நீர் வெளியேறி நண்டும் தவளையும் இறந்து விடும். எனவே நன்னீர் நண்டு மற்றும் தவளைகளால் அதிக உப்புள்ள கடல் நீரில் வாழ இயலாது. இந்த நிலையில் இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர்,செஷல்ஸ் போன்ற தீவுகளில் நன்னீர் நண்டுகள் மற்றும் தவளைகள் காணப் படுகின்றன. எப்படி இந்த நன்னீர் நண்டுகள் கடல் நடுவே இருக்கும் தீவுகளுக்குச் சென்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகிறது. கோண்டுவானா நண்டு பொட்டாமானாட்டிடே என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலும்,மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகிறது. நன்னீர் நண்டுகளால் கடல் பகுதியைக் கடக்க இயலாது என்பதால் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளில் நன்னீர் நண்டுகள் காணப் படுவதற்கு, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதிகள் ஒன்றாக இணைந்து கோண்டுவானா என்ற பெருங் கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நீல் கும்பர்லிட்ஜ், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளிலும் காணப் படும் நன்னீர் நண்டுகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டார். அந்த மரபணு ஒப்பாய்வில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே என்ற நன்னீர் நண்டினத்தில் இருந்து ஏழரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவில் காணப் படும் செஷல்ஸ் அல்லுராடி என்ற நன்னீர் நண்டினம் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நன்னீர் நண்டுகள் எப்படி கடல் பகுதியைக் கடந்து தீவுகளுக்குச் சென்றன? என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டது. நன்னீர் நண்டுகள் கடல் நீரில் வைத்து சோதனை செய்யப் பட்டது.அப்பொழுது நன்னீர் நண்டுகள் இரண்டு வார காலம் கடல் நீரில் தாக்குப் பிடிப்பது தெரிய வந்தது. எனவே நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரத் தண்டில் உள்ள பொந்துகளில் இருந்த படி இரண்டு வார காலம் மிதந்த படி ஐநூறு கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சூறாவளி மற்றும் புயல் மழையால் காற்றில் ஈரப் பதமான சூழலில் உடலின் ஈரம் காயாமல், காற்றையும் சுவாசித்த படி தீவுகளை அடைந்து பிறகு நன்னீர் நண்டுகள் குளம் குட்டை போன்ற நன்னெற நிலைகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால் செஷல்ஸ் தீவு நன்னீர் நன்னீர் நண்டினமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே நண்டினத்தில் இருந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாக மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால் மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டாதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். எனவே செஷல்ஸ் தீவுக்கு நன்னீர் நண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது. ஆனால் செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து இருக்கிறது. அதே போன்று செஷல்ஸ் தீவானது மடகாஸ்கர் தீவில் இருந்தும் வட மேற்கு திசையில் ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. ஆனால் அதிக பட்சம் நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலம் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு வரை கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே செஷல்ஸ் தீவில் காணப் படும் நன்னீர் நண்டினம் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து செஷல்ஸ் தீவுக்கு வந்து சேர்ந்தது என்பது குறித்து தற்பொழுது உறுதியான விளக்கங்கள் இல்லை. குருட்டுப் பாம்புகள் பல தீவுகளுக்குப் பாம்பினங்கள் எப்படிச் சென்றன என்பதும் இன்று வரை புரியாத புதிராக இருக்கின்றன. மிகவும் தொன்மையான பாம்பின் புதை படிவம் மத்தியக் கிழக்கு நாடான ஜெருசலேம் நாட்டில் யூதேயா மலைப் பகுதியில், பதின் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையான சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. பாகிராகிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்பிற்கு சிறிய அளவிலான இரண்டு பின்னங் கால்களும் இடுப்பு மற்றும் கணுக் கால் எலும்புகளும் இருந்தன. அந்தப் புதை படிவம் பல்லி போலவும் பாம்பு போலவும் இருந்தது. ஆனால் அந்தப் புதை படிவமானது சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் இருந்ததால், பாம்பினங்கள் மொசாராஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கருதப் பட்டது. அதன் பிறகு அதே மலைப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாம்பின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டது.ஹாசி ஒப்பிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்புக்கும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்தன. பின்னர் மத்தியக் கிழக்கு நாடான லெபனான் தேசத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான யூபோடாபிஸ் என்ற பாம்பின் புதை படிவத்திலும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்ததால் பாம்புகள் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் படகோனியா நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான நாஜெஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பாம்பின் புதை படிவத்தில் சிறிய கால்கள் இருந்ததுடன் அந்தப் பாம்பானது தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற எலும்பு அமைப்புடன் இருந்தது. இதன் அடிப்படையில் பாம்பினங்கள் தரை வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் அடைந்து இருக்கலாம் என்ற கருத்து வலுப் பெற்றுள்ளது. பாம்பினங்களில் மூவாயிரத்தி நானூறுக்கும் அதிக இனவகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மானையே விழுங்கக் கூடிய மலைப் பாம்புகளுக்கும், மண் புழு போன்று பூந்தொட்டிகளில் காணப் படும் குருட்டுப் பாம்புகளுக்கும், சிறிய அளவிலான பின்னங்கால் எலும்புகள் இருப்பதன் அடிப்படையில், இந்தப் பாம்பினங்கள் மிகவும் தொன்மையான பாம்பினம் என்பது தெரிய வந்துள்ளது. மலைப் பாம்புகளில் பைத்தானிடே என்று அழைக்கப் படும் முட்டையிடும் மலைப் பாம்புகள் தொன்மையன இனமாகக் கருதப் படுகிறது. இதில் இருபத்தி ஆறு இனங்கள் உள்ளன. இவ்வகைப் பாம்புகள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும்,இந்தோனேசியா ,பிலிப் பைன்ஸ் மற்றும் பாப்புவா நியூ கினியா தீவுகலிலும் காணப் படுகின்றன. இதே போன்று போய்டே என்று அழைக்கப் படும் குட்டிகளை ஈனும் மலைப் பாம்புகள் சற்று பரிணாமத்தில் மேம்பட்ட இனமாகக் கருதப் படுகிறது. இவ்வாகைப் பாம்புகள் புதிய உலகம் என்று அழைக்கப் படும் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஆப்பிரிக்கா,இந்தியா, ஆகிய கண்டங்களிலும் மடகாஸ்கர் தீவு,சலமன் தீவு, பிஜி போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது. இதே போன்று ஸ்கோலிக்கோ பிடியா என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்புகளும் சிறிய அளவிலான கால் எலும்புகளைக் கொண்டிருக்கும் தொன்மையான பாம்பினம் ஆகும். இந்தப் பாம்புகள் மண் புழுக்களைப் போன்று தோற்றமளிப்பதால் புழுப் பாம்புகள் என்றும் பூந்தொட்டிகளில் காணப் படுவதால் பூந்தொட்டிப் பாம்புகள் என்றும் அழைக்கப் படுகின்றன. குருட்டுப் பாம்புகள் ஸ்கோலெக்கோ பிடியன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன.இதில் மூன்று இனவகைகள் இருக்கின்றன.டைப்லோபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுகின்றன. இதில் இருநூற்றி ஐம்பது இன வகைகள் உள்ளன. லெப்ட்டோடைப்லோப்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவிலும் காணப் படுகின்றன. அனாமாலெபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்காவில் மட்டும் காணப் படுகின்றன. இந்தப் பாம்புகள் வாழ்வின் பெரும் பகுதியை தரைக்கு அடியிலேயே கழிப்பதால் காலப் போக்கில் பார்வைத் திறனை இழந்து விட்டது. ஆனாலும் ஒளியை உணரக் கூடிய அளவுக்கு பார்வைத் திறன் உண்டு, எனவே இந்தப் பாம்புகள் குருட்டுப் பாம்புகள் என்று அழைக்கப் படுகின்றன.