ஒரு கண்டு பிடிப்பின் கதை.full story

 சுருக்கமான அறிக்கை.

தற்பொழுது, கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும்,காணப் படுகின்றன.இதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்ததாகவும்,அதன் பிறகு,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக, நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறு,கடல் தளங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

.அதே போன்று, ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத்த தட்டு, திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது, அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும்,புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தக் கருத்தின் படி,கடல் தளங்களுடன் தனித்த தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகாக நம்பப் படும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா,அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமேரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்'',இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையிலான கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இதன் மூலம்,கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.

இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இதே போன்று, அண்டார்க்டிக் கண்டத்திலும் பிளேட்டியோ சாராஸ் வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும், பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும்,அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் இடப பெயர்வு நடை பெற்று இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.

அதன் பிறகு கடல் மட்டமானது பூமிக்குள் இருந்து சுரந்த நீரால் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில்,குமுறும் எரிமலைகளைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளானது,எரிமலையுடன் உயர்ந்து இறங்குவதால்,எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, வரப்புகளை வெட்டியதை போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாக்கி இருப்பது,பதிவாகி இருக்கிறது.

அதே போன்ற மேடு பள்ள வலையங்களானது,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்ட இடங்களில்,நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் உருவாக்கி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில்,பதிவாகி இருக்கிறது.

அத்துடன்,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்ட இடங்களில்,பூமிக்கு அடியில் இருந்து ,எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் என்ற வாயு கசிந்து இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே நிலா அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.

0000000000000000


ஒரு கண்டு பிடிப்பின் கதை.full story
முன்னுரை.

ஐரோப்பியர்கள் நெடுந் தொலைவுக்கு கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல தனிமைத் தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவது குறித்து ஆச்சரிய பட்டார்கள்.
அவைகள் இயற்கையிலேயே ஆங்காங்கே தோன்றி இருக்கலாம் என்று நம்பினார்கள்.

அல்லது, சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால்,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வர பட்ட ,மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி, தற்செயலாக விலங்கினங்கள் அந்தத் தீவை அடைந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து பெருகி இருக்கலாம் என்று நம்பினார்கள்.

இயற்கை ஆராய்ச்சியாளர்களான ரஸ்ஸல் வாலஸ் மற்றும் சார்லஸ் டார்வின் போன்றோர்கள் ஒவ்வொரு கண்டங்களிலும்,காணப் படும் விலங்கினங்கள் வெவ்வேறு வகைகளாக இருப்பதைக் கவனித்தார்கள்.

டார்வின் இந்த விஷயத்தின் கூடுதல் கவனம் செலுத்தினார்.
அவர், தென் அமெரிக்கக் கண்டத்தில், ''மெகாலோ டான்'' என்று அழைக்கப் படும் கரடி போன்ற விலங்கின் பெரிய மற்றும் சிறிய அளவிலான எலும்புக்கு கூடுகளைக் கண்டார்.அதே போன்று,''ரியா'' என்ற பறவை இனத்திலும், பெரிய மற்றும் சிறிய இனவகைகள் இருப்பதை அறிந்தார்.

அதன் பிறகு, காலபாகஸ் தீவுக்கு சென்று டார்வின் அந்தத் தீவுகளில் காணப் படும் ஆமைகளானது, தீவுக்கு தீவு வேறு பட்டு இருப்பதைக் கண்டார்.

டார்வினை வரவேற்ற காலபாகஸ் தீவின் கவர்னர்,ஒரு ஆமையின் ஓட்டைப் பார்த்தே, அந்த ஆமையானது, எந்தத் தீவை சேர்ந்தது என்று கூறி விட முடியும் என்று கூறினார்.

அதே போன்று,காலபாகஸ் தீவுகளில் காணப் பட்ட சிட்டுகளின் அலகுகளும், வேறு பட்டு இருப்பதை டார்வின் கவனித்தார்.அதே போன்று அவற்றின் உணவும் பழக்கங்களும் வேறு பட்டு இருப்பதை டார்வின் கவனித்தார்.அவற்றில் சில தானியங்களையும்,புழு பூச்சிகளையும் ,பழம் மற்றும் கொட்டைகளையும் உணவாகக் கொள்வதை டார்வின் கவனித்தார்.அதற்கு ஏற்ப அவற்றின் அலகுகள் இருப்பதை டார்வின் கவனித்தார்.

