சுனாமிகளுக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை?

சுனாமிகளுக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை? தெற்காசிய சுனாமிக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை? ஒரு பிணக் கூராய்வில் கூட அடிப்படை ஆதாரம் தெளிவாக இல்லாத நிலையில் வெறும் யூகத்தில் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கூறினாலே அதை ஏற்க இயலாது. இந்த நிலையில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கு, உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை, நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது,சான்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விளக்கங்களை எப்படி அறிவியல் விளக்கமாக ஏற்க முடியும்? தெற்காசிய சுனாமி குறித்து நாசா 01.10.2005 அன்று வெளியிட்ட முதல் அறிக்கையில், இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் சில சென்டி மீட்டர் நகர்ந்ததால் ,கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசிய படி தீடீரென்று நகர்ந்து சென்றதால் அந்த நில அதிர்ச்சி ஏற்பட்டதுடன்,அந்த பகுதியில் இருந்த கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவானது என்று,''டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together) இந்த நிலையில் அதே நாசா அதே 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட அடுத்த அறிக்கையில்,ஆஸ்திரேலியக் கண்டமானது கடல் தளத்துடன் சில சென்டி மீட்டர் நகர்ந்ததால் ,கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசிய படி தீடீரென்று நகர்ந்து சென்றதால் அந்த நில அதிர்ச்சி ஏற்பட்டதுடன்,அந்த பகுதியில் இருந்த கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவானது என்று முன்னுக்குப் பின் முரணாக இன்னொரு விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…) எனவே நாசா ஆராய்ச்சியாளர்கள் ஒரே நிகழ்வுக்கு முன்னுக்குப் பின் முரணாக ஏன் இரண்டு விளக்கங்களை தெரிவித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக ,அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில்,கண்டங்களானது கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். முதலில் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்ற முடிவுக்கு புவியியல் வல்லுநர்கள் எப்படி வந்தனர் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசரின் புதை படிவங்களானது தென் பகுதிக் கண்டங்களான தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா ஆகிய கண்டங்களில் காணப் படுவதுடன் தீவுக் கண்டமான அண்டார்க்டிகா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் காணப் படுகிறது. இவ்வாறு கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசரின் புதை படிவங்களானது கண்டங்களிலும் தீவுக் கண்டங்களிலும் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு தனித் தனியாக பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். முதல் முதலில் இந்தக் கருத்தை வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெப்ப நிலை நிலவாக கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்தது ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் வேண்டும் என்று வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இவ்வாறு தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள் பிரிந்து நகர்ந்தாள் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார். இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்க வில்லை. மாறாக இந்தக் கண்டங்களுக்கு இடையில் 'தற்காலிக நிலப் பாலம்'' இருந்து அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருக்கலாம் என்று நம்பினார்கள்.அதன் பிறகு அந்த தற்காலிக நிலப் பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் கூறினார்கள். குறிப்பாக கண்டங்களானது இலேசான ''கிரானைட்'' வகை பாறையால் ஆனது.கண்டங்களின் சராசரி தடிமனானது நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர். ஆனால் கடல் தளமானது அதிக கடினமான நீரை உறிஞ்சாத ''கடப்பாக் '' கல்லால் ஆனது.கடல் தளத்தின் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். அதன் அடிப்படையில்,வெக்னர்,தற்காலிக நிலப் பாலமானது இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருந்தால் அந்த தற்காலிக நிலப் பாலமானது, அதிக கனமான கடல் தரைக்குள் மூழ்கி இருக்க இயலாது.அவ்வாறு இன்றி தற்காலிக நிலப் பலமானது அதிக கனமான கடல் தள பாறையால் ஆகி இருந்தால் அந்த பாலமானது கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்து இருக்க இயலாது, எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று வெக்னர் வாதிட்டார். ஆனாலும் புவியியலாளர்கள் ஒரு வேளை கடல் பகுதிக்கு சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வர பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, பல நாட்கள் கடலில் தத்தளித்த படி, விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு தற்செயலாக பரவி இருக்கலாம் என்றும் நம்பினார்கள். இந்த நிலையில் ஆக்ரோஷமான கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக்காக் கண்டத்தில் ''லிஸ்டரோ சாரஸ் '' என்று அழைக்கப் படும் மெதுவாக நடக்கும் ஒரு மந்தமான மூதாதை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்களானது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், லிஸ்டரோ சாரஸ் போன்ற ஒரு மந்தமான விலங்கால் கடலில் பல நாட்கள் மரக் கிளைகள் மேல் இருந்தபடி, கடலில் தத்தளித்தபடி, ஆக்ரோஷமான கடல் பகுதியாழ் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக்காக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது. எனவே புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர். வெக்னரின் இந்தக் கருத்தானது ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் வெக்னர் கூறிய படி கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று புவியியலாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. அப்பொழுது கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் டாக்டர் ஹாரி ஹெஸ் என்பவர் வெக்னரின் விளக்கத்தை சிறிது மாற்றி அமைந்தார். அதாவது,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக்கு குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால் வேகானரின் நகரும் கண்டங்கள் கருத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லாததை