கிரகங்கள் ஏன் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன?

நிலவானது, சூரியனை, பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு நிலவானது, ஏன் பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது, என்பதற்கு இது வரை விளக்கம் கூறப் படவில்லை.
இவ்வாறு நிலவானது, பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நிலவானது பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமியானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,விண்வெளியில் வினாடிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனைத் தொடர்ந்து கொண்டு இருப்பதே காரணம்.
அதாவது விண்வெளியில் சூரியனானது, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனை, மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை ,சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் திசைக்கு செங்குத்து திசையில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,கிரகங்கள் எல்லாம் சூரியனை தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.மாறாக அறுபத்தி இரண்டு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளமானது, கிரகணத் தளம் என்று அழைக்கப் படுகிறது.
ஏனென்றால்,இவ்வாறு கிரகங்கள் ஒரே தளத்தில் வலம் வருவதால்தான், சில உள்வட்டக் கிரகங்களானது, சூரியனுக்கும் வெளி வட்டக் கிரகங்களுக்கும் இடையில் வலம் வந்து, கிரகணங்கள் ஏற்படக் காரணமாகிறது.
ஆனாலும் எல்லாக் கிரகங்களும், இந்தப் பொது அட்சிலேயே வலம் வராமல், ஓரிரு டிகிரி விலகிச் சென்று வலம் வருகின்றன.
உதாரணமாக,சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகமானது,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வாக,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இதே போன்று,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் புளூட்டோ கிரகமானது,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து பதினேழு டிகிரி சாய்வாகச் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
புளுட்டோவுக்கும் அப்பால் இருக்கும் ஏரிஸ் என்ற குறுங்கிரகமானது,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து நாற்பத்தி நான்கு டிகிரி சாய்வான தளத்தில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு கிரகங்கள் சூரியனை சாய்வான தளத்தில் வலம் வருவதற்கு, விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருப்பதே காரணம்.
அதாவது கிரகங்கள் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.
எனவே கிரகங்களானது, சூரியனை விரட்டிச் சென்று வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவதால்,கிரகங்களின் சுற்றுத் தளமானது சாய்வாக அமைந்து விடுகிறது.
இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன்.
உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள்.
என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்.
அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாரிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும்.
இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது.
இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள்.
என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும்.
இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது.


Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.