அதன் பிறகு, அந்த ஆமைகளும்,சிட்டுகளும் ஒரு பொது மூதாதையில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு டார்வின் வந்தார்.
காலப் போக்கில்,விலங்கினங்களில் ஏற்படும் மாற்றங்கள், சூழ் நிலைக்கு பொருந்தி வரும் பொழுது, அந்த இனம் தழைக்கிறது .அதன் மாற்றங்கள் மரபணு மூலம் அதன் சந்ததிகளுக்கு கடத்தப் படுகிறது.பொருந்தாத மாற்றங்களை உடைய இனம் அழிகிறது என்று டார்வின் புரிந்து கொண்டார்.

இந்த மாற்றங்களானது பல லட்சக் கணக்கான ஆண்டுகளில் மெதுவாக நடைபெறுகிறது என்றும் டார்வின் புரிந்து கொண்டார்.

அதன் பிறகே,விலங்கினங்களானது ஒரு இடத்தில தோன்றி, மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கிறது என்பது தெரிந்தது.
அப்பொழுதுதான் டார்வின்,கடல் நீரில் வாழ இயலாத, தவளை,மண்புழு,நத்தைகள் போன்ற விலங்கினங்கள்,தீவுகளில் காணப் படுவது குறித்து ,எப்படி இந்த விலங்கினங்கள் இந்தத் தனிமைத் தீவுகளை அடைந்தன? என்று கேள்வி எழுப்பினார்.


இந்த நிலையில்,ஜெர்மன் நாட்டின் மார்பர்க் பல்கலைக் கழகத்தில்,பேராசிரியராகப் பணியாற்றிய ஆல்பிரட் வெக்னர்,''கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்கள், தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம்'' என்ற விளக்கத்தைக் கூறினார்.

0000000000000

ஒரு நாள், நான் தற்செயலாக, நேஷனல் ஜியாகிராபிக் புத்தகத்தின் ஒரு கட்டுரையை படித்தேன்.

அந்தக் கட்டுரையில், ஒரு மலையின் மேல் இருவர் நின்று கொண்டு தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.

குறிப்பாக அவர்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் தரையில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.


மேலும் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூறு அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைத்ததாகவும்,அதன் பிறகு கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

அடுத்த பக்கத்தில்,சீனாவில், ஒரு மலைப் பிரதேசத்திலும் பலர் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை தோண்டிக் கொண்டு இருக்கும் படம் வெளியிடப் பட்டு இருந்தது.

உடனே எனக்கு நிலப் பகுதிகளும் கூட, கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது தோன்றியது.
உடனே இணையத்தில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் குறித்த தகவல்களைத் தேடினேன்.


அப்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் ஐம்பது மாகாணங்களிலும்,கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

எனவே கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து இணையத்தில் தேடியதில்,கடல் தரையில் உருவாகக் கூடிய பாம்புப் பாறைகள் மற்றும் தலையணை வடிவப் பாறைகளும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவது குறித்து தெரிய வந்தது.


குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது குளிர்ந்து இறுகுவதால், பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன.


அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன.

எனவே கண்டங்கள் தீவுகள் இப்பால் ஒரு காலத்தில் கடலடித்த தரையாக இருந்திருப்பதும் அதன் பிறகு கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் தெரிய வந்தது.

எனவே கண்டங்கள் எல்லாம் கடல் தரையுடன் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது,அவற்றின் ஒர பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத்த தட்டு, திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது, அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் கூறும் விளக்கம் மேல் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே நில அதிர்ச்சி சுனாமி குறித்த காரணங்களை அறிய இணையத்தில் தொடர்ந்து தகவல்களைத் தேடி ஆய்வு செய்தேன்.

கடல் பகுதியைக் கடக்க இயலாத ஆதிகால விலங்கினங்களின் புதை படிவங்களானது அண்டார்க்டிகா,ஆஸ்திரேலியா போன்ற தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

அதே போன்று,கடுங் குளிர் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில்,உள்ள ஸ்பிட்ஸ் பெர்ஜென் என்ற தீவில், வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்தத் தீவானது, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, வடக்கு நோக்கி நகர்ந்ததே காரணம் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.
ஆனால்,கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை.

இந்த நிலையில், கண்டங்களைச் சுற்றிலும்,பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு,கடலுக்கு அடியில்,எரிமலைத் தொடர்கள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.

அத்துடன்,அந்த எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும்,நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரிய வந்தது.
எனவே,அதன் அடிப்படையில்,வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது.

