எரிமலைத் தீவுகள் ஏன் மூழ்கின?



பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில், குயாட்டுகள் என்று அழைக்கப் படும் ,சம தள மலைகள் காணப் படுகின்றன.

இந்த நிலையில்,துளையிடும் கருவிகள் மூலம்,அந்தக் குயாட்டுகளின் மேல்பகுதியில் துளையிட்டு எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் வளரக் கூடிய,பவளத் திட்டுகள் மற்றும் அலைகளால் அரித்து உருவாக்கப் பட்ட,கோள வடிவக் கற்கள் இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில்,அந்த சமதள மலைகளானது, ஒரு காலத்தில்,குறிப்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில்,கடல் பரப்பின் மேல், தீவுகளாக இருந்திருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்து இருக்கின்றனர்.

ஆனாலும், அந்தத் தீவுகள் மூழ்கியதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

குறிப்பாக, ஆழமான பசிபிக் கடல் பகுதியில் ,பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகி இருக்கும் பவளத் திட்டுகள் பற்றிய விஞ்ஞானிகளின் புரிதலுக்கு, நீண்ட வரலாறு உண்டு.

குறிப்பாக, பவளத் திட்டுகளானது, ஆழம் குறைவான கடல் பகுதியில் வளரக் கூடியது என்பதால்,பவளத் திட்டுகளானது, கடலோரப் பகுதியிலேயே உருவாகும் என்று முதலில் நம்பப் பட்டது.

குறிப்பாகக் குண்டூசித் தலை அளவுக்கு இருக்கும் பவள உயிரினமானது ஒரு மெல்லுடலி ஆகும்,எனவே பவளங்கள் தங்கள் உடல் பாதுகாப்புக்காகச் சுண்ணாம்புப் பொருள்களைச் சுரக்கக் கூடியது.

பொதுவாகப் பவளங்களானது,சூரிய ஒளி உதவியுடன் வாழக் கூடிய நுண்ணுயிரிகளை உண்டு வாழ்வதால்,பவளங்கள் ,ஆழம் குறைவான கடலோரப் பகுதியிலேயே வாழ இயலும்.

பவளங்கள் இறக்கும் பொழுது,அதன் உடலில் இருக்கும் சுண்ணாம்புப் பொருட்களானது,அதன் வாழிடத்தில் படிவதால்,பவளத் திட்டுகள் உருவாகுகின்றன.அந்தத் திட்டுகளின் மேல் ,புதிய பவளங்கள் வாழத் தொடங்குகின்றன.

அதன் பிறகு அந்தப் புதிய பவளங்களும் இறக்கும் பொழுது,அதன் உடலில் இருக்கும் சுண்ணாம்புப் பொருட்களும், படிவதால், பவளத் திட்டுகளானது, மெதுவாக வளர்கின்றன.

இவ்வாறு வளரும் பவளத் திட்டுகள் வளரும் வேகமானது,கடல் மட்டம் உயரும் வேகத்துக்கு இணையாக இருந்தால்தான்,பவளங்களால் உயிர் வாழ முடியும்.

அவ்வாறு இல்லாமல்,கடல் மட்டம் உயரும் வேகத்துக்கு இணையாகப் பவளத் திட்டுகள் வளராமல் போனால்,பவளங்கள் இறந்து விடும்.

இந்த நிலையில்,முதன் முதலில்,பசிபிக் பெருங் கடல் பகுதியில்,பாய் மரக் கப்பலில் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய மாலுமிகள்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில்,பல கிலோ மீட்டர சுற்றளவில் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பது குறித்து தெரிவித்தும், ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு அந்தச் செய்தியானது புரியாத புதிராக இருந்தது.

இந்தப் புதிருக்கு டார்வின் ஒரு விளக்கத்தைக் கூறினார்.





அதாவது,கடல் நடுவில் இருக்கும் எரிமலைத் தீவுகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கும் நிலையில்,அந்த எரிமலையானது மெதுவாக பூமிக்கு அடியில் இறங்குவதாகவும்,அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றிலும் உருவாகி இருந்த பவளத் திட்டுகளானது,கடல் மட்டம் உயரும் வேகத்தில்,வளர்ந்து இருப்பதாகவும், டார்வின் விளக்கம் தெரிவித்தார்.

டார்வினின் விளக்கம் உடனே ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இது நடந்து நூறாண்டுகளுக்குப் பிறகு,குறிப்பாக இரண்டாம் உலகப் போர் நடை பெற்ற பொழுது,நீர் மூழ்கிக் கப்பல்களின் பயணத்துக்கு உதவக் கூடிய, கடல் தரையின் வரை படத்தை ஹாரி ஹெஸ் என்ற புவியியல் வல்லுநர் தயாரித்தார்.

குறிப்பாக அவர்,சோனார் கருவி மூலம், கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்தி ,அந்த ஒலி அலைகளானது கடல் தரையில் பட்டு எதிரொலிக்கப் பட்டுத் திரும்ப வரும் நேர வித்தியாசத்தைப் பதிவு செய்ததன் மூலம்,கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்தார்.

அந்தக் காலத்தில்,ஆல்பிரட் வெக்னரின் நகரும் கண்டங்கள் கருத்து நம்பப் பட்டாலும்,கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் படாமல் இருந்தது.

