கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஒரு தவறான விளக்கம் .

குழப்பத்தில் முடிந்த கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம்.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள, மெசோசாரஸ் என்று அழைக்கப் படும்,முதலை போன்ற,ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர்,கடற் கரையோரம் வாழ்ந்த ஒரு விலங்கால் ,நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து ,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்க முடியாது.
எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டங்களாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று விளக்கம் கூறினார்.
ஆனால் அவரின் விளக்கத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை.
மாறாக புயல் மற்றும் சூறாவளியால் ,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட தாவரங்கள் மற்றும் மரக் கிளைகளின் மேல் இருந்த படி,விலங்கினங்கள்,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம்.என்று விளக்கம் கூறினார்கள்.
இந்த நிலையில் ,வட துருவப் பகுதியில்,குறிப்பாக கடுங் குளிர் நிலவும்,பனிப் பிரதேசமான,ஆர்க்டிக் வளையப் பகுதியில்,அமைந்து இருக்கும்,அறுபது சதவீத நிலப் பகுதியானது,பனியாறுகளால் மூடப் பட்டு இறக்கும்,ஸ்பிட்ஸ் பெர்ஜென் என்ற தீவில், வெப்ப மண்டலப் பகுதியில் வளரக் கூடிய ,கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதை வெக்னர் சுட்டிக் காட்டினார்.
அதன் அடிப்படையில்,வெப்ப மண்டலப் பகுதியில் வளரக் கூடிய தாவரங்கள் எப்படி பனிப் பிரதேசத்தில் வளர்ந்தன?என்று வினா எழுப்பினார் வெக்னர்.
இதற்கு, முன் ஒரு காலத்தில் அந்தத் தீவுப் பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று விளக்கம் கூறினார் வெக்னர்.
அதைத் தொடர்ந்து, ஒத்த கால நிலையில் வாழக் கூடிய ,தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட,இடங்கள்,அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை,வெக்னர் மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அந்த நிலப் பரப்புக்கு,பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.அந்தக் கண்டத்தை சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பாஞ்சியாக் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததாகவும்,அதனால் லாரேசியா ,மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு கண்டங்கள் உருவானதாகவும்,அதில் லாரேசியாக் கண்டமானது,வட பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும் ,அதே போன்று கோண்டு வானாக் கண்டமானது,தென்பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,வெக்னர் கூறினார்.
அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வடபகுதி லாரேசியாக் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களை உள்ளடக்கிய ,யூரேசியக் கண்டம் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் ,வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதியை நோக்கி நகர்ந்து சென்ற கோண்டுவானாக் கண்டமானது ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தனித் தனியாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களாக உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
ஆனால்,கடல் தளத்தைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் படவில்லை.அதே நேரத்தில்,கண்டங்களைச் சுற்றி எரிமலைத் தொடர்கள் இருப்பதுடன்,அந்த எரிமலைப் பகுதிகளில்,அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும்,நில அதிர்ச்சிகளும்,ஏற்படுவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் ஒரு புதிய விளக்கத்தைப் புவியியல் வல்லுனர்கள் முன்மொழிந்தனர்.
அதாவது,,கண்டங்கள் மட்டும் நகர வில்லை,மாறாகக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,வெப்பமான பாறைக் குழம்பானது,மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,கடல் தளங்களுடன்,கண்டங்களும்,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக,புதிய விளக்கத்தைக் கூறினார்கள்.
இவ்வாறு ,கடல் தளங்களுடன் கண்டங்கள் நகரும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படும் பொழுது,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று,கண்டங்களுக்கு அடியில்,கடல் தளமானது ,நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
ஆனால் இந்தக் கருத்தின் படி, வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களின் வட பகுதிகளானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும், ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
இந்த நிலையில்,ஆர்க்டிக் வளையப் பகுதியில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குப் புவியியல் வல்லுனர்களால்,சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
ஏனென்றால் ,பூமியானது தன் அட்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆறு மாத காலம் தொடர்ந்து ,இரவும் நீடிக்கிறது.
இதில் குறிப்பாக, ஆறு மாத காலம்,தொடர்ந்து இரவு,நீடிக்கும் பொழுது,வெப்ப நிலையானது,மைனஸ் முப்பது டிகிரி வரை செல்கிறது.
இது போன்ற வெப்ப நிலையில்,டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய ,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க முடியாது,
அதே போன்று,டைனோசர்களின் முட்டைகளும் பொரிய முடியாது.


கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஒரு தவறான விளக்கம் .




கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஒரு தவறான விளக்கம் என்பது பல ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் ஒன்று-

முதலாவதாக,தென் துருவ அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும்,தொடர்ந்து புதிய கடல் தளமானது,உருவாகி,வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும்,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால்,அண்டார்க்டிக்காக் கண்டமோ,தென்துருவப் பகுதியில்,குறைந்த சுற்று வட்டப் பகுதியில் அமைந்து இருக்கிறது.எனவே குறைந்த சுற்று வட்டப் பகுதியில்உருவாகும்,புதிய கடல் தளத்தால்,அதிக சுற்று வட்டப் பகுதியான,வட பகுதியை நிரப்ப இயலாது.

எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் ,தொடர்ந்து புதிய கடல் தளமானது,உருவாகி,வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும்,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,கூறப் படும் விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கமாகும்.

அதே போன்று, அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் ,தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி,அண்டார்க்டிக்காக் கண்டத்தை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,கூறப் படுகிறது.

இவ்வாறு அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றி,அதிக சுற்றுவட்டப் பகுதியில்,தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி,குறைந்த சுற்று வட்டப் பகுதியில் இருக்கும்,அண்டார்க்டிக்காக் கண்டத்தை நோக்கி நகர்ந்தால்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு,கடல் தளப் பாறையானது நொறுங்கி விடும்.

எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றி,அதிக சுற்றுவட்டப் பகுதியில்,தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி,குறைந்த சுற்று வட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும்,முற்றிலும் தவறான விளக்கமாகும்.

இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,தொடர்ந்து புதிய கடல் தளமானது,உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,தவறான விளக்கம் கூறப் படுகிறது.

ஆதாரம் இரண்டு -

இந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, ஒன்றாக இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக்காக் கண்டத்துடன்,இணைந்து இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

அதன் பிறகு,அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ச்சியாகப் பாறைக் குழம்பானது,மேற்பகுதிக்கு வந்து,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

அதில், வடக்கு நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் நகர்ந்த பொழுது,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வடக்கில் இருந்த கடல் தளமானது,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியி்ல் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இவ்வாறு இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,கடல் தளமானது நகர்ந்து சென்ற பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பத்தால்,உருகி, மறுபடியும் பாறைக் குழம்பாகி,மேல் நோக்கி உயர்ந்து ,கடல் தளப் பாறைகளைப் பொத்துக் கொண்டு,எரிமலைகளாகஉருவாகின்றன என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளுக்கு தென்பகுதியில்,கடல் தளத்தில்,டிரெண்செஸ் என்று அழைக்கப் படும் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி இருக்கின்றன.

அதற்கு,அந்தப் பகுதியில்,கடல் தளமானது,பூமிக்கு அடியி்ல் சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த விளக்கம் உண்மையென்றால்,அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் ,கடல் தளமானது நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதால்,அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும்,கடல் தளத்தி்ன் மேல் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருக்க வேண்டும்.

அதே போன்று அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும்,எரிமலைகளும் உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும், அவ்வாறு கடல் தளத்தி்ன் மேல்,நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி இருக்க வில்லை.

அதே போன்று அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும்,எரிமலைகளும் உருவாகி இருக்க வில்லை.

இதே போன்று, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் ,புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி,அந்தக் கண்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில்,அந்தக் கண்டத்தைச் சுற்றிலும், அவ்வாறு கடல் தளத்தி்ன் மேல்,நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி இருக்க வில்லை.

அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,எரிமலைகளும் உருவாகி இருக்க வில்லை.

முக்கியமாக, ஒரு கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி,அந்தக் கண்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதால்,அந்தக் கண்டமானது எந்தத் திசையை நோக்கியும் நகர இயலாது.