அதாவது.கண்டங்களை சுற்றி இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில்,,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் பிரிந்து விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், ஒரு புதிய விளக்கம் கூறப் பட்டது.இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால்,இந்தக் கருத்தின் அடிப்படையில்,வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா,மற்றும் ஆசியாக் கண்டத்தின் வட பகுதியான சைபீரியாவும் கடந்த ''பத்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பே ,கடுங் குளிர் நிலவும்,அறுபத்து ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான, ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.

இந்த நிலையில், அலாஸ்கா மற்றும் சைபீரியாவில், ''ஏழு கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை.

ஏனென்றால்,பூமியானது,தன் அச்சில் இருப்பது மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக பகலும்,அதே போன்று நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவும் நீடிக்கிறது.

இவ்வாறு நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கு கீழே செல்கிறது.எனவே டைனோசர்கள் குடிக்க நீர் கூட கிடைக்காமல் அனைத்தும் பனிக் கட்டி ஆகி விடும்.

அத்துடன் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால், தாவரங்களானது சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது,எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டம் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களால் இன்று வரை விளக்கம் கூற இயல வில்லை.


ஒரு வேளை, டைனோசர்களானது பனி மான்களை போன்று,குளிர்கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்கலாம் அல்லது ,பனிக் கரடிகளைப் போன்று,குளிர் கால நீண்ட தூக்கத்தை மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

ஆனால் டைனோசர்களின் முட்டைகள் பெரிய ஆறு மாத காலம் தேவைப் படும் என்பது தெரிய வந்துள்ளது.அதன் பிறகும் இள வயது ,டைனோசர்கள் தனியாக இயங்க ஒரு ஆண்டு காலம் தேவைப் பட்டு இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே,டைனோசர்களானது ஆர்க்டிக் பகுதியில்,ஆண்டு முழுவதும் தங்கி வாழ்ந்து இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய ,முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை பத்து டிகிரி ஆகும். அத்துடன் ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட வாத்து அலகு டைனோசரின் எடையானது ஏழு டன்,யானையை விட பல மடங்கு பெரிய டைனோசர்களின் முட்டைகளானது அடை காப்பது மூலம் பொரிந்து இருக்காது.

எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது ,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட, முட்டைகள் மற்றும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள்மூலம் உறுதியாகிறது.

எனவே கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.

இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இதே போன்று அண்டார்க்டிக் கண்டத்திலும் பிளேட்டியோ சாராஸ் வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும், பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.


தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டர் ஆழமுடையதாக இருக்கிறது.இந்த நிலையில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளியான நீராவியில் இருந்த நீர், கோடிக் கணக்கான ஆண்டுகளாக கடலில் கலந்ததால் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.

கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்ததால், துருவப் பகுதிகளில் கூட வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருந்திருக்கிறது.

அதன் பிறகு கடலுக்கு அடியில் இருக்கும் ஏராளமான சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் ,பூமிக்குல் சுரந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்ததால், கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

அதனால் கடலின் பரப்பளவும் அதிகரித்து இருக்கிறது.கடல் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால்,துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவானது.

அதனால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் இருந்த பசுமைக் காடுகள் அழிந்து இருக்கிறது.அதனால் அதனை சார்ந்து வாழ்ந்த டைனோசர் போன்ற விலங்கினங்களும் அழிந்து இருக்கிறது.

இதே போன்று,நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் கூட, கண்டத் தட்டு நக்கர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
உதாரணமாக,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கை படி, இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து, தென் துருவப் பகுதியில், ஆஸ்திரேலியாக் கண்டத்துடன், ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு அங்கிருந்து நகர்ந்து, பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இன்றும் கூட இந்த இரண்டு கண்டங்களும், வட கிழக்கு திசையை நோக்கி,தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடை பட்ட கடல் தரைப் பகுதியில், பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்'',இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையிலான கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இதன் அடிப்படையில், அதே நாசா,கண்டங்களின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி, ஒரு வரை படத்தையும் வெளியிட்டது.அந்த வரை படத்தில்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், தெற்காசிய சுனாமிக்கு,நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து சுமத்ரா தீவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால்,அதே நாசா வெளியிட்ட இன்னொரு அறிக்கையில்,ஆஸ்திரேலியாக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து சுமத்ரா தீவுக்கு அடியில் சென்றதால்தான், நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது என்று தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி, முன்னுக்குப் பின் முரணாக, வெறும் யூகத்தின் அடிப்படையிலான விளக்கங்களை தெரிவித்து இருப்பது நிரூபணமாகிறது.