இதன் பிராதான உணவு எறும்பும் கறையானும் அதன் முட்டைகளுமே. குருட்டுப் பாம்புகளில் அறுநூற்றி நாற்பது இன வகைகள் கண்டறியப் பட்டுள்ளது.இந்தப் பாம்புகள் மண் புழுவைப் போன்று இருந்தாலும் இதற்கு முதுகெலும்பும், கபாலமும், தாடையும் அதில் கூரிய பற்களும் உண்டு குருட்டுப் பாம்புகள் மெலிதான எலும்புகளைக் கொண்டு இருப்பதால் இதன் புதை படிவங்கள் இல்லையென்றே கூறலாம்.எனவே இந்தப் பாம்புகள் எப்பொழுது தோன்றியது என்று அறிவதற்காக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் மற்றும் நிகோல் விடல் ஆகியோர் ,உலகெங்கும் உள்ள தொண்ணூற்றி ஆறு இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், குருட்டுப் பாம்புகள் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் மடகாஸ்கர் தீவும் ஒரே நிலப் பகுதியாக இணைந்து இண்டிகாஸ்கர் என்ற நிலப் பகுதியாக இருந்ததாகவும், அப்பொழுது அதில் குருட்டுப் பாம்புகள் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. பின்னர் மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியா பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதிய பொழுது, இந்தியாவில் இருந்த குருட்டுப் பாம்புகள் ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்குப் பரவியதாகவும் நம்பப் படுகிறது. அல்லது, குருட்டுப் பாம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்திற்கு பரவி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குருட்டுப் பாம்புகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. முக்கியமாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்ததாகவும் நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் குருட்டுப் பாம்புகள், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து இருப்பது மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார். அதாவது இந்த இரண்டு கண்டங்களும் பிரிந்த பிறகு நான்கு கோடி ஆண்டுகள் கழித்தே இந்த இரண்டு கண்டங்களில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் தோன்றி இருப்பதாகவும், எனவே தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக அட்லாண்டிக் பெருங் கடலில் ஆறு மாத காலம் கடலில் மிதந்த படி தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் தரைக்கு அடியில் வாழும் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடல் வழியாக பரவ இயலாது என்று மற்ற அறிவியலாளர்கள் கூறினாலும் கூட மரபணு ஆய்வு முடிவுகள் கடல் வெளிப பயணம் நடை பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் ஆறு மாத காலம் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் இருந்த பொழுது, அவைகள் உண்பதற்கு அந்த மிதவைத் தாவரங்களில் பூச்சிகளும் இருந்திருக்கும், என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று கரீபியன் தீவுகளில் காணப் படும் குருட்டுப் பாம்பினங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக அந்தத் தீவுகளை அடைந்து இருக்கும் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் எதிர் பாராத வண்ணம் பல தொலை தூரத் தனிமைத் தீவுகளுக்கும் குருட்டுப் பாம்புகள் சென்று புதிய இனவகைகளாகப் பரிணாம மாற்றம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. உதாரணமாக டைப்ளோலெபிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா,ஆகிய கண்டங்களிலும் கரீபியன் ,பிலிப்பைன்ஸ் சாலமன் மற்றும் பிஜி குவாம்,மற்றும் பாலவ் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன. இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு வாசிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடிசன் வைன் என்ற உயிரியல் வல்லுநர் குவாம் மற்றும் பாலவ் தீவுக்கு கிழக்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பாசா என்ற தீவிலும் ஏன்ட் தீவிலும் இரண்டு புதிய இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளைத் தற்செயலாகக் கண்டு பிடித்தனர். இவ்வளவு தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு குருட்டுப் பாம்புகள் பரவி இருக்கும் என்பதை அவர்கள் முதலில் நம்பவே இல்லை. ஒரு மரத்தின் உட்பகுதியில் இருந்த அந்தக் குருட்டுப் பாம்பு ,ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்பு இனமாக இருக்கும் என்றும் தற்செயலாக மனிதர்கள் மூலமாக அந்தத் தீவுகளுக்கு வந்திருகக் கூடும் என்றும் முதலில் நம்பினார்கள். அதன் பிறகு அந்தப் பாம்பின் செதில் அமைப்புகளை ஆய்வு செய்ததில் அந்தக் குருட்டுப் பாம்புகள் இது வரை கண்டு பிடிக்கப் படாத புதிய இன வகை என்பது தெரிய வந்தது. தற்பொழுது கரோலின் தீவுக் கூட்டத்தில் உள்ள பாசா தீவிலும் ஏன்ட் தீவிலும் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் அடோ சீட்டஸ் என்றும், அதே போன்று ஜிலாப்,உழுதி ஆகிய தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் ஹாட்மாலியெப் என்றும் புதிதாகப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதே தீவுகளில் அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனத்தைச் சேர்ந்த ஜிக்கோ என்று அழைக்கப் படும் பல்லி இனங்களும் காணப் படுகின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது. 2007 ஆம் ஆண்டு வரையில் குருட்டுப் பாம்பினத்தில் ஆக்டோ டைப்லோப்ஸ் என்ற குடும்பத்தில் நான்கு இனவகைகள் ,நியூ கினியாத் தீவு,பிஸ்மார்க் தீவுகள்,போகைன் வில்லா மற்றும் சாலமன் தீவுகளில் இருப்பது அறியப் பட்டது. இந்த நிலையில் அதே ஆக்டோ டைப் லோப்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆக்டோ டைப் லோப்ஸ் பானோரம் என்ற ஐனதாவது இனம் எதிர்பாராத வண்ணம் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள லுசான் தீவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே தீவுகளில் பிளாட்டி மாண்டிஸ் என்று அழைக்கப் படும் தவளைகளும் காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது. ஒரு தவளை கூட்டிய பஞ்சாயத்து புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது நம்பிக் கொண்டு இருக்கும் புவியியல் கருத்துக்களைப் புரட்டிப் போட்டு விட்டது மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு தவளையின் புதை படிவம். 1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் ,ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராவுஸ் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில்,ஆறரைக் கோடி முதல் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் தவளையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனாலும் சில எலும்புகளே கிடைத்ததால் அந்த எலும்புகளைக் கொண்டு முழுதாக ஒரு தவளையை உருவாக்க இயலவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வில் அறுபதுக்கும் அதிகமான எலும்புகள் கிடைத்தது. ஆனாலும் 2008 ஆண்டுதான் ஓரளவு ஒரு முழுத் தவளையைக் உருவாக்கும் அளவுக்கு எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனாலும் தலைப் பகுதி முழுதாக இருந்தது. அந்த எலும்புகளைப் பொருத்திப் பார்த்ததில் அந்தத் தவளையானது பத்து அங்குலம் நீளத்துடன் நாலு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக அதன் தலையில் கண்களுக்கு அருகில் எலும்புகள் புடைத்துக் கொண்டு கொம்பு போன்று நீண்டு இருந்தது.அதன் வாய்ப் பகுதி அளவுக்கு அதிகமாக அகன்று இருந்ததுடன் அதன் தாடையில் கூரிய பற்களும் இருந்தது.அதன் அடிவயிற்றுப் பகுதியில் ஆமைக்கு இருப்பதைப் போன்று கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.