பூமியின் சுருக்கமான வரலாறு- -விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமியின் சுருக்கமான வரலாறு- -விஞ்ஞானி.க.பொன்முடி. A Brief history of the Earth. Scientist.G.Ponmudi. 3276 words,28086 Characters,109 paragraph,13 pages. தெற்காசிய சுனாமிக்கும்,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களும் , கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் புவியியல் மற்றும் உயிரியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்வால் பார்ட் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதே போன்று, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த, முதலை போன்ற மூன்று அடி நீளமுள்ள,கடல் பகுதியைக் கடக்க இயலாத மெஸோ சாரஸ் என்று அழைக்கப் படும், ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இந்தப் புதை படிவப் புதிர்களுக்கு விளக்கம் கூறுவதற்காக, ஜெர்மன் நாட்டை சேர்ந்த கால நிலை ஆராய்ச்சியாளரான டாக்டர் வெக்னர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் வெக்னர் கூறினார். ஆனால் தற்பொழுது இந்தக் கருத்தின் அடிப்படையில் ஆர்க்டிக் வளைய பகுதிக்குள் அமைந்து இருக்கும் வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா பகுதிகளில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,புவியியல் மற்றும் உயிரியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால் வெக்னர் ஒரே கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் வெக்னர் கூறினார். அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் அதை சூழ்ந்து ஒரு ஆழமற்ற கடல் இருந்ததாகவும் அந்தக் கடலுக்கு பாந்தலாசா என்றும் பெயர் சூட்டினார். அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா கண்டமானது இரண்டாக்கப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாக்கி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார். அதன் பிறகு லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்க கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும், யுரேசியாக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்ததாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டி க் கடல் உருவாகி விரிவடைந்ததாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,கொண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையில் நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாக நம்பப் படுகிறது. அதே போன்று கொண்டுவானாவில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையில் நகர்ந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் டெதிஸ் கடல் மூடப் பட்டு,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக நம்பப் படுகிறது. அதனாலேயே ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதாக விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிகாவில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதுடன் இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ,ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது. வெக்னரின் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா? கண்டங்கள் நகர்கின்றன என்று வெக்னர் கூறினாலும் கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான ஆதாரங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. இந்த நிலையில் கண்டங்களை சுற்றிலும் கடல் தரையில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் இருப்பதுடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நிலா அதிர்ச்சியிலும் ஏற்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது. அதாவது கண்டங்களை சுற்றி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் ,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுக்கிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தளப் பாறைகளின் ஒர பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேற்புறம் தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலையில்,அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து ஒரு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தை வெளியிட்டனர். அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இந்த நிலையில் கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை குறிப்பதாகக் கூறும் ஒரு வரை படத்தையும் நாசா வெளியிட்டது அந்த வரைபடத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில்,கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அன்று முதலில் வெளியிட்ட விளக்கத்தில்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று அடிப்படை ஆதாரம் இன்றி ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் மூன்று மாதத்திற்கு பிறகு அதே நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அன்று வெளியிட்ட விளக்கத்தில் ஆஸ்திரேலியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்கள். இதன் மூலம் தெற்காசிய சுனாமிக்கு கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாத நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடலில் ஒரு தீவாக நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் டெதிஸ் கடல் மறைந்து இமைய மலைத் தொடர் உருவானதாகவும் அதனாலேயே இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதாகவும் இமய மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த மூதாதை பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நாஸ்கா கிராமத்தில் தொல் விலங்கியல் வல்லுநர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர் அதன் அடிப்படையில் அந்தக் காலத்தில் இந்தியாவானது தனியாக இருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்தது என்றும் அசோக் சாகினி தெரிவித்து இருக்கிறார். இதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்த ட்ரூடோண்ட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்களும் தென் இந்தியாவில் தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதே போன்று கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா பகுதிகளானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது. குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டம் மற்றும் அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ அதனை பாது காக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. அதன் முட்டைகள் பெரிய முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.