தமிழகத்திற்கு ஆசிய வகை டைனோசர் எப்படி வந்தது ?

tamildino5.pngtamildino5.png
tamildino.jpgtamildino.jpg
( காவிரிப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்ட ட்ரூடோண்டிட் டைனோசரின் பற்கள்,படம்.நேச்சர் )
tamildino1tamildino1
(லேட் கிரட்டேசியஸ் கால கட்டத்தில் கண்டங்கள் இருந்ததாக நம்பப் படும் இடங்கள் மற்றும் ட்ரூடோண்டிட் புதை படிவங்கள் காணப் பட்ட இடங்கள், மஞ்சள் வட்டங்கள்- ட்ரூடோன்டிட் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள். படம் நேச்சர்)
தமிழகத்தில் காவிரிப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் எலும்புப் புதை படிவங்கள் மூலம், இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது. 

தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில் காவேரிப் படுகையில், லேட் கிரெட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில், ,ஆதாவது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில் வாழ்ந்த,  நெருப்புக் கோழி போன்ற உருவம் உடைய,ட்ரூடோன்டிட் டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.


ட்ரூடோண்ட்டிட் என்று அழைக்கப் படும் இவ்வகை டைனோசர்கள் ஐம்பது கிலோ எடையுடன்,ஆறு அடி உயரமுள்ள டைனோசர் ஆகும்.
இதற்கு முன்பு ட்ரூடோன்டிட் டைனோசர்களின் புதை படிவங்கள், வடபகுதிக் கண்டங்களான வட அமெரிக்கா,ஐரோப்பா,மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், லேட் கிரெட்டேசியஸ் கால கட்ட பாறைப் படிவுகளில்  கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக் கால கட்டத்தில் இந்திய நிலப் பகுதியானது, வடபகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு இன்றித் தீவாக இருந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக  இந்திய நிலப் பகுதியானது, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பூமியின் தென் துருவப் பகுதியில், தென் பகுதிக் கண்டங்களான, தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக் ஆகிய கண்டங்களுடன் இணைந்து, கோண்டுவாணா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டத்தின் பகுதியாக இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

பின்னர் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பெருங் கண்டத்தில் இருந்து பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலை உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
(The position of the continents in the Late Cretaceous. (www.scotese.com) )
tamildino7.jpg(The position of the continents in the Late Cretaceous. (www.scotese.com) ) tamildino7.jpg
குறிப்பாக லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தில் , இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

tamildino3.pngtamildino3.png

எனவே இந்தக் கால கட்டத்தில் வடபகுதிக் கண்டங்களில் வாழ்ந்த ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்கள், இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதை எதிர்பார்க்காத கண்டு பிடிப்பாக புவியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதன் மூலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இந்தியா இருந்திருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
tamildino6.pngtamildino6.png

இதே போன்று ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதியில் வாழ்ந்த பாலூட்டி விலங்கின் எலும்புப் புதை படிவங்களும் ஆந்திராவில் உள்ள நாஸ்கல் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,இந்திய நிலப் பகுதியானது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனியாக இருந்திருக்க வில்லை என்று தொல் விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.