முதுகுப் பகுதியில் முள் போன்ற நீட்ச்சிகளுடன் பார்க்கப் பயங்கராமாக இருந்ததால் அந்தத் தவளை சாத்தான் தவளை என்ற பொருளைத் தரும் பிளிசிபூபோ அபிங்ணா என்று பெயர் சூட்டப் பட்டது. இது போன்ற கொம்பு உடைய தவளைகள் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப் படுகிறது. மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளையின் எலும்புகளை சி டி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் சூசன் இவான் மற்றும் மார்க் ஜோன்ஸ் ஆகியோர்,மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளை தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் கொம்புகளுடன் காணப் படும் செரட்டோபைரிடே என்று அழைக்கப் படும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தனர். தவளையினம் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் தோன்றி விட்டது. தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனாலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அண்டார்க்டிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் ஆனால் பதினோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியாவும் பிரிந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது. ஆனால் டாக்டர் சூசன் இவான் மேற்கொண்ட மரபணு ஆய்வில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளையானது தென் அமெரிக்கக் கண்டத்தின் கொம்புத் தவளைக் குடும்பத்தில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தீவாக இருந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு எப்படி சாத்தான் தவளைகள் வந்திருக்க முடியும்? என்று வல்லுனர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாகக் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் ஒரே வகையான விலங்கினங்கள் காணப் படுவதற்கு காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக மற்ற கண்டங்களையும் தீவுகளையும் அடைந்திருக்கலாம் என்று நமபப் படுகிறது. ஆனால் தென் அமெரிக்காவும் மடகாஸ்கர் தீவும் அதிகத் தொலைவில் உலகின் எதிரெதிர் பகுதியில் அமைந்து இருப்பதாலும், தவளைகளின் தோல் நீர் புகக் கூடியதாக இருப்பதாலும், கடல் வழியாக சாத்தான் தவளைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்ற விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது. இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எழுதிரோ டாக்டைல்ஸ் என்று அழைக்கப் படும் தவளையின் இன வகைகள் ,தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் கரீபியன் தீவுகள் காணப் படுவதற்கு,அந்தத் தவளையின் மூதாதைகள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்து சென்ற தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் தவளைகள் கடலில் தத்தளித்த படி கரீபியன் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று,அந்தத் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார். அத்துடன் கரீபியன் தீவுக்கு தவளைகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் கடல் பயணம் செய்த பொழுது அந்த மிதவைத் தாவரங்களில் தவளைகள் உண்பதற்கு பூச்சிகளும் குடிப்பதற்கு தூய குடி நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளைகள் குறித்து டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ,தோற்றத்தில் மடகாஸ்கர் தீவுத் தவளைகள் தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகளைப் போன்று இருந்தாலும் அவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சில சமயங்களின் வெவ்வேறு பகுதிகளில் விலங்கினங்கள் ஒரே உருவ அமைப்பில் பரிணாம வளர்ச்சி அடையும் என்று தெரிவித்து இருக்கிறார். அப்படியே அந்தத் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவகையாக இருந்தாலும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் டாக்டர் சூசம் இவான் சாத்தான் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் என்பதில் சந்தேகம் இல்லை.என்றும் தென் அமெரிக்க் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் சூசன் இவான் நம்புகிறார். ஆனால் அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் ரிச்சர்ட் லேன் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதானது கோண்டுவானாக் கண்டமானது லேட் கிரேட்டேசியஸ் காலத்தில் பிரிந்திருப்பதையே ஆதரிக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார். பேபாப் மரங்கள் மடகாஸ்கர் தீவில் மழை நீரைச் சேகரிக்கும் பாட்டில் வடிவ மரங்கள் காணப் படுகின்றன.பேபாப் மரங்கள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் அடன்சோனியா இந்த மரத்தின் உயரத்தை விட மரத்தண்டின் சுற்றளவு அதிகமாக இருப்பததுடன் கிளைகள் மரத்தின் உச்சிப் பகுதியில் மட்டும் இருப்பதால், இந்த மரம் பார்ப்பதற்கு ஒரு பாட்டில் வடிவத்தில் இருக்கிறது. பெரும்பாலும் வறண்ட சூழ் நிலையில் வளரக் கூடிய இந்த மரத்தில் கிளைகளில் உள்ள பிளவுகள் மூலம் மழை நீர் சேகரிக்கப் படுகிறது. இவ்வாறு ஒரு போபாப் மரத்தில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைக்கப் படுகிறது. வறண்ட காலத்தில் இந்த நீரை மனிதர்களும் விலங்கினங்களும் பயன் படுத்தி உயிர் வாழ பயன் படுவதால் இந்த மரம் உயிர் மரம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த இனமரங்கள் விதை மூலம் பரவுகின்றன. இந்த மரத்தின் விதைகள் தேங்காய் போன்ற நார்ப்போருளால் ஆன ஒரு பழத்திற்குள் இருக்கிறது.இந்தப் பழத்தைக் குரங்குகள் விரும்பி உண்பதால் இந்தப் பழம் குரங்குப் பழம் என்றும் அழைக்கப் படுகிறது.இந்தப் பழத்தைத் தின்ற குரங்குகள் வவ்வால்கள் மற்றும் ஆமைகளின் கழிவுகளில் இருக்கும் விதைகள் பல ஆண்டுகள் கழித்தும் முளைக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இந்த மரத்தின் பரவலுக்கு விலங்கினங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. பேபாப் என்று அழைக்கப் படும் அடன்சோனி மரத்தில் எட்டு இனவகைகள் உள்ளன.இதில் ஆறு இனவகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகிறது.அட்டன் சோனியா டிஜிடேட்டா என்று அழைக்கப் படும் இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் அரேபியா பீட பூமிப் பகுதியிலும் காணப் படுகிறது. இந்த நிலையில் அடன் சோனியா கிரிகரி என்று அழைக்கப் படும் எட்டாவது இனம் மடகாஸ்கர் தீவில் இருந்து எழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் காணப் படுகிறது. ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பேபாப் மரத்தின் பழத்தின் ஓடு மிகவும் மெலிதாக இருப்பதால் விரைவில் நீரில் ஊறி விடக் கூடியதாக இருப்பதால் மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்த படி ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு மரமாக முளைத்து இருக்கலாம் என்ற கருத்தை நிபுணர்களால் நிராகரித்து விட்டனர். மாறாக ஆஸ்திரேலியாக் கண்டத்த்தின் பூர்வீகப் பழங்குடிகளால் அடன் சோனியா கிரிகரி மரத்தின் விதைகள் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால் அபோரிஜின்ஸ் என்று அழைக்கப் படும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் அந்தக் கண்டத்துக்கு எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சென்று இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களால் கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் மரபணு ஆய்வில் ஆஸ்திரேலியாக் கண்டத்திள் காணப் படும் அடன் சோனியா கிரிகரி மரங்கள், மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பேபாப் இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பே பிரிந்திருப்பது தெரிய வந்தள்ளது. எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்கள் எப்படி ஏழாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்தது? என்ற கேள்வி விடை கூறப் படாத கேள்வியாகவே இருக்கிறது. எழாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பறவைகளால் கழிவை வெளியேற்றாமல் கடக்கவும் இயலாது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்களின் இடப் பெயர்ச்சி கடல் வழியாக சென்று இருந்தால் கூட ஆஸ்திரேலியாக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலேயே பேபாப் மரங்கள் காணப் பட வேண்டும். ஆனால் விநோதமாக பேபாப் மரங்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வட மேற்குப் பகுதியில் அதாவது பசிபிக் கடல் பகுதியில் இருகிறது. எனவே போபாப் மரத்தின் பரவல் கடல் வழியாக நடை பெற்று இருக்க வில்லை என்பதும் உறுதியாகிறதுஅத்துடன் போபாப் மரத்தின் பரவல் ஆசியக் கண்டம் வழியாக நடை பெற்று இருப்பதையே புலப் படுத்துகிறது. ஆனால் ஆசியக் கண்டத்தில் போபாப் பரத்தின் இனவகைகளோ அல்லது புதை படிவங்களோ காணப் படவில்லை. இவ்வாறு தொடர்ச்சியற்ற இனப் பரவல் மூலம் இடைப் பட்ட நிலப் பகுதிகள் கடல் மட்ட உயர்வையும் மூழ்கிய நிலத்தையும் புலப் படுத்துகிறது. உதாரணமாக இந்தோனேசியக் கடல் பகுதியில் சாகுல் என்று அழைக்கப் படும் கடலடி நிலம் காணப் படுகிறது.