எனவே ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. முக்கியமாக ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள எட்மாண்டோ சாரஸ் என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதனால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க இயலாது. சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், குளிர் கால நெடுந்துயில் மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் குளிர் கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். ஆனால்,டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்கள் உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அதன் வயதானது ஆறு மாதம் என்றும், அதன் அடிப்படையில் டைனோசர் முட்டைகள் பெரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே டைனோசர்களானது குளிர் கால நெடுந்துயிலோ அல்லது கோடை கால இடப் பெயர்ச்சியோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். இதன் மூலம் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களுக்கும் புவியியல் மற்றும் உயிரியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயலாத நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதே போன்று கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட USGS என்று அழைக்கப் படும் புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன் அமெரிக்கக் கண்டங்களானது முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது என்ற கேள்வி எழுந்தது. சில புவியியல் வல்லுநர்கள், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது கொண்டு இருந்த பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும் அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் எரிமலை செயல் பாட்டால் கரீபியன் தீவுக்கு கூட்டம் உருவாகி ஒரு பாறைத்த தட்டாக உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் இன்றும் கூட கரீபியன் பாறைத்த தட்டு கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் பாறைத்த தட்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாகவும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாக்கி இருக்க வில்லை என்றும் மாறாக பூமிக்குள் புதைந்து இருந்ததாகவும் நம்புகிறார்கள். ஆனால்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகர குவா நாட்டு மலைப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை இந்தியாவின் பீர் பால் தொல் தாவரவியல் ஆய்வு மையத்தை சேர்ந்த ஸ்ரீ வத்சன் குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்கக் கடங்களுக்கு இடையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மத்திய அமெரிக்க நிலைத் தொடர்பு இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகிறது. எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களானது தனித்த தனியாக நகர்ந்து கொண்டு இருந்த பொழுது அந்தக் கண்டங்களுக்கு இடையில் இருந்த இடை வெளி வழியாக கரீபியன் தீவுக்கு கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்தது நுழைந்ததாக புவியியல் வல்லுநர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற கருத்து ஆகும். இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக்கு கூட்ட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்து இருக்கின்றனர்.இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக கரீபியன் தாவுத் கூட்டத்திற்கு கிழக்கு திசையில் ,வடக்கு தெற்கு திசையை நோக்கி ஆண்டிலியன் எரிமலைத் தீவுக்கு கூட்டம் உருவாக்கி இருப்பதற்கு புவியியல் வல்லுநர்கள் ஒரு விளக்கத்தை கூறி இருக்கின்றனர். அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தரையானது கரீபியன் பாறைத்த தட்டுக்கு அடியில் சென்ற பிறகு வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தை பொத்துக் கொண்டு எரிமலைத் தொடராக உருவானதாக நம்புகிறார்கள். பசிபிக் கடல் மாதிரிக்கு ஆதாரங்கள் முரணாக இருக்கும் நிலையில் அட்லாண்டிக் கடல் மாதிரியை முன் வைக்கும் புவியியல் வல்லுநர்கள் ஆன்டிலியன் எரிமலைத் தொடரின் தோற்றத்திற்கு விளக்கம் கூற இயல வில்லை. இன்னும் சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் பாறைத்த தட்டானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாக்கி இருக்கலாம் என்ற விளக்கத்தையும் முன் வைத்து இருக்கின்றனர். ஆக,கரிபியன் தீவுக்கு கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுநர்களால் அந்தப் பாறைத் தட்டு எங்கே எப்படி குருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில்,கடந்த 10.01.2010 அன்று,கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் பாறைத் தட்டு நகர்ந்ததா இல்லையா என்று குறிப்பிடாமல் வெறுமனே வட அமெரிக்கக் கண்டத்தின் நகர்ச்சியால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால் நிலா அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி விளக்கம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசரின் புதை படிவங்களை தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று கரீபியன் தீவுக்கு கூட்டம் இருந்திருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துப் படி உண்மையில் அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. மேலும்,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துப் படி,அட்லாண்டிக் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது சில லட்சம் ஆண்டுகளாகவும் அங்கிருந்து தொலைவில் செல்ல செல்ல கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது பல கோடி ஆண்டுகள் தொன்மையானதாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில்,அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளாக புனித பீட்டர் பாறைத் தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை அமெரிக்க புவியியல் வல்லுனரான ராண்டல் ரைட் கண்டு பிடித்து இருக்கிறார். தொன்மைப் பாறைகளின் வயதை மதிப்பிட்டதன் மூலம் பூமியின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிலையில்,புதிய கடல் தளம் உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்தது கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம், பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கடல் தளம் நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று ஐரோப்பாவின் கடற் கரையோரப் பகுதிகளில் ,காணப் படும் , ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பேலியோ டிக்டின் என்று அழைக்கப் படும் கடல் உயிரியின் புதை படிவங்களும்,அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிப் பகுதியில், ஆல்வின் என்ற ஆழ் கடல் மூழ்கிக் கலன் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலமாகவும் கடல் தரையம் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருந்தால் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களிலும்,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசத்திலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகள் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. 