தெற்காசிய சுனாமி என் ஏற்பட்டது?

தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப்பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து காணப் பட்டது.அதனால் அந்தப் பகுதியில் சிறிய அளவிலான கடற் கரை உருவாகி இருந்தது.அத்துடன் அந்தப் பகுதியில்,அது வரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன.

அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, ஜப்பான் நாட்டின் ஆலோஸ் செயற்கைக் கோள் மூலம், தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.அப்பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்புகளை வெட்டியதை போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.

இதே போன்ற,தரைப் மட்ட மாறுபாடுகளானது,ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைகளைச் சுற்றிலும் ஏற்பட்டு இருப்பதும் செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது.

குறிப்பாக.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையின் உயரம் அதிகரிக்கும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும் சில சென்டி மீட்டர் உயர்கிறது.

அதே போன்று, எரிமலைக்குள் இருந்து பாறைக்கு குழம்பு வெளியேறும் பொழுது,எரிமலையின் உயரம் குறையும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதியும் சில சென்டி மீட்டர் இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக,எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில்,இத்தாலி நாட்டில் ''லா அகுலா'' என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.

அத்துடன்,அப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து, எரிமலைகளில் இருந்து வெளிப் படும், ''ரேடான்'' என்ற வாயு கசிந்து இருப்பதையும், ஜியோவானி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.

இதே போன்று,ஜப்பான் நாட்டில்,ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியம் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது .

அத்துடன்,அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

இது குறித்து விளக்கம் அளித்த நாசாவைச் சேர்ந்த டாக்டர்.டிமிட்ரி ஒசொ னோவ், அப்பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து, கதிரியக்கத் தன்மை உடைய ''ரேடான்'' வாயு கசிந்து இருக்கலாம்.ரேடான் வாயுவானது கதிரியக்கத்தை தன்மை உடையதால்,காற்றில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப் பட்டு இருக்கலாம்,இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருக்கிறது.என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் பூமிக்கு அடியில், எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.

இதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடை பட்ட பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட,புவியியல் வல்லுநர்களால்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை.

கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி,கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி, விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதில் குறிப்பாக,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,கடல் தளத்துடன்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.


இதே போன்று,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,கடல் தளத்துடன்,தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது என்ற கேள்வி எழுந்தது.

சில புவியியல் வல்லுநர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில்,எரிமலைச் செயல் பாட்டால் உருவாகி,இலேசான பாறைத்த தட்டாக உருவாகிய பிறகு,கிழக்கு திசை நோக்கி நகர்ந்து வந்ததாகவும்,அப்பொழுது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்த அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்த இடை வெளிக்கும் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்ததாகவும் நம்புகின்றனர்.

இதன் அடிப்படை யில்,கரீபியன் தீவுக்கு கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது,கரீபியன் பாறைத்த தட்டானது ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்று, உருகிப் பாறைக்கு குழம்பாகி,மேல் நோக்கி உயர்ந்து கரீபியன் பாறைத்த தட்டைத் துளைத்துக் கொண்டு,எரிமலைத் தீவுகளாக உருவானது என்றும் நம்புகிறார்கள்.
இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கரீபியன் பாறைத் தட்டானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாக புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

கரீபியன் பாறைத் தட்டானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த காலத்தில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,தற்பொழுது பாலம் போன்று இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,பூமிக்கு அடியில்,புதைந்து இருந்ததாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஆனால்,மத்திய அமெரிக்க நிலப் பகுதி நாடான நிகரகுவா மலைப் பகுதியில்,பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் பீர்பால் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஸ்ரீ வத்சா தலமை யிலான குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

அத்துடன்,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவில்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதைப்படிவங்களையும் தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இருப்பது நிரூபணம் ஆகிறது.

அதே போன்று ,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக,கரீபியன் தீவுகளானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையே தொடர்ச்சியாக இருந்து, அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நடை பெற்று இருப்பதும் நிரூபணம் ஆகிறது.

அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் ,கடலுக்கு அடியில் உருவாகக் கூடிய, பாம்புப் பாறைகளும் காணப் படுவதன் மூலம் ,கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு காலத்தில்,கடலடித் தரையாக இருந்த பிறகு, தற்பொழுது இருக்கும் உயரத்துக்கு, உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.