இதே போன்று கற்கால மனிதர்களும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதன் மூலமாகவும் ஆசியக் கண்டதுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையே புலப் படுத்துகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் கடல் பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் எதுவும் அறியப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. குருட்டு மீன்கள் இதே போன்று மடகாஸ்கர் தீவு மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் உள்ள குகைகளில் காணப் படும் குருட்டு மீன்கள் ஒரே பொது மூததையில் இருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருப்பதும் லூசியான பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரசன்னா சக்கரவர்த்தி குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப் படையில் அவர் எழாயிரம் கிலோ மீட்டர் அந்தக் குருட்டு மீன்கள் கடல் வழியாக இந்த இரண்டு நிலப் பகுதிகளுக்கும் பரவி இருக்க முடியாது என்றும் நிலத் தொடர்பு வழியாகவே குருட்டு மீன்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்று இருக்க வேண்டும் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். மடகாஸ்கர் தீவுக் குகைகளிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குகைகளிலும் காணப் படும் குருட்டு மீன்கள் பன்னெடுங் காலமாக சூரிய ஒளி புகாத இருட்டான குகைச் சூழலில் வாழ்ந்ததால் காலப் போக்கில் பார்க்கும் தன்மையை இழந்து விட்டு இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் காணாப் பட்ட குருட்டு மீன்கள் கோபி மீனினத்தைச் சேர்ந்தது என்பதுடன் சீக்கோ கோபியஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பிலிப் பைன்ஸ் தீவுக் குகைகளிலும்,ஆக்சி லியோட்ரிஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பாப்புவா நியூ கினியா தீவுக் குகைகளிலும் காணப் படுகிறது. எனவே முன்னொரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாஸ்கர் தீவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையில் ஆசியக் கண்டத்தின் வழியாக நிலத் தொடர்பு இருந்திருப்பதற்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. கிரே பிஷ் மேலை நாடுகளில் கிரே பிஷ்கள் சுவையான உணவாக பரிமாறப் படுகிறது.பல மில்லியன் டாலர் வியாபாரம் கிரே பிஷ்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. கிரே பிஷ்கள் என்பது உண்மையில் கடலில் காணப் படும் லாப்ஸ்டர்களே. கடலில் வாழ்ந்த நண்டுகள் ஆறு குளம் ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் வாழ்வதற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்று நன்னீர் உயிரினங்களாக மாறியது. அதைப் போன்றே கடலில் வாழ்ந்த லாப்ஸ்டர்களும் நன்னீர் நிலைகளில் குடியேறி நன்னீர் உயிரினங்களாக மாறியது.நன்னீரில் வாழும் லாப்ஸ்டர்கள் கிரே பிஷ் என்று அழைக்கப் படுகின்றன.நன்னீர் நண்டுகளைப் போலவே கிரே பிஷ் களாலும் கடல் நீரில் உயிர் வாழ இயலாது. கடல் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர்கள் கடலில் வசிப்பதால் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றன. ஆனால் கிரே பிஷ்கள் கண்டங்களிலும் கண்டங்களை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் மட்டுமே காணப் படுகின்றன.இதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கிரே பிஷ்கள் இடம் பெயர்ந்து இருப்பது புலனாகிறது. இன்று கிரே பிஷ்கள் ஆப்பிரிக்கா மற்றும் பனிக் கண்டமான அண்டார்க்டிக்கா தவிர மற்ற ஐந்து கண்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகளில் காணப் படுகின்றன.அத்துடன் ஆபிரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள மடகாஸ்கர் தீவு,ஆஸ்திரேலியா கண்டத்துக்கு அருகில் அமைந்து இருக்கும் டாஸ்மேனியா , நியூ கினியா, நியூ சிலாந்து போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது. கிரே பிஷ்களின் உறுப்புகளில் அமைப்புப் படி கிரே பிஷ்கள் அஷ்டாகாய்டியே மற்றும் பாரா அஷ்டாகாய்டியே இரண்டு பெரும் குடும்பங்களாகப் பிரிக்கப் படுகின்றன.அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் வட கோளப்பகுதியிலும், பாரா அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் தென் கோளப்பகுதியிலும் காணப் படுகின்றன. கிரே பிஷ்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஐந்து ஜோடி நீந்தும் கால்கள் இருக்கும். ஆனால் தென் கோளப் பகுதிகளில் காணப் படும் பாரா அஷ்டாகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்களில் முன் இரண்டு நீந்தும் கால்கள் இருக்காது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பர் சர் தாமஸ் ஹக்ஸ்லி ,நன்னீரில் வாழக் கூடிய கிரே பிஷ்கள் எப்படி உலகம் முழுவதும் பரவியது? என்று வினா எழுப்பினார். அந்தக் கேள்விக்கு விடை காண இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் கைத் கிராண்டல் தலைமயிலான குழுவினர் மரபணு ஆய்வின் அடிப்படையில், எல்லா கிரே பிஷ்களும் ஒரே பொது மூதாதையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்று இருக்கின்றன என்று அறிவித்து உள்ளனர். அத்துடன் கிரே பிஷ்களும் லாப்ஸ்டர்களும் சகோதர இனங்கள் என்றும் தெரிவித்து உள்ளனர். பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்காக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும்,ஆஸ் திரேலியாக் கண்டத்திலும்,ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் இருக்கும் நியூ சிலாந்து,நியூ கினியா போன்ற தீவுகளிலும், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டு வாணா என்ற கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்ததாக நம்பப் படுகிறது.எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் கிரே பிஷ்கள் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவானது எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுவதால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு, ஓரளவு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து முதலில் ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் விநோதமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிரே பிஷ்கள் காணப் படவில்லை. இறுதியாக தென் அமெரிக்காக் கண்டமும் ஆஸ்திரேலியாக் கண்டமும் மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்டார்க்டிக் கண்டம் வழியாக நிலத் தொடர்பு கொண்டு இருந்ததாக நம்பப் படுவதால், இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் கிரே பிஷ்கள் நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் மைக்கேல் ஜோனதன் கார்ல்சன் மற்றும் டாக்டர்,கைத் கிராண்டல் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் நெருங்கிய சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வு முடிவானது கோண்டுவானாக் கண்டப் பிரிவுக் கருத்துக்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். உண்மையில் புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று தென்கோள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து இருந்தால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். இதற்கு முற்றிலும் மாறாக, இந்த இரண்டு நிலப் பகுதிகளிலும் காணப் படும் கிரே பிஷ்கள், மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ் களை விட, நெருங்கிய சொந்தமாக இருப்பதன் அடிப்படையில் ,தென் கோளத்தின் நிலப் பகுதிகளில், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ரிப்சாலிஸ் புதிர், பொறி கதவுச் சிலந்திகள் ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் கள்ளித் தாவரமானது எப்படி அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு பரவியது என்பது, அறிவியல் உலகில் இன்று வரை விடுவிக்கப் படாத புதிராக