எனவே கண்டங்களைச் சுற்றி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பானது வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும்,எதேரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது,அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கம் .

ஆதாரம் மூன்று -
வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள்.

அதே போன்று கடல் தளங்களுடன், கண்டங்கள் நகர்ந்து செல்லும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் படுவதால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும்,எரிமலைத் தொடர்கள் உருவாகின்றன என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த விளக்கம் உண்மையென்றால் கடல் தளத்தி்ன் மேலும்,கண்டங்களின் மேலும்,உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ஒன்றுக் கொன்று இணையாக,ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,பசிபிக் கடல் தரையின்,மேல் அருகருகே உருவாகி இருக்கும் ,ஹவாய் மற்றும்,லைன் எரிமலைத் தொடர்களானது ,ஒன்றுக் கொன்று இணையாக,ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.

இதே போன்று வட கிழக்கு திசையை நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,இந்தியக் கண்டத்திற்கு இரு புறமும்,உருவாகி இருக்கும்,எரிமலை தொடர்களும்,ஒன்றுக் கொன்று இணையாக,ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.

குறிப்பாக இந்தியாவிற்கு மேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும்,லட்சத் தீவுகளானது வளைவான பாதையில் உருவாகி இருக்கிறது.அதே நேரத்தில், இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியில் ,கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும்,தொண்ணூறு கிழக்கு கடலடி எரிமலைத் தொடரானது,நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்கிறது.

இதே போன்று,ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வட மேற்குப் பகுதியில்,உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரானது,மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.

அதே நேரத்தில்,ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு தென் மேற்குப் பகுதியில்,உருவாகி இருக்கும்,கேமரூன் எரிமலைத் தொடரானது,தென்மேற்கு திசையில் இருந்து,வட கிழக்கும் திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.

இதே போன்று,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட மேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் ,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,அனாகிம் எரிமலைத் தொடரும்,கரிபால்டிஎரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக,ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,ஒன்றுக் கொன்று இணையாக,ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,இணையற்ற முறையில் உருவாகி இருக்கும்,எரிமலைத் தொடர்கள் மூலம்,கடல் தரையும், கண்டங்களும், நிலையாக இருப்பது,ஆணித் தரமாக ,நிரூபணமாகிறது.

ஆதாரம் நான்கு -

அதே போன்று,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில்,கடலுக்கு அடியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி,பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு, நீண்டு இருக்கும்,கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ச்சியாகப் பாறைக் குழம்பானது,மேற்பகுதிக்கு வந்து,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததால்,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில்,அந்தக் கடலடிஎரிமலைத் தொடரின் உச்சிப் பகுதியாக இருக்கும்,தீவில்,இருக்கும்,பாறைகளின் தொன்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை,அமெரிக்க நாட்டின் புவியியல் 
வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம் ,கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக ,அதாவது,பூமி தோன்றிய காலம் முதல்,கடல் தரையும்,கண்டங்களும்,நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

ஆனால், இந்த ஆதாரத்துக்கு முற்றிலும் முரணாக புவியியல் வல்லுனர்கள்,கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளில்,நாலைந்து முறை,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து,பிரிந்து நகர்ந்து இருப்பதாக நம்புகின்றனர்.

ஆதாரம் ஐந்து -
கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருக்கிறது.

குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின், வட பகுதியில் இருக்கும்,கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில்,புதிய கடல் தளம்,உருவாகி,மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

அதில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன்,வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

அதே போன்று,அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில் இருக்கும்,கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில்,புதிய கடல் தளம்,உருவாகி,வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

அதில்,வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன்,தென் அமெரிக்கக் கண்டமானது, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து செல்லும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில்,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,கடந்த ,1993 ஆ்ம் ஆண்டு முதல், 1998 ஆம் ஆண்டு வரையிலான,35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள்,ஏற்பட்ட இடங்களைக் குறித்து,ஒரு வரை படத்தைத் தயாரித்தனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையிலான கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இதன் மூலம்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையிலான கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தரையுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.