தீவு மக்களைக் காப்பாற்றிய சுனாமி கதை.

eqtsu1.jpgeqtsu1.jpg
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த சுனாமியில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரழந்தனர்.அதற்கு முன்பு சுனாமி என்ற வார்த்தையே தமிழக மக்களுக்கு தெரியாதிருந்தது.

விநோதமாக,அந்த சுனாமியின் பொழுது சுமத்ரா தீவுக்கு அருகில்  இருந்த சிமிழு என்ற தீவில் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்தனர்.அந்தத் தீவின் மொத்த ஜனத் தொகை 78,000 ,அதன் காரணம் குறித்து செய்தியாளர்கள் அந்தத் தீவுக்குச் சென்று விசாரித்தனர்.

நில அதிர்ச்சி ஏற்பட்டதும் கடல் நீர் பின்னோக்கி செல்லத் தொடங்கியது.அப்பொழுதே சுனாமி வரப் போகிறது என்று தெரிந்து விட்டது.உடனே மேட்டுப் பகுதியை நோக்கி ஓடினோம் என்று தெரிவித்தார்கள்.

அதனால் ஏழு பேர் மட்டுமே சுனாமியில் இறந்தனர்.அவர்களில் பலர்  ஓட முடியாத அளவுக்கு வயதானவர்களாகவும் நோயாளிகளாகவும் இருந்தனர்.

எப்படி உங்களுக்கு சுனாமி வரப் போகிறது என்பது தெரிந்தது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஹாரிமன் என்ற தீவு வாசி,ஏற்கனவே நடந்த சுனாமி அனுபவத்தைக் கூறினார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக 1907 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதும் கடல் நீர் பின்னோக்கிச் சென்றது.

அதனால் கடல் தாவரங்கள் மற்றும் மீன்கள் தெரிந்தது,உடனே அதைச் சேகரிப்பதற்காக தீவு வாசிகள்,கடலை நோக்கிச் சென்றனர்.மீன்களை சேகரித்துக் கொண்டு  இருந்த பொழுது, கடல் நீர் வேகமாக வந்து, அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டோம்.குழந்தைகள் விளையாடும் பொழுது கூட'' கடற் கரையில் மெலிதாக நிலம் அதிர்ந்து... கடல் பின்னோக்கிச் சென்றால் என்ன செய்வாய் ? என்று கேள்வி கேட்டு ,உடனே மலையை நோக்கி ஓடுவேன், என்று குழந்தைகளை உரக்கச் சொல்லச் சொல்லுவோம்.

அதே போன்று கடந்த 2004 ஆம் ஆண்டும், கடற் கரையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது நிலம் அதிர்ந்தது,கடலும் பின்னோக்கிச் சென்றது,உடனே அந்தக் கதை நினைவுக்கு வந்ததால், அனைவரும் மலையை நோக்கி ஓடியதால் பிழைத்தோம்,என்று சிமிழு தீவு வாசியான,ஹாரிமன் கூறினார்.

மெலிதாக நிலம் அதிர்ந்து, கடல் பின்னோக்கிச் சென்றால், என்ன செய்வாய் ? 
wit18.pngwit18.png


சுனாமியில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயக் குடும்பம்.

wit22.jpgwit22.jpg
wit21.jpgwit21.jpg

wit23.jpgwit23.jpg
Mother cries near bodies of her children, killed when giant waves hit Nagappattinam, in southern Indian state of Tamil Nadu. They did not have to die. (Photo: Gautam Singh/AP)
wit25.jpgwit25.jpg

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.