இருக்கிறது. கள்ளித் தாவரத்தின் தாயகம் அமெரிக்கா. கள்ளித் தாவரக் குடும்பத்தின் இன வகைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகிறது அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் வட பகுதியில் இருக்கும் கனடாவின் தென் பகுதி வரை பரவி இருக்கிறது. கள்ளித் தாவரமானது, பூக்களின் மகரந்தங்கள் மூலம், காற்றின் மூலமாகப் பரவினாலும்கூட, பெரும் பாலும் பூச்சிகள்,விலங்குகள் மற்றும் பறவைகள் மூலமாகவே பரவுகிறது. அதன் காரணமாகவே கள்ளியின் இனவகைகளானது, அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே பரவி இருக்கிறது. ஆனால் கள்ளிக் குடும்பத்தில், மரங்களின் மேல் படர்ந்து வாழும், ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் ,ஒரு இனம் மட்டும், விநோதமாக,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும், இலங்கைத் தீவிலும் காணப் படுகிறது. எப்படி இந்தக் கள்ளித் தாவரமானது,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும், மடகாஸ்கர் தீவுக்கும், இலங்கைத் தீவுக்கும், பரவியது? என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. பொருந்தாமல் போன கோண்டுவாணா விளக்கம். இது போன்று ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் பகுதிக் கண்டங்களில் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்கள்,எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அதன் பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில், மரபணு வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில்,கள்ளிக் குடும்பமானது,மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் கள்ளிக் குடும்பத் தாவரங்கள் காணப் படுவதற்கு கோண்டுவானா விளக்கம் பொருந்தாது. முக்கியமாக கள்ளித் தாவரத்தின் புதை படிவங்களும் ஐந்து கோடி ஆண்டுகளக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,காணப் படவில்லை,ஏனென்றால் கள்ளிக் குடும்பமானது புவியியல் காலகட்டத்தில்,மிகவும் சமீபத்தில் தோன்றிய தாவரமாகும். இந்த நிலையில்,நீண்ட தொலைவு பறந்து செல்லும்,பறவைகள் மூலம், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ரிப்சாலிஸ் கள்ளியானது,ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப பரவிய பிறகு,மற்ற பறவைகள் மூலம்,மடகாஸ்கர் மற்றும் இலங்கைத் தீவுகளுக்குப் பரவி இருக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,அந்தக் கண்டத்தில் எச்சமிட்டதால், ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படுகிறது. ஆனால் அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்கும் வரை எச்சமிடாமல்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வந்து எச்சமிட்டது என்று கூறப் படும் விளக்கமானது இயற்கைக்கு முரணான விளக்கம். இதே போன்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தால்,கப்பல்களின் சரக்குகள் மூலம் , ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படும் ரிப்சாலிஸ் கள்ளிகளானது வெவ்வேறு இனவகைகளைச் சேர்ந்தது. இது போன்று ஒரு இனத்தில் இருந்து புதிய இனவகைகள் தோன்ற லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவே ஐரோப்பியர்களின் கடல் பயணங்கள் மூலமாக, ரிப்சாலிஸ் கள்ளிகள், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படும் விளக்கமும் இயற்கைக்கு முரணான விளக்கம். பொறி கதவுச் சிலந்திகள் எப்படிப் பெருங் கடலைக் கடந்தன? ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. ''ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது. அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்து உண்கிறது. பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது. இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும். குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேயே, புதிதாக ஒரு குழியைப் பொறி கதவுடன் உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் அந்தக் குழியின் சுவரைப் பட்டிழை மூலம் பின்னி சொகுசு பண்ணிக் கொண்டு ,தனது பூச்சி பிடிக்கும் வாழ்க்கையைத் தொடங்குகிறது. அதாவது,இந்தப் பூச்சியின் வாழ்க்கை முழுவதும், ஒரு சில அடி தூர எல்லைக்கு உள்ளேயே முடிந்து விடுகிறது. இந்த நிலையில்,கங்காரு தீவில் பொறி கதவு சிலந்தியின்,இன வகைகளானது, ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுகிறது. குறிப்பாக,பொறி கதவு சிலந்திகளின் முப்பத்தி இரண்டு வகைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது. எனவே,பொறி கதவு சிலந்திகள் பூச்சிகளானது,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முதலில் கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. அதாவது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் துருவப் பகுதியில்,கோண்டுவாணா என்ற கண்டம் இருந்ததாகவும்,அப்பொழுது அந்தக் கோண்டுவாணாக் கண்டத்தில்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளானது, பரவி வாழ்ந்து கொண்டு இருந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தக் அந்தக் கோண்டுவாணாக் கண்டமானது, பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்ததால்,பிரிந்து நகர்ந்த கண்டங்களுடன்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளும்,பயணம் செய்து இருக்கிறது, என்று நம்பப் பட்டது. இந்த நிலையில்,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் பேராசிரியரான ஆண்ட்ரூ ஆஸ்டின் மற்றும் டாக்டரேட் மாணவியான,சோபி ஹாரிசன் ஆகியோர், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியி இனத்தில் இருந்து, எப்பொழுது பிரிந்தது, என்று அறிவதற்காக அந்த சிலந்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியின் இன வகையில் இருந்து,ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளில், பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகள் காணப் படுவதற்கு,கோண்டுவாணா பிரிவு காரணம் அல்ல என்ற முடிவுக்கு , ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். மாறாக, ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,கடல் பகுதிக்குத் தற்செயலாக மிதந்து வந்த,நிலப் பகுதியுடன் வந்த மிதக்கும் தாவரங்கள் மூலம், கங்காரு தீவின் பொறி கதவுச் சிலந்திகளின் முன்னோர்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் இருந்து, பத்தாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து,கங்காரு தீவில் கரையொதுங்கி இருக்கின்றன, என்று சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார். மேலும், இது வினோதமாக இருந்தாலும்,இவ்வாறு சிலந்திகள் கடல் பகுதியைக் கடப்பது முதல் முறை அல்ல என்றும்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து முன்னூற்றி நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கொமரோஸ் தீவில் காணப் படுவதற்கும்,சிலந்திகளின் கடல் பயணமே காரணம் என்று, சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார். இது போன்ற சிலந்திகளின் கடல் பயணங்கள் ஒன்றும் புதிதல்ல என்றும், அமரோபயாய்டெஸ் என்று அழைக்கப் படும் சிலந்தியின் இனவகைகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பின்னர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும், தாவரங்கள் மற்றும் மரங்கள் மூலம் கடல் பயணங்கள் மூலம்,இடம் பெயர்ந்து இருப்பதற்கு,ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர், என்றும் சோபி ஹாரிசன் மேற்கோள் காட்டுகிறார். இந்த நிலையில்,நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்தததால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில்,இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,விலங்கினங்கள்,பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும், இடம் பெயர்ந்து இருக்கின்றன,என்றுஏற்கனவே தெரிவித்து இருந்தேன். 