முக்கியமாக,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அப்படியென்றால்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, சில லட்சம் ஆண்டுகளாகவும்,அதே போன்று,கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது சில கோடி ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும்.


இந்த நிலையில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும், எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் ''புனித பீட்டர் மற்றும் புனித பால்' தீவுகளின் தொண்மையானது,''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாகவே,அதாவது,பூமி தோன்றிய காலம் முதலே,கடல் தளமானது நிலையாக இருப்பதும், கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த நிலையில்,ஐரோப்பாவில் வேல்ஸ் பகுதிக் கடலோரப் பகுதி பாறைகளின் 'பேலியோடிக்டின்' என்ற கடல் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

சமீபத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தொடரின்,அடிப் பகுதியில், பல்லாயிரம் அடி ஆழத்தில், ''ஆல்வின்'' என்ற நவீன நீர் மூழ்கிக் கலத்தின் மூலம் ஆய்வு செய்த பொழுது, 'பேலியோடிக்டின்' உயிரினத்தின் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.

இதே போன்று,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும், ட்ரிடான் ட குன்கா,அசோர் ,போன்ற தீவுகளில் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும், சிறிய திருகாணி வடிவிலான ''பேலியோ பேர்வேசா'' என்று அழைக்கப் படும் தரை வாழ் நத்தைகளின் இனவகைகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

கடல் பகுதியைக் கடக்க இயலாத இந்த நத்தைகளானது எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளில் அமைந்து இருக்கும் தீவுகளுக்குப் பரவியது என்பது புதிராக இருக்கிறது.

இதன் மூலம்,கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது,தற்பொழுது கடலுக்கு அடியில், மூழ்கிக் கிடக்கும் எரிமலைத் தொடரானது,கடல் மட்டத்துக்கு மேலே தொடர்ச்சியாக இருந்து, நத்தைகளின் இடப் பெயர்ச்சிக்கு பயன் பட்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.

முக்கியமாக அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதைக்காக நம்பப் படும் நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இதனால், அந்தப் பகுதியில்,கண்டங்களில் எல்லைப் பகுதியை புவியியல் வல்லுநர்களால் வரையறை செய்ய இயல வில்லை.இதன் காரணமாக அந்தப் பகுதியானது ''வரையறை செய்யப் படாத எல்லை பகுதி''(undefined boundary) என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த நிலையில்,சில புவியியல் வல்லுநர்கள்,கரீபியன் பாறைத்த தட்டானது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்று ஒரு புதிய விளக்கத்தை முன்வைத்து இருக்கின்றனர்.

இந்தக் கருத்தானது,''அட்லாண்டிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது.

இன்னும் சில புவியியல் வல்லுநர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற விளக்கத்தையும் முன்வைத்து இருக்கின்றனர்.இந்தக் கருத்தானது ''in situ மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது.

ஆக உண்மையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது, ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுநர்களுக்கு, உண்மையில் அந்தத் தீவுக்கு கூட்டமானது, எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாது.

இந்த நிலையில்,கடந்த 2010 ஆம் ஆண்டு,ஜனவரி பத்தாம் நாள்,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதில் லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர்.

அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதை போன்ற, மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

இதன் மூலம்,பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே, நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருக்கின்றன, என்பது ஆணித் தரமாக நிரூபணம் ஆகிறது.

00000000

கண்டங்கள்,கடல்,வளி மண்டலம் எப்படி உருவாகின?
ஆரம்பத்தில் பாறைக் குழம்புக் கோளமாக இருந்த பூமியானது, படிப்பு படியாகக் குளிரத் தொடங்கிய பொழுது முதலில் மேற்பரப்பு உருவானது.

தொடர்ந்து குளிர்ந்த பொழுது,பூமிக்கு அடியில்,பாறைத் தட்டுகள் உருவாகின.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்தன.பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் பூமிக்கு மேல் திரண்டதால் கடல் உருவானது.

அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் பூமிக்கு மேல் திரண்டதால் வளி மண்டலம் உருவானது.பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளானது அடர்த்தி குறைவாக இஇருந்ததால், அடர்த்தி அதிகமான பாறைக்குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால், கண்டங்கள் உருவாகியது.

அதாவது கடலில் பனிப் பாறைகள் உருவாகி உயர்வதை போன்று,பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பில் பாறைத்த தட்டுகள் உருவாகிக் கண்டங்களாக உயர்ந்து நிற்கின்றன.

விஞ்ஞானி.க.பொன்முடி.



Anto Simon and 2 others

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.