எனது புத்தகத்துக்கு ஒரு அறிமுக உரை.


தற்பொழுது,வட துருவப் பகுதியில்,குறிப்பாக அறுபத்தி ஆறரை டிகிரி வட அட்ச ரேகைப் பகுதிக்குள் இருக்கும் பனிப் பிரதேசங்களில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது,விலங்கியல் மற்றும் புவியியல் வல்லுனர்களுக்குப் பெரும் புதிராக இருக்கிறது.
ஏனென்றால்,டைனோசர்களானது,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யக் கூடிய ஊர்வன வகை விலங்கினம்,ஊர்வன வகை விலங்கினங்களால் ,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போல் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.
எனவேதான் துருவப் பகுதிகளில்,நரி,ஓநாய்,கரடி,முயல்,மான் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் படுகின்றன.
குறிப்பாக ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி வெப்ப நிலை தேவை.ஆனால் பனிப் பிரதேசத்தில் ஆண்டு சராசரி வெப்ப நிலையே பத்து டிகிரி.எனவே ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன என்பது விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.
முக்கியமாக,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ந்து பகலும்,அதே போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது,சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழ்ந்து இருக்க இயல்லாது.
எனவே ஆர்க்டிக் பகுதியில் அடர்ந்த காடுகள் உருவாகி இருக்க இயலாது.முக்கியமாக டைனோசர்கள் யானைகளைப் போலவே கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது மட்டுமின்றி,டைனோசர்களானது,யானைகளை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது.
எனவே பனிப் பிரதேசத்தில் எப்படி காடுகளும்,டைனோசர்களும் வாழ்ந்தன என்பது விடுவிக்கப் பட வேண்டிய புதிராக இருக்கிறது.
இது போன்று,குளிர் மண்டலப் பகுதியில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,வாழக் கூடிய,வளரக் கூடிய,தாவர மற்றும் விலங்கினங்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்களும் விலங்குகளும் வாழ்ந்த காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,மெதுவாக நகர்ந்து துருவப் பகுதிகளுக்கு வந்து இருக்கலாம் என்று,கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால்,இந்த கொள்கையில் படி,டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்ட,நிலப் பகுதிகள் எல்லாம் கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது,என்பதால்,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதைப் படிவங்கள் அறிவியல் உலகில் பெரும் புதிராக இருக்கிறது.
எனது விளக்கம்-
நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,உள்ள கடல் தரையில் எண்ணை எடுப்பதற்காகத் துளையிடப் பட்ட பொழுது,கிடைத்த பாறைப் பகுதிகளில்,டைனோசர்களின் புதைப் படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில்,ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் படிவுகளில்,மரங்களின் புதைப் படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று,கலிபோர்னியா,கரீபியன் மற்றும் கலாபாகஸ் தீவுப் பகுதிகளிலும்,கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,பல கடலடி மலைகள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டத்துக்கு மேலாக,தீவுகளாக இருந்ததாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் டைனோசர்களின் காலத்தில்,கடல் பட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,அதிகமாக இருந்ததால்,துருவப் பகுதிகளிலும் அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில்,அடர்ந்த காடுகள் உருவாகி இருக்கிறது அதில் டைனோசர்களும் வாழ்ந்து இருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் குறைந்து இருக்கிறது,அதனால் துருவப் பகுதிகளில்,பனிப் படலங்கள் உருவாகியதால் காடுகள் அழிந்தன அதனால் டைனோசர்களும் அழிந்தன.
முக்கியமாக,டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததால், டைனோசர்களானது,பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.அதன் பிறகு கடல் மட்ட உயர்வால், கண்டங்களும் தீவுகளும் கடலால் பிரிக்கப் பட்டன.
ஆனால்,தற்பொழுது,கண்டங்களிலும் தீவுகளிலும்,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாகக், கண்டங்களானது கண்டங்களைச் சுற்றி இருக்கும்,கடல் தளங்களுடன் நகர்ந்து,தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,உலகெங்கும் நிகழ்ந்த லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட ‘உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படத்தில்’’ ,தனித் தனிப் பகுதிகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தரைப் பகுதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
,கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பதும்‘உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம், தெரிய வந்துள்ளது.
00000000000000000
குறிப்பாக உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,தனித் தனிக் கடல் தளங்களுடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, ‘உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பிடுவதாகக் கூறப் படும் ஒரு வரை படத்தை,நாசாவைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வரை படத்தில்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியைப் புவியியல் வல்லுனர்கள், தனித் தனியாகப் பிரித்துக் காட்ட வில்லை. அத்துடன் ’’இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,தெற்காசிய சுனாமி குறித்து நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,முதலில் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று விளக்கம் தெரிவித்த பிறகு அதை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், இரண்டாவதாக வெளியிட்ட அறிக்கையில்,ஆஸ்திரேலியாக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது, என்று முன்னுக்குப் பின் முரணாக விளக்கம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதே போன்று,வட அமெரிக்காவும்,தென் அமெரிக்காவும்,தனித் தனிக் கடல் தளங்களுடன்,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே எப்படி உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்தது, என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்த இடை வெளி வழியாக நுழைந்ததாகவும்,தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறுகின்றனர்.
வேறு சில புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில், எரிமலைச் செயல் பாட்டால் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்த இடை வெளி வழியாக நுழைந்ததாகவும்,தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறுகின்றனர்.
இன்னும் சில புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகியதாகவும், விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுப் பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், வெளியிட்ட அறிக்கையில்,கரீபியன் பாறைத் தட்டுக்கும் அமெரிக்கக் கண்டத்தின் பாறைத் தட்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று,அடிப்படை ஆதாரமற்ற கற்பனையான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
உண்மையில்,புவியியல் வல்லுனர்களுக்குக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில்,என்ன நடக்கிறது என்பது தெரிய வில்லை என்பதே உண்மை.  
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலை ஏற்பட்ட வெடிப்புகளால்,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும்,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குப் புவியியல் வல்லுனர்களால்,கண்டத் தட்டு நகர்சிக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற முடிய வில்லை.
அதே போன்று,சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்  மற்றும் சுனாமிகளுக்கும், புவியியல் வல்லுனர்களால்,கண்டத் தட்டு நகர்சிக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற முடிய வில்லை.
மேலும் எனது ஆய்வில்,கடல் மட்ட உயர்வுக்கு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் தொடர்ந்து கலந்து கொண்டு இருப்பதால் கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
முக்கியமாகப் பூமியின் பெரும் பகுதியானது பாறைக் குழம்பால் ஆனதாலும்,பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதாலும்,பூமிக்குள் நீர் சுரப்பதும் தொடரும் என்பதால் கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து மலைகள் உள்பட நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூடப் பட்டு,எதிர் காலத்தில் பூமியானது ஒரு நீர்க் கிரகமாக உருவாகும் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, எனது ஆராய்ச்சி நூல்,அறிவியல் வளர்ச்சிக்கம்,மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி போன்ற பேரிடர்களைப் புரிந்து கொள்ளவும் பயன் படும் என்று நம்புகிறேன்.

-விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.