00000000000 பறக்க இயலாத பறவைகள் நியூசிலாந்து பறக்க இயலாத பறவைகள் கடலைக் கடந்தது எப்படி ? தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் ஈமுக் கோழிகளால் பறக்க இயலாது. அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிவி பறவையாலும் பறக்க இயலாது. இந்த நிலையில் எப்படி அந்தத் தீவுகளுக்கு இந்தப் பறவைகள் சென்றன? என்பது இன்று வரை விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது. பூமியின் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் டினாமஸ் என்று அழைக்கப் படும் ஓரளவு பறக்கக் கூடிய குயில் போன்ற பறவையும் மற்றும் ,ரியா என்று அழைக்கப் படும் நெருப்புக் கோழி போன்ற பறக்க இயலாத பறவை,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் நெருப்புக் கோழி என்று அழைக்கப் படும் ஆஸ்ட்ரிச் பறவைகளும்,தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் ஈமு கோழிகளும்,பாப்புவா நியூ கினியா தீவிலும், ஆஸ்திரேலியாவின் வட பகுதியிலும் காணப் படும் காசோவரி என்று அழைக்கப் படும் வான் கோழி போன்ற பறவைகளும்,நியூசிலாந்து தீவில் காணப் படும் கிவி என்று அழைக்கப் படும் பறவைகளும் பழந்தாடைப் பறவைகள் என்று அழைக்கப் படுகின்றன. இந்தப் பறவைகளின் தாடையானது மற்ற பரக்கக் கூடிய பறவைகளைப் போல் அல்லாது டைனோசர் மற்றும் ஊர்வன வகை விலங்கினத்தின் தாடையைப் போன்று தொன்மையான அமைப்புடன் இருப்பதால் இவ்வாறு அழைக்கப் படுகின்றன. பழந்தாடைப் பறவைகளில் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிவி பறவையின் மார்பு எலும்பு மட்டும் மற்ற பறக்கும் பறவைகளைப் போன்று கப்பலின் அடிபகுதி போன்று குவிந்து இருப்பதால் அதில் இறக்கைகளை இயக்கம் தசைகள் வலுவாகப் பொருத்தப் பட்டு பறப்பதற்கு எதுவாக இருக்கிறது. ஆனால் மற்ற பழந்தாடைப் பறவைகளின் மார்பு எலும்பானது தட்டையாக இருப்பதால் அதில் இறக்கித் தசைகள் வலுவின்றி பொருத்தப் பட்டு பறப்பதற்கு பயன் படாமல் இருக்கிறது. எனவே இந்தப் பறவைகள் ராட்டைட் என்றும் அழைக்கப் படுகிறது.ராப்ட் என்ற லத்தீன் மொழிச் சொல்லிக்கு தட்டை என்று பொருள்.அதன் அடிப்படையில் இந்தப் பறவைகள் தட்டை நெஞ்சுப் பறவைகள் என்று அழைக்கப் படுகிறது. இதன் அடிப்படையில் பறக்க இயலாத பரவிகள் ஒரு தொகுப்பிலும்,ஒரளவு பறக்கக் கூடிய டினாமஸ் பறவையானது ராட்டைட் பரவி இனத்திற்கு நெருங்கிய சொந்தம் என்றும் வகைப் படுத்தப் பட்டது. தற்பொழுது ராட்டைட் பறவைகள் தென் கோளப் பகுதியில் மட்டும் காணப் பட்டாலும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ராட்டைட் பறவைகள் வட பகுதிக் கண்டங்களிலும் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பேலியோட்டிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. பறக்கக் கூடிய தன்மையுடன் இருந்த அந்தப் பறவையானது தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் பறவையின் மூதாதை என்று வகை படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்ட்ரிச் பறவைகள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்தே வந்திருப்பது புலனாகிறது. இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லித்தோர்னிட்ஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பறவையானது தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் பறவை இனத்தைச் சேர்ந்தது என்று வகை படுத்தப் பட்டுள்ளது. எனவே டினாமஸ் பறவையும் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதும் புலனாகிறது. எனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து போன்ற தீவுகளுக்கும் ராட்டைட் பறவைகள் வட பகுதிக் கண்டங்களில் இருந்தே தரை வழித் தொடர்பு வழியாகவே சென்று இருக்கின்றன. உதாரணமாக ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் கஸ்கஸ் என்று அழைக்கப் படும் கங்காரு இனத்தைச் சேர்ந்த வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கினம்,இந்தோனேசியத் தேவுக் கூட்டத்தில் உள்ள சுலாவெசித் தீவிலும் காணப் படுகிறது. அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட பகுதியில் காணப் படும் காசோவரிப் பறவைகள்,ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு அருகில் உள்ள பாப்புவா நியூ கினியா தீவிலும் காணப் படுகிறது. எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்களும் பறக்க இயலாத பரவிகளும் இடம் பெயர்ந்து இருகின்றன. இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,மடகாஸ்கர் தீவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த , பத்து அடி உயரத்துடனும்,இருநூற்றி எழுபத்தி ஐந்து கிலோ எடையுடனும் வாழ்ந்த யானைப் பறவை என்று அழைக்கப் படும் ராட்டைட் பறவையின் புதை படிவங்களும் முட்டைகளும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. யானைப் பறவையின் முட்டையானது கோழி முட்டையைப் போன்று நூறு மடங்கு பெரியது.அதில் நூறு ஆம்லேட்டுகள் தயாரிக்க இயலும்.அதன் கொள்ளளவு ஏழு லிட்டர்ருக்கும் அதிகம். இதே போன்று நியூ சிலாந்து தீவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த ஆறு அடி உயரமும் முப்பது கிலோ எடையும் உள்ள மோவா என்ற பறவையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பறவைகளைக் கண்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வின், இந்தப் பறவைகள் இறக்கைகளைப் பயன் படுத்தாமல் விட்டதால், காலப் போக்கில் பறக்கும் தன்மையை இழந்திருக்கின்றன, என்று கருதினார். அத்துடன் இந்தப் பறவைகள் ஒன்றுடன் ஒன்று இனத் தொடர்பு உடையது என்றும் கருதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இந்தப் பறவைகள் தனித் தனிப் பறவை குடும்பங்களைச் சேர்ந்தது என்றே நம்பப் பட்டது. 1960 ஆம் ஆண்டு ஒரே வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு ,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இருந்த பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கூறப் பட்ட விளக்கம் அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதன் அடிப்படையில் ராட்டைட் பறவைகள் தென் கோளப் பகுதிக் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்களும் தீவுகளும் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற கண்டமாக இருந்த பொழுது ,அந்தக் கண்டத்தில் பறக்க இயலாத ராட்டைட் பறவைகளின் மூதாதைகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்த பொழுது ,அந்தக் கண்டத்துடன் பிரிந்து சென்ற மூதாதை ராட்டைட் பறவைகள் காலப் போக்கில் ரியா பறவையாக பரிணாம மாற்றம் அடைந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்த பொழுது,அந்தக் கண்டத்துடன் நகர்ந்து சென்ற பறவைகள் ஆஸ்ட்ரிச் பறவைகளாகவும்,அதே போன்று மடகாஸ்கர் தீவு பிரிந்து சென்ற பொழுது அந்தத் தீவுடன் சென்ற பறவைகள் யானைப்பறவைகளாகவும்,ஆஸ்திரேலியாக் கண்டம் பிரிந்து சென்ற பொழுது ,அந்தக் கண்டத்துடன் பிரிந்து சென்ற பறவைகள் ஈமுக் கோழிகளாகவும்,காசோவரிகளாகவும்,அதே போன்று நியூசிலாந்து தீவு பிரிந்து சென்ற பொழுது அந்தத் தீவுடன் சென்ற பறவைகள் மோவா பறவைகளாகவும் ,கிவி பறவை களாகவும் பரிணாம மாற்றம் அடைந்ததாக,அமெரிக்க நாட்டின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்,ஜோயல் கிராகிராப்ட் 1974 ஆம் ஆண்டு ஒரு விளக்கத்தைக் கூறினார். அவரின் விளக்கம் சரியா என்று அறிவதற்காக ராட்டைட் பறவைகளின் மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு ஒப்பாய்வு செய்யப் பட்டது. 1990 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் மேற்கொண்ட ஆய்வில் ராட்டைட் பறவைகள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக டைனோசர்கள் அழிந்த பிறகே பரிணாம வளர்ச்சியில் தோன்றி இருப்பதாக அறிவித்தார். ஆனால் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கா,மடகாஸ்கர்,நியூசிலாந்து போன்ற நிலப் பகுதிகள் பிரிந்து விட்டதாக நம்பப் படுகிறது. அந்தக் காலத்தில் ஆப்பிரிக்காவிலும் மடகாஸ்கர் தீவிலும் டைனோசர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே அந்தக் காலத்தில் ராட்டைட் பறவைகள் தோன்றி இருக்க சாத்தியம் இல்லை. டைனோசர்கள் பூமியில் இருந்த வரை மற்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் மரங்களிலும் மண்ணுக்கு அடியில் வளைகளிம் வாழ்ந்தன.அதே போன்று பறவைகளும் மரங்களிலும் நீர் நிலைகளிலும் வாழ்ந்தன. டைனோசர்கள் அழிந்த பிறகு காலியாக விடப் பட்ட புல் வெளியை பாலூட்டிகள் ஆக்கிரமித்தான.