இந்த நிலையில்,ஹெஸ்,கடலுக்கு அடியில்,கண்டங்களைச் சுற்றிய படி,பல்லாயிரம் கிலோ மீட்டர் ,தொலைவுக்கு,எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதை அறிந்தார்.

அதன் அடிப்படையில்,ஹெஸ்,அந்தக் கடலடி எரிமலைப் பகுதியில், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பறைக் குழம்பானது,மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடல் தளங்களுடன், கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹெஸ் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

அவ்வாறு, கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு 
இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால்தான் நில அதிர்ச்சிகள் உருவாகுவதாகவும் ஹெஸ் கூறினார்.
இந்த நிலையில்,கடந்த,1963 ஆம் ஆண்டு முதல் ,1998 ஆம் ஆண்டு வரையிலான ,35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,ஒரு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டார்கள்.




அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே,கடல் தளமானது தனித் தனிப் பகுதிகளாக அல்லாமல் ஒரே தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தளமும், கண்டங்களும்,நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக ஹெஸ்,சோனார் கருவி மூலம்,பசிபிக் பெருங் கடலுக்கு அடியில், நாலாயிரம் அடி ஆழத்தில்,பல சம தள மலைகள் இருப்பதையும் அறிந்தார்.

அந்த சம தள மலைகளுக்கு, குயாட்டு என்ற புவியியல் வல்லுனரின் பெயரைச் சூட்டினார்.

இந்த நிலையில்,துளையிடும் கருவிகள் மூலம், குயாட்டுகளின் மேல் துளையிட்ட பொழுது ,கிடைத்த படிவுகளை ஆய்வு செய்த பொழுது, அந்தப் படிவுகளானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில்,வாழ்ந்த பவளத் திட்டுகளின் படிவங்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அந்தப் படிவுகளில் ,கடல் அலைகளால் அரிக்கப் பட்டதால் உருவான ,கோள வடிவக் கற்கள் இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில்,தற்பொழுது பசிபிக் பெருங் கடலுக்கு அடியில்,நாலாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், அந்த சம தள மலைகளானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக இருந்ததாக ,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனாலும், அந்தத் தீவுகள் மூழ்கியதற்கான காரணம் குறித்து ,ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

சில ஆராய்ச்சியாளர்கள்,கடல் மட்டத்துக்கு மேலே இருந்த எரிமலைகளானது, மெதுவாகப் பூமிக்குள் இறங்கிய பொழுது, எரிமலையின் உச்சிப் பகுதியானது,கடல் அலைகளால் அரிக்கப் பட்டதாகவும் , அதனால் அந்த எரிமலைகளானது, சம தள மலைகளாக உருவாகியதாகவும்,அதன் பிறகு,அந்த சம தள மலைகளானது, கடலுக்குள் மூழ்கிய பொழுது,அதன் மேல் பவளத் திட்டுகள் உருவாகி வளர்ந்தது என்றும், நம்புகின்றனர்.

இந்த நிலையில்,பசிபிக் பெருங் கடலின் மேற்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ,பவளத் திட்டுகள் இருப்பதன் அடிப்படையில்,அந்தப் பகுதியில்,தனித் தனியாக எரிமலைகள் இறங்கியதற்குப் பதிலாக,அந்த எரிமலைப் பகுதியே,ஒரு காலத்தில் ஒரு மேடாக இருந்த பிறகு, மொத்தமாக இறங்கி இருக்கலாம் என்றும்,டார்வின் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார்.

எரிமலைகளும், பவளத் திட்டுகளும்,குயாட்டுகளும் நிறைந்த அந்தப் பகுதியானது,'டார்வின் மேடு'( Darwin rise ) என்று அழைக்கப் படுகிறது.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள்,அந்த எரிமலைகளானது,ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பிறகு,பசிபிக் கடல் தளமானது மெதுவாக நகர்ந்ததால்,ஆழ் கடல் பகுதிக்கு வந்ததால்,மூழ்கி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.



எனது விளக்கம்-

டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமே, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறையாக உருவான பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்ததால்,கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டார் உயர்ந்து இருக்கிறது.

இவ்வாறு, கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடல் மட்டத்துக்கு மேலாக இருந்த எரிமலைகளானது ,கடலுக்கு அடியில் மூழ்கியது.

அவ்வாறு, அந்த எரிமலைகளானது, கடலுக்கு அடியில் மூழ்கிய பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றிலும்,பவளத் திட்டுகள் உருவாகி வளர்ந்து இருக்கின்றன.

இந்த நிலையில்,பூமிக்கு அடியில் சில பகுதிகள் வேகமாகக் குளிர்ந்ததால்,அதிக அளவில் வெளியேறிய நீரால், கடல் மட்டமானது வேகமாக உயர்ந்ததால்,பவளத் திட்டுகள் கடலுக்குள் மூழ்கி இருக்கின்றன.

கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததற்கு ஆதாரங்கள்-

நார்வே நாட்டுக் கடல் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனோசர்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

அதே போன்று, இந்தியப் பெருங் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் ,மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில்,ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் புதை படிவங்களையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.