போலவே டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது. இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்க்கனவே இந்த விலங்கின் இந வகைகளின் புதை படிவங்களானது வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தீவுக்கு கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார். அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் தென் ஐந்தியாவில் தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்த பிறகு வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும், தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடை வெளியில் அமைந்து இருக்கிறது. எனவே இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசா அமைப்பபை சேர்ந்த புவியியலாளர்கள் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து ஒரு ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தை'' வெளியிட்டனர். குறிப்பாகக் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள்,நிகழ்ந்த 3,58,214 இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்தனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்''தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கும் இடையிலான கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் அடிப்படையில், அதே நாசா,''கண்டங்களின் இயக்கத்தைக்'' குறிப்பதாகக் கூறி, ஒரு வரை படத்தையும் வெளியிட்டது. அந்த வரை படத்தில்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களையும் தனித்த தனியாகப் பிரித்துக் காட்டாமல் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து ''அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையில்தான் , தெற்காசிய சுனாமிக்கு,நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து சுமத்ரா தீவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்த பிறகு இன்னொரு அறிக்கையில்,ஆஸ்திரேலியாக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து சுமத்ரா தீவுக்கு அடியில் சென்றதால்தான், நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரம் இன்றி வெறும் யூகத்தின் அடிப்படையில் இரண்டு விளக்கங்களை தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம்,தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறிய விளக்கமானது ''அடிப்படை ஆதாரத்தின் பேரில் கூறப் பட்ட அறிவியல் விளக்கம் அல்ல'' என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் ''தொடர்ச்சியாக'' நில அதிர்ச்சிகள் ஏற்படாதன் அடிப்படையில், கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. ஹைத்தி தீவு சுனாமிக்கு அமெரிக்க புவியியல் வல்லுநர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை? இதே போன்று, கடந்த 12.1.2010 அன்று ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிக்கும் கூட,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்களால் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் சரியான விளக்கத்தை கூற இயலா வில்லை என்பது ,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது,வடஅட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. உண்மையில் வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டத்துடன் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி தென் அமெரிக்கக் கண்டத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால்,நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. குறிப்பாக, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல் தளமானது, தனித் தனியாகப் பிரிக்கப் படாமல், ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது. அதன் அடிப்படியில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியை,’’வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி’’ என்று,புவியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும்,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துப் படி,அட்லாண்டிக் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் நம்பப் படுகிறது. இந்த விளக்கம் உண்மையென்றால் அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது சில லட்சம் ஆண்டுகளாகவும் அங்கிருந்து தொலைவில் செல்ல செல்ல கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது பல கோடி ஆண்டுகள் தொன்மையானதாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில்,அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளாக புனித பீட்டர் பாறைத் தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை அமெரிக்க புவியியல் வல்லுனரான 'ராண்டல் ரைட்' கண்டு பிடித்து இருக்கிறார். தொன்மைப் பாறைகளின் வயதை மதிப்பிட்டதன் மூலம் பூமியின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள்'' என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிலையில்,புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்தது கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம், பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கடல் தளம் நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. எனவேதான் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியான நிலா அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல் கடல் தளமானது ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது. இதே போன்று ஐரோப்பாவின் கடற் கரையோரப் பகுதிகளில் ,காணப் படும் , ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பேலியோ டிக்டின் என்று அழைக்கப் படும் கடல் உயிரியின் புதை படிவங்களும்,அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிப் பகுதியில், ''ஆல்வின்'' என்ற ஆழ் கடல் மூழ்கிக் கலன் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலமாகவும் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது? என்ற குழப்பமும் புவியியல் வல்லுனர்களுக்கு வந்து விட்டது. சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,இலேசாகி ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர். இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர்த் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தானது ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடைதுக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனால் தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,''ஆர்னிதோபோட்'' என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர். தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பை, ஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான, ஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானது, ஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார். இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் ''அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள்'' என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டாமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால், பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை. எனவே, குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை முன் மொழியும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை. எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, அட்லாண்டிக் கடல் மாதிரியை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை. இந்த நிலையில், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, ''தற்பொழுது இருக்கும் இடத்திலேயே'', உருவாகி இருக்கலாம் என்றும், ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர். ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை. இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். ( The USGS reported that the earthquaks occurred along the boundary between the Caribbean and north America plates.the two tectonic plates meet at a strike-slip fault,with the Caribbean plate moving eastward with respect to the North America plate) குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள். ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை. அதனால் ,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால்,உண்மையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது, என்பதே உண்மை. அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை. இதன் மூலம், ஹைத்தி தீவில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உண்மையில், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதன் மூலம்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில் ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ''ஆர்கனாஸ்'' மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ஆக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் சுமத்ரா மற்றும் ஹைத்தி ஆகிய தீவுகளில் ஏற்பட்ட நிலா அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளும் அமெரிக்க நாட்டு புவியியல் வல்லுநர்களால் அடிப்படை ஆதாரமற்ற கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருந்தால் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று நிலா அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் காரணம் என்ன என்ற கேள்வியம் எழுகிறது. இந்த நிலையில்,நார்வே நாட்டு கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையை துளையிட்டபொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து மடிந்த பனை மர உயர,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன்'' என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீட பூமி எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது அதன் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது. அத்துடன்,அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனரான டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில் அதன் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. மேற் குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்(தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோமீட்டர் ) இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும், அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் ஆகும். இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக ,மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. இதே போன்று சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து வாழும் நுண்ணுயிரிகளின் உதவியுடன் வாழும் பவளங்கள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும். இந்த நிலையில் ஆழமான கடலான பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் எரிமலைத் தீவுகளை சுற்றிலும் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பதற்கு விஞ்ஞானி டார்வின் ஒரு விளக்கத்தை கூறி இருந்தார். அதாவது அந்த பவளத் திட்டானது மூழ்கிக் கொண்டு இருக்கும் ஒரு எரிமலையை சுற்றிலும் உருவாகி வளர்ந்து இருப்பதாக டார்வின் விளக்கம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்,டார்வின் காலத்தில் வாழ்ந்த இயற்கை ஆராய்ச்சியாளரான அலெசாண்டர் அகாசி என்பவர் சுண்ணாம்புப் பொருளை சுரக்கும் கடல் உயிரினங்கள் இறந்து படிவத்தின் மூலம் கடலுக்கு அடியில் திட்டுகள் உருவாகி, அதன் மேல் பவளத் திட்டுகள் வளர்ந்து இருக்கலாம் என்று கூறினார். அதற்கு டார்வின்,பவளத் திட்டுகளை துளையிட்டால் அதன் அடியில் எரிமலை பாறைகள் இருந்தால் எனது விளக்கம் சரி.அவ்வாறு இல்லாமல் சுண்ணாம்பு பாறைகள் இருந்தால் உங்களின் விளக்கம் சரி என்று கடிதம் மூலம் தெரிவித்தார். இந்த நிலையில் இந்திய பெருங் கடல் பகுதியில் மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள ''மாலே'' பவளத் திட்டை துளையிட்ட பொழுது இரண்டு கிலோ மீட்டர் வரை சுண்ணாம்பு பாறைகள் இருந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்த ஆதாரம் மூலமாகவும் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பிறகு உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேற் கண்ட ஆதாரங்கள் மூலம் கடல் நீரானது கோடிக் கணக்கான ஆண்டு காலமாக உயர்ந்து கொண்டு இருப்பது தேசிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் கடல் நீரானது பூமிக்குள் உள்ளே இருந்தே மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம் நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் நீரானது பூமிக்குள் இருந்து வந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. தொன்மை பாறைகளின் வயதை மதிப்பிட்டதன் மூலம் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். குறிப்பாக துருவப் பகுதிகளில் காணப் படும் டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்ட உயர்வால் கடல் பரப்பளவில் அதிகரிப்பால் பூமியின் வளி மண்டலமானது குளிர்ந்தது கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆக புதை படிவ ஆதாரங்கள் மூலம் பூமியானது கடல் மட்ட உயர்வால் ஒரு நீர்க்க கிரகமாக உருவாகி கொண்டு இருப்பதுடன் பூமியானது குளிர்ந்தது கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கடல் மட்டம் பல கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன. ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர். அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை. கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன ? வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது. இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்'' என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள் மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது. குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள். சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிமண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது. ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக்கு குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி உடலில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்களை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக கனடாவின் பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும் அதனால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்கு மூழ்கிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது பரபப்பாக பேசப் பட்டது. இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது. அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கருக்கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு போஸ்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் பகுதியில் உள்ள எழுபத்தி மூன்று குகைகளின் படிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் கடந்த பதினைந்து லட்சம் ஆண்டுகள் முதல் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆர்க்டிக் பகுதியில்,குறிப்பாக உயர்ந்த அச்சக் கோட்டுப் பகுதியில் கூட, உறை பனி நிலமானது உருகி இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் நன்கு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உறை பனி நில உருகலானது ஆர்க்டிக் பகுதியில் தாழ்ந்த அட்ச ரேகைப் பகுதியில் மட்டும் நிகழ்ந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் கோடை காலத்தில் பனிப் படலங்கள் இருந்திருக்க வில்லை என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக அவர்கள் ஆர்க்டிக் பகுதி உரை பனி நிலமானது ஆச்சர்யமாக நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கண்டங்கள்,கடல்,வளி மண்டலம் எப்படி உருவாகின? ''பூமிக்கு அடியில் சுரந்த நீரால் கடல் உருவானது.'' ''பூமிக்கு அடியில் சுரக்கும் நீரால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.'' சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் கூட நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் சந்திராயன் செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடித்தனர். நிலவில் ஆறோ குளமோ மேகங்களோ இல்லை.பிறகு அந்த பனிக்க கட்டிகள் எங்கு இருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது. அந்த பனிக் கட்டியானது ,நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது கசிந்து நிலவின் மேற் பரப்பிற்கு வந்த பிறகு பனிக் கட்டியாக உருவாகி இருப்பதாக நாசா இணைய தளத்தில் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். பூமியின் எடையில் எண்பது சதவீதம் ''மாக்மா'' என்று அழைக்கப் படும் பாறைக் குழம்பால் ஆனது. அந்தப் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீரே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் தொடர்ந்து கலந்து கொண்டு இருக்கிறது. இது போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்றதால் கடல் உருவானது,இன்றும் கூட பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது தொடர்ந்து குளிர்ந்து இறுக்கிப் புதிய பாறைத்த தட்டுகளாக உருவாகும் பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் கடலில் சேர்வதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஜப்பானில் உள்ள சில சூடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளி வந்த நீரை சேகரித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நீரானது பூமியின் ஆழமான பகுதியில் உருவான ''பாறைக் குழம்பு நீர்'' என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் பாறைக் குழம்புக் கோளமாக இருந்த பூமியானது, படிப்பு படியாகக் குளிரத் தொடங்கிய பொழுது முதலில் மேற்பரப்பு உருவானது. தொடர்ந்து குளிர்ந்த பொழுது,பூமிக்கு அடியில்,பாறைத் தட்டுகள் உருவாகின.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்தன.பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் பூமிக்கு மேல் திரண்டதால் கடல் உருவானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் பூமிக்கு மேல் திரண்டதால் வளி மண்டலம் உருவானது.பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளானது அடர்த்தி குறைவாக இருந்ததால், அடர்த்தி அதிகமான பாறைக்குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால், கண்டங்கள் உருவாகியது. அதாவது கடலில் பனிப் பாறைகள் உருவாகி உயர்வதை போன்று,பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பில் பாறைத் தட்டுகள் உருவாகிக் கண்டங்களாக உயர்ந்து நிற்கின்றன. கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்தபொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருகிக்கின்றன. இந்த நிலையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் குறைந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்தன.அதனால் அதில் வாழ்ந்த டைனோசர் போன்ற பெரிய ஊர்வன வகை விலங்கினங்கள் முதலில் அழிந்தன. அதன் பிறகு மேலும் பனிப் பொழிவு அதிகரித்ததால் குறைந்த அளவிலான காட்டுப் பகுதியில் வாழ்ந்த பனி யானை போன்ற பாலூட்டி வகை விலங்கினங்களும் அழிந்தன. ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களை ஏன் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை? கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,புவியியலாளர்களால் நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் ,ஆர்க்டிக் பகுதியில் ''ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு'' வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,தொல் விலங்கியல் வல்லுநர்களால் ,விளக்கம் கூற இயல வில்லை. தற்பொழுது வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா பகுதிகளில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, வட அமெரிக்காவின் வட பகுதியான ''அலாஸ்கா'' மற்றும் ஆசியாவின் வட பகுதியான ''சைபீரியா'' பகுதிகளானது கடந்த ''பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே'' கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது. குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டம் மற்றும் அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ அதனை பாது காக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. அதன் முட்டைகள் பெரிய முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க இயலாது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்கள் உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர் முட்டைகள் பெரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே டைனோசர்களானது குளிர் கால நெடுந்துயிலோ அல்லது கோடை கால இடப் பெயர்ச்சியோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். இதன் மூலம் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களுக்கும் புவியியல் மற்றும் உயிரியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயலாத நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு எனது விளக்கம். தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் குறைந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்ததால், அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருந்தால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சில எரிமலைகள் இருக்கின்றன. அந்த எரிமலைகள் எல்லாம் அணைந்து போன எரிமலைகள் என்றே நீண்ட காலமாக நம்பப் பட்டது. இந்த நிலையில்அந்த எரிமலைகள் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள்கள் மூலம் அந்த எரிமலைகளின் இயக்கம் கண்காணிக்கப் பட்டது. குறிப்பாக அந்த செயற்கைக் கோள்களில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டது. அதன் பிறகு,அந்த ரேடியோ கதிர்களானது ,தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்த பொழுது,கருவிகள் மூலம், தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது. அந்தப் படங்களை ஒன்றாக இணைத்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர். ஏன் இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றி ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகின என்பதற்கு,எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் தெரிவித்து இருந்தனர். அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்கிறது. அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,சில சென்டி மீட்டர் உயர்கிறது. அதன் பிறகு,அந்த எரிமலையில் இருந்து பாறைக் குழம்பு வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது. இதனால் அந்த எரிமலையைச் சுற்றி உயர்ந்து இருந்த தரைப் பகுதியும்,பல கிலோ சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் இறங்குகிறது. இவ்வாறு ,எரிமலைகள் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகுகின்றன என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவான இடங்களிலும்,குறிப்பாக , சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது. குறிப்பாக,இத்தாலி நாட்டில்,லா அகுலா நகரில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு நில அதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகளை வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. அத்துடன்,அந்தப் பகுதியில்,நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு,ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து ''ரேடான்'' என்று அழைக்கப் படும்,கதிரியக்கத் தன்மை உடைய வாயு ,கசிந்து இருப்பதையும்,ஜியூவாணி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார். இதே போன்று,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்த பல இடங்களில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதன் அடிப்படையில்,ஜியோவானி ,''லா அகூலா'' நகரில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். அவர் எச்சரித்ததைப் போன்றே ,''லா அகூலா'' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக,ரேடான் வாயுவானது, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் வாயு ஆகும். எனவே,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தால் ''லா அகூலா'' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ,இரண்டாவது ஆதாரம் மூலமாகவும் உறுதி ஆகியுள்ளது. இதே போன்று ,கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவுப் பகுதியில்,ஏற்பட்ட ,நில அதிர்ச்சியால்,சுனாமி உருவானது. அப்பொழுது,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் , பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது. அத்துடன்,அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ,ஹோன்சு தீவுக்கு மேலே வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது,வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது. இது குறித்து விளக்கமளித்த,நாசாவைச் சேர்ந்த,டாக்டர்,டிமிட்ரி ஒசனோவ்,அந்தப் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும்,ரேடான் வாயு கதிரியக்கத் தன்மை உடையதால்,அந்த வாயுவானது காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும்,இதனால் எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால்,வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கலாம் என்று, ,டாக்டர் டிமிட்ரி ஒசனோவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சிகளும்,சுனாமிகளும் உருவாகி இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.