அதன் விளைவாக டைனோசர்கள் அழிந்த ஒரு கோடி ஆண்டுகளில் அதாவது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி விலங்கினத்தில் பல இனவகைகள் உருவாகிப் பல்கிப் பெருகின. அதற்கும் முன்பு பறவைகளும் சமவெளி வாழ்க்கையை மேற்கொண்டதில் கண்டதையும் பொறுக்கித் தின்னதில்,ராட்டைட் பறவைகள் பருத்து பறக்க இயலாத பறவைகளாகி விட்டதாக டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் தெரிவிக்கிறார். இது வரை கண்டு பிடிக்கப் பட்ட தொன்மையான ராட்டைட் பறவையின் புதை படிவம், வட பகுதிக் கண்டமான, ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான பறக்கக் கூடிய பேலியோடிட்ஸ் புதை படிவம் அதே போன்று மரபணு சோதனையில் ஓரளவு பறக்கக் கூடிய டினாமஸ் பறவையானது ,ஆஸ்ட்ரிச் பறவையைக் காட்டிலும் மற்ற ராட்டைட் பறவைகளுடன் நெருங்கிய சொந்தமாக இருப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் டினாமஸ் பறவையானது தற்பொழுது ராட்டைட் பறவை இனமாகவும் ஆஸ்ட்ரிச் பறவையானது ராட்டைட் பறவையின் நெருங்கிய சொந்தமாகவும் வகை படுத்தப் பட்டுள்ளது. எனவே ஏற்கனவே பறக்கும் தன்மையை இழந்த ஒரு பறவை இனத்தில் இருந்து மறுபடியும் ஒரு பறக்கக் கூடிய பறவை தோன்றி இருக்க இயலாது. எனவே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பறக்கக் கூடிய மூதாதை ராட்டைட் பறவைகள் வெவ்வேறு கண்டங்களுக்குப் பரந்து சென்ற பிறகு அந்த அந்தக் கண்டங்களிலும் தீவுகளிலும் இறங்கி,வெவ்வேறு இனவகைகளாக உருவாகி விட்டதாக நம்பப் படுகிறது. அதில் தென் அமெரிக்கக் கண்டத்துக்கு பரந்து சென்ற மூதாதை ராட்டைட் பறவை இனத்தில் ஒரு பிரிவு பறக்கும் தன்மையை இழந்து ரியா பறவையாக உருவாகி விட்டதாகவும் இன்னொரு பிரிவு பறக்கும் தன்மையை இழக்காமல் டினாமஸ் பறவையாக உருவாகி விட்டதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கத்தின் படி ராட்டைட் பறவை இனத்தில் பல முறை பறக்க இயலாத தன்மை பரிணாமத்தில் தோன்றி இருப்பதாகவும் அதனால் ரியா,ஆஸ்ட்ரிச்,யானைப் பறவை,ஈமு,கிவி,பறவைகள் தோன்றி யதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு அருங் காட்சியகத்தில் யானைப் பறவையின் எலும்புகள் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் தற்பொழுது மரபணு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக அதில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு மற்ற ராட்டைட் பறவைகளின் மரபணுவுடன் ஒப்பாய்வு செய்தில்,யானைப் பறவையானது கிவி பறவைக்கு நெருங்கிய சொந்தமாக இருகிறது என்று,ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தொல் மரபணு ஆய்வகத்தைச் சேர்ந்த,டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் கிரண் மிட்செல் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் இந்த இரண்டு பறவைகளும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மூததையில் இருந்து பிரிந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவும் நியூ சிலாந்து தீவும் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதால் ,கிவி பறவையின் மூதாதை மடகாஸ்கர் தீவில் இருந்து பதினோராயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நியூ சிலாந்து தீவுக்குப் பரந்து வந்திருக்க வேண்டும், அல்லது யானைப் பறவையின் மூதாதையானது நியூ சிலாந்து தீவில் இருந்து மடகாஸ்கர் தீவுக்குப் பறந்து வந்திருக்க வேண்டும் என்றும் கிறேன் மிட்செல் தெரிவித்து இருக்கிறார். கிரெனின் ஆய்வு முடிவு பற்றி டாக்டர் கிராகிராப்ட்டிடம் கருத்து கேட்கப் பட்டதற்கு அவர்,போதுமான அளவுக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த முடிவுடன் உடன் படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இதே போன்று ராட்டைட் பறவைகளின் மரபணு ஆய்வில் ஈடு பட்ட டாக்டர்.ஹேடார்ட் அவர்களும்’’இது ஒரு நல்ல கருத்து ஆனால் பெருமளவு யூகம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இவர்கள் இருவருமே இன்னும் ஆதாரங்கள் திரட்டாப் பட வேண்டும் என்றும் ஆனால் ராட்டைட் பறவைகள் பற்றிய மர்மம நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். 00000000000 இதே போன்று கிரீன்லாந்து தீவை ஒட்டி அமையானது இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் காலத்தில் 'சாம்சோ சாரஸ்' என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதே போன்று டைனோசர்கள் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த பிலிசியோசாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புத் புதை படிவங்களும் ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் வாழ் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். எப்படி இந்த ஆசிய வகை நன்னீர் ஆமை ஆர்க்டிக் கடல் பகுதியைக் கடந்து ஆக்சல் ஹைபெர்க் தீவை வந்தடைந்து இருக்கும் என்று டாக்டர் ஜான் டார்டுனோ வியப்பு தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அந்த புதை படிவமானது பஸால்ட் என்று அழைக்கப் படும் கடல் தள பாறை இருக்கும் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது அதன் அடிப்படையில் அவர் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை சீற்றங்கள் அதிகமாக இருந்து இருக்கும் அப்பொழுது அதிக வெப்பத்தில் பனிப் படலங்கள் உருகி ஆர்க்டிக் கடலின் கலந்து இருக்கும்.ஆனால் அந்த நன்னீரானது உப்பு நீரில் கலக்காமல் மேல் பகுதியில் இருந்து இருக்கும் அதன் வழியாக ஆசிய வகை நன்னீர் ஆமையானது ஒரு தீவில் இருந்து அடுத்த தீவை அடைட்ன்ஹு இருக்கும் இவ்வாறு பல தீவுகளை கடந்து கடைசியாக ஆக்சல் ஹைபெர்க் தீவை அடைந்து இருக்கும் என்று கொஞ்சம் அசாதாரணமான விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருக்கிறார். அனால் டைனோசர்கள் காலத்தில் அக்கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. எனவே கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தபொழுது கடலின் பரப்பளவு குறைவாக இருந்தபொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்த காலத்தில் விலங்கினங்களு ஆர்க்டிக் பகுதியில் இருந்து அதிக வெப்ப நிலையில் சதுப்பு நில காட்டில் வசித்து இருப்பதுடன் அதன் வழியாக இடப் பெயர்ச்சியும் செய்து இருக்கின்றன. இந்த நிலையில் ஹைபெர்க் தீவில் டஜன் கணக்கில் மரங்களின் அடித்த தண்டுகள் மண்ணில் பாதி அளவு புதைந்தடிக நிலையில் இருப்பதை டாக்டர் ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்த மரங்களானது திடீரென்று ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்ட நிலையில் இருந்தது.நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்கள் என்றாலும் சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மை போன்று புதிதாக இருந்தது.அந்த மறக்க கிளைகளை சிலவற்றை எரித்து தேநீர் தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் அருந்தினர்.அவ்வாறு எரிக்கக் கூடிய நிலையிலேயே அந்த மரங்கள் இருந்தன. ஆக ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட முதலை மற்றும் ஆமைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலமாகவும் அந்த தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு சதுப்பு நிலா காடுகள் இருந்து இருப்பது தெளிவாகிறது. இதே போன்று கிரீன்லாந்து தீவிலும் பணிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கிரீன்லாந்து தீவானது இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு பனியால் மூடப் பட்டுள்ளது.இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்து தீவின் பனிப் படலத்தில் ஒரு கிலோ மீட்ட அளவுக்கு துளைத்து ஆய்வு செய்தது.அதாவது பனிப் படலங்களுக்கு அடியில் ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளை புதைத்து வைக்க ஒரு திட்டத்தை தீட்டியது.