பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நேபாளத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

நேபாளம் உள்ளிட்ட இமய மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.இவ்வாறு இமய மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு தற்பொழுது அறிவியல் அடிப்படை ஆதாரமற்ற கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது.
nep6.jpgnep6.jpg
அதாவது இந்திய நிலப் பகுதியானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆசியக் கண்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு இருப்பதால் ஏற்படும் அழுத்தத்தால் இமய மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாக நம்பப் படுகிறது.
latejurassicmap.jpglatejurassicmap.jpg
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இணைந்து தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.


அதிலும் குறிப்பாக அண்டார்க்டிக் கண்டதைச் சுற்றிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததகவும்,அவ்வாறு உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த கடல்தளத்துடன் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.

தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கிறது.

எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டிக் கொண்டு இருந்த நிலையில் தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விலகி இருக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
eli3eli3
இவ்வாறு கண்டங்கள் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும்  பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.

இதன் படி ,உண்மையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கடல் தளமும்  கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே இந்திய நிலப் பகுதியானது கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.
vip45vip45
vip46vip46
dtamap1.pngdtamap1.png
இந்த நிலையில் கண்டங்களின் எல்லைகளைக் குறித்து,  நாசா வெளியிட்ட வரை படத்திலும்,  இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

65myaEarth.jpg65myaEarth.jpg
65earth65earth

இன்னும் சொல்லப் போனால் கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படும் இந்தக் கருத்தின் படி ,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது,இந்தியப் பெருங் கடலில்,ஒரு தீவுக் கண்டமாக வட கிழக்கு திசையை நோக்கி நகம் வளரும் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படுகிறது.

அப்பொழுது இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் கடல் பகுதி இருந்த தகவும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் இந்தியா மோதியதாகவும் அதன் விளைவாக, இந்தியாவுக்கும் ஆசியக் கண்டத்துக்கும் இடையில் இருந்த கடல் தரைப் பகுதியானது புடைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்ந்ததால் இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.அதனால்தான் இமய மலைப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு பாலூட்டி வகை விலங்கினத்தைச் சேர்ந்த ஒரு விலங்கின் புதை படிவங்கள் தென்னிந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நஸ்கல் என்ற கிராமத்தில் இருந்து பஞ்சாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர்,அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.இதன் அடிப்படையில் அவர் நேட்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.

nature reference.pngnature reference.png

எனவே இந்திய நிலப் பகுதியானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பது நில அதிர்ச்சி வரை பட ஆதாரம் மூலமாகவும்,புதை படிவ ஆதாரம் மூலமாகவும் நிரூபணமாகிறது.


இந்த நிலையில் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் தயாரித்த நில அதிர்ச்சி வரை படத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது பதிவாகி இருக்கிறது.

அதே போன்று இமய மலைப் பகுதியிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் பதிவாகி இருக்கிறது.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே இமய மலைப் பகுதிகளில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.


Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.