000000000000000000 எனவே நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கொள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து காணப் பட்டது.அதனால் அந்தப் பகுதியில் சிறிய அளவிலான கடற் கரை உருவாகி இருந்தது. அத்துடன் அந்தப் பகுதியில்,அது வரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, ஜப்பான் நாட்டின் ஆலோஸ் செயற்கைக் கோள் மூலம், தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.அப்பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்புகளை வெட்டியதை போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது. இதே போன்ற,தரைப் மட்ட மாறுபாடுகளானது,ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைகளைச் சுற்றிலும் ஏற்பட்டு இருப்பதும் செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது. குறிப்பாக.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையின் உயரம் அதிகரிக்கும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும் சில சென்டி மீட்டர் உயர்கிறது. அதே போன்று, எரிமலைக்குள் இருந்து பாறைக்கு குழம்பு வெளியேறும் பொழுது,எரிமலையின் உயரம் குறையும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதியும் சில சென்டி மீட்டர் இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக,எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,இத்தாலி நாட்டில் ''லா அகுலா'' என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது. அத்துடன்,அப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து, எரிமலைகளில் இருந்து வெளிப் படும், ''ரேடான்'' என்ற வாயு கசிந்து இருப்பதையும், ஜியோவானி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார். இதே போன்று,ஜப்பான் நாட்டில்,ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியம் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது. அத்துடன்,அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்த நாசாவைச் சேர்ந்த டாக்டர்.டிமிட்ரி ஒசொ னோவ், அப்பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து, கதிரியக்கத் தன்மை உடைய ''ரேடான்'' வாயு கசிந்து இருக்கலாம்.ரேடான் வாயுவானது கதிரியக்கத்தை தன்மை உடையதால்,காற்றில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப் பட்டு இருக்கலாம்,இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருக்கிறது.என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில், எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக தெளிவாக நிரூபணமாகிறது. இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, அண்டார்க்டிக் கண்டத்திலும் பிளேட்டியோ சாராஸ் வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும், பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருகின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும்,அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் இடப பெயர்வு நடை பெற்று இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது. குறிப்பாக சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து வாழும் நுண்ணுயிரிகளின் உதவியுடன் வாழும் பவளங்கள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும். இந்த நிலையில் ஆழமான கடலான பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் எரிமலைத் தீவுகளை சுற்றிலும் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பதற்கு விஞ்ஞானி டார்வின் ஒரு விளக்கத்தை கூறி இருந்தார். அதாவது பவளங்கள் மூழ்கிய எரிமலையை சுற்றிலும் உருவாகி இருப்பதாக அவர் விளக்கம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்,டார்வின் காலத்தில் வாழ்ந்த இயற்கை ஆராய்ச்சியாளரான அலெசாண்டர் அகாசி என்பவர் சுண்ணாம்புப் பொருளை சுரக்கும் கடல் உயிரினங்கள் இறந்து படிவத்தின் மூலம் கடலுக்கு அடியில் திட்டுகள் உருவாக்கி அதன் மேல் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கலாம் என்று கூறினார். அதற்கு டார்வின்,பவளத் திட்டுகளை துளையிட்டால் அதன் அடியில் எரிமலை பாறைகள் இருந்தால் எனது விளக்கம் சரி.அவ்வாறு இல்லாமல் சுண்ணாம்பு பாறைகள் இருந்தால் உங்களின் விளக்கம் சரி என்று கடிதம் மூலம் தெரிவித்தார். இந்த நிலையில் இந்திய பெருங் கடல் பகுதியில் மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை துளையிட்ட பொழுது இரண்டு கிலோ மீட்டர் வரை சுண்ணாம்பு பாறைகள் இருந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்த ஆதாரம் மூலமாகவும் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பிறகு உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. இதே போன்று,மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம் நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். இந்த நிலையில் கடல் மட்டம் பல கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. முக்கியமாக கடலுக்கு அடியில்,கடலடித் தரையில் உருவாகக் கூடிய தலையணை வடிவ பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகளும் கண்டங்களின் மேல் பரவலாக காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. கண்டங்கள்,கடல்,வளி மண்டலம் எப்படி உருவாகின? ஆரம்பத்தில் பாறைக் குழம்புக் கோளமாக இருந்த பூமியானது, படிப்பு படியாகக் குளிரத் தொடங்கிய பொழுது முதலில் மேற்பரப்பு உருவானது. தொடர்ந்து குளிர்ந்த பொழுது,பூமிக்கு அடியில்,பாறைத் தட்டுகள் உருவாகின.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்தன.பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் பூமிக்கு மேல் திரண்டதால் கடல் உருவானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் பூமிக்கு மேல் திரண்டதால் வளி மண்டலம் உருவானது.பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளானது அடர்த்தி குறைவாக இஇருந்ததால், அடர்த்தி அதிகமான பாறைக்குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால், கண்டங்கள் உருவாகியது. அதாவது கடலில் பனிப் பாறைகள் உருவாகி உயர்வதை போன்று,பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பில் பாறைத்த தட்டுகள் உருவாகிக் கண்டங்களாக உயர்ந்து நிற்கின்றன. -விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.