அப்பொழுது எடுக்கப் பட்டு ஆய்வகத்தில் வைக்கப் பட்டு இருந்த பனி குழாய்களை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் பதினைந்து அடி அளவுக்கு தாவரங்களின் இலைகள், கொடிகள் போன்ற பாகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதனை ஆய்வு செய்த வெர்மாண்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரீவ் கிறிஸ்து கிரீன்லாந்து தீவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று கிரீன்லாந்து தீவில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் எக்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்காவின் கடலோர பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த நெதர் லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆப்பி செலூசிஸ் அதில் பல வகையான மரங்கள் தாவரங்கள் இருப்பதுடன் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதை கண்டு வியப்பு தெரிவித்து இருக்கிறார். பனி மிக விரைவில் பனை மரத்தை கருக்கி விடும் எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்துக்கு துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்டு கடல் தரைக்கு அடியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த பொழுதும் அதில் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தற்பொழுது பனியால் மூடப் பட்டு இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தின் கடலோர பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதில் பனைக் காடுகள் இருந்திருப்பதாகவும் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதை போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததாகவும் அதனை ஆய்வு செய்த கோதி பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோர்க் பெரோஸ் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு கொதிக்க கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளிலேயே அதிக அளவு வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரெகப் பகுதியில் இன்னும் அதிக அளவில் வெப்பம் நிலை இருக்க வேண்டுமே என்றும் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் யோசித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், லீட்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் சீனாவின் வுகாண் மற்றும் ஜெர்மனியின் நுர்ன்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை உயிரினஙகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகைப் பகுதியில் வெப்ப நிலையானது மிகவும் கொடுமையாக இருந்ததாகவும் அதாவது ஐம்பது முதல் அறுபது டிகிரி வரை இருந்ததாகவும் அதேபோன்று கடல் பரப்பின் வெப்ப நிலையானது நாற்பது டிகிரி வரை றிந்ததாகவும் அதனால் பூமத்திய ரேகைப் பகுதியில் விலங்கினங்கள் வாழாத பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியை ''இறந்த பகுதி'' என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.இந்த பகுதியில் சிலவகை சிறிய வகி புள் பூண்டு புதர் செடிகலே வளர்ந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் துருவப் பகுதிகளானது தாவர மற்றும் விலங்கினங்களுக்கு தஞ்சமடையும் பகுதிகளாக இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வாய் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வலீத் தொடர்பு இருந்து இருப்பதும் அதன் வழியாக விலங்கினங்களின் இடப பெயர்ச்சி நடை பெற்று இருப்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது. கடல் மட்டமானது பல்லாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலையுடன் சதுப்பு நில காடுகளும் அதில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் உடல் வெப்பத்தை பாது காக்கக் கூடிய தகவமைப்பு இல்லாத தவளை மற்றும் முதலை பாம்பு போன்ற ஊர்வன வகை விலங்கினங்களும் டைனோசர் போன்ற விலங்கினங்களும் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் பூமியெங்கும் சதுப்பு நில காடுகளே இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்பொழுது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களுக்கு சரியான விளக்கதைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கின்றனர்.உதாரணமாக வட துருவப் பகுதியில் அமையானது இருக்கும் கிரீன்லாந்து தீவில் இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவானது அத்தியாகி வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் விளக்கம் கூறுகிறார்கள். இதே போன்று தற்பொழுது மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய அட்ச ரேகைப் பகுதியில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல் மரகே காடுகள் காணப் படுவதற்கும் அதில் சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்கும் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது தென் பகுதியில் இருந்த பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும் அதன் பிறகு வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது தற்பொழுது இருக்கும் கீதா வெப்ப மண்டலப் பகுதிக்குள் வந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் இந்த விளக்கத்தின் படி ஆர்க்டிக் பகுதிக்குள் அமையானது இருக்கும் நிலப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது இருபது கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.ஆனால் இதற்கு மாறாக ஆர்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 0000000 கிரீன்லாந்து தீவை ஒட்டி அமையானது இருக்கும் எல்லிஸ்மெர் தீவில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவகே கூடிய அதி வெப்ப நிலையில் சூழலில் வாழக் கூடிய, சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய அலிகேட்டர் முதலை,கலாபாகஸ் தீவில் காணப் படுவதை போன்ற ராட்சத ஆமைகள் ,காண்டா மிருகம் போன்ற பிராண்டோ தீரி ,நீர் யானை போன்ற கோரி போடான்,பறக்கும் லீமர் வகை குரங்குகள்,மலைப் பாம்பு போன்ற பாம்புகள்,பன்றியின் இனவகையை சேர்ந்த டபீர் ஆகிய விலங்குகளின் புதை படிவங்களை கண்டு பிடிக்கப் பட்டது.அத்துடன் இரண்டு இணவகை குரங்குகள் மற்றும் ஆறடி உயரமுள்ள தாவர உண்ணி ராட்சத பறவையின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் கொலராடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜேலின் எபர்லி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியானது சதுப்பு நிலக் காடாக இருந்ததாக விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.மேலும் ராட்சத ஆமைகள் போன்ற விலங்குகள் எப்படி இந்த பனித் தீவில் வாழ்ந்தது என்று தனது வியப்பையும் தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் கடந்த ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லிஸ்மெர் தீவானது கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி,கடுங் குளிர் நிலவக் கூடிய ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு உள்ளேயே இருக்கிறது.ஆண்டில் நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் அதே போன்று ஆண்டில் நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும் நீடிக்கிறது. தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து இருக்க இயலாது எனவே எல்லிஸ்மெர் தீவில் காடுகளோ அதில் விலக்கினங்களோ வாழ்ந்து இருக்க இயலாது.இந்த நிலையில் எல்லிஸ்மெர் தீவில் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத ஒட்டகத்தின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.குறிப்பாக அந்த ஒட்டகமானது தற்பொழுது காணப் படும் ஒட்டகத்தை விட முப்பது சதவீதம் பெரிய அளவில் இருந்ததாக அதன் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் எல்லிஸ்மெர் தீவை ஒட்டி அமைந்து இருக்கக் கூடிய ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் பல மரங்களின் அடிப் பகுதிகள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.அதன் அடிப்படையில் அந்த இடமானது முன்பு ஒரு காடாக இருந்ததாக ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார் மேலும் அந்த மரங்கள் நேற்றுதான் விழுந்தது போன்று புதிதாக இருப்பதாகவும் அதனை விறகு போல பிளக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் அந்த ஆராய்ச்சி குழுவினர் அந்த மரங்களை எரித்து தேநீரும் தயாரித்தனர். இதன் மூலம் பூமி குளிர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. --விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.