தவறான பனியுகக் கருத்தும் பி பி சி யின் காமெடி எச்சரிக்கையும்.

(Dr Wieslaw Maslowski is Research Professor of Oceanography at the Naval Postgraduate School (NPS),   )
sno15.jpg(Dr Wieslaw Maslowski is Research Professor of Oceanography at the Naval Postgraduate School (NPS), ) sno15.jpg
பூமியில் சில காலம் துருவப் பகுதிகளில் பனி பெருமளவில் உருவாகி கண்டங்களின் மேல் படர்ந்து வெப்ப நிலை மிகவும் குறைவதாக நம்பப் படுகிறது.

இது போன்ற பனிக் காலம் சில லட்சம் ஆண்டுகள் நீடிப்பதாகவும் நம்பப் படுகிறது.இது போன்ற பனிக் காலம் பனியுகம் என்று அழைக்கப் படுகிறது.


பூமியில் இது வரை  நான்கு முறை பனியுகம் ஏற்பட்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

கடைசியாக இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் ஏற்பட்டதாகவும்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பெருக்கம் வட கோளப் பகுதியில் பெருகியதால் பனி யானைகள்,மற்றும் பனி காண்டா மிருகங்கள் இனம் முற்றாக அழிந்ததாக நம்பப் படுகிறது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் காணப் படும் பனி அடுக்குகள் அந்தப் பனியுயகத்தின் மிச்சமாகக் கருதப் படுகிறது.


இன்னும் சில ஆண்டுகளில் அந்தப் பனி யானது வெப்ப நிலை உயர்வால் முற்றிலும் உருகி நீராகிக் கடலில் கலந்து விடும் என்றும் அதனால் கடல் மட்டம் உயரும் என்றும் சில புவியியலாளர்கள் நம்புகின்றனர்.


( உண்மையில் கடல் மட்ட உயர்வால் பனி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்பது நான் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.)

sno11.jpgsno11.jpg

ஆனால்  கடந்த 2013 ஆண்டே வட துருவப் பகுதியில் உள்ள பனி முழுவதும் உருகி விடும் என்று கடல் ஆராய்ச்சியாளர் டாக்டர் விஸ்லாவ் மாஸ்லோவ்ஸ்கி கூறியதாக  பி பி சி செய்தி நிறுவனம் கூட கடந்த 2007 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால் அந்த ஆண்டு வட துருவப் பகுதியில் பனி அதிகமாகியது.
sno12.jpgsno12.jpg

பி பி சியின் இந்தக் காமெடியை டெய்லி மெயில் பத்திரிக்கை ,பி பி சி யின் வலைத் தளத்தை போட்டோ எடுத்துப் பிரசுரித்து பி பி சி யின் மூக்கை உடைத்தது.

( Prof Maslowski (centre-right) discusses the route with Pen Hadow (centre-left  )sno16.jpg( Prof Maslowski (centre-right) discusses the route with Pen Hadow (centre-left )sno16.jpg

பூமியைப் பற்றி புவியியல் ,கடல் மற்றும் கால நிலை பற்றிய ஆராய்ச்சியாளர்கள்  எந்த அளவுக்கு தவறான கருத்துக்களைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே இந்த நிகழ்வு மூலம் நிரூபணமாகிறது.


இரண்டு பனியுகக் காலத்துக்கு இடைப் பட்ட வெப்ப காலம் பனியுக இடைக் காலம் என்று அழைக்கப் படுகிறது.
தற்பொழுது பூமியானது ஒரு பணியுக இடைக் காலத்தில் இருப்பதாக நம்பப் படுகிறது.

sno10.gifsno10.gif
இதே போன்று ஒரு பனியுகக் காலத்தில் கூட துருவப் பகுதிகளில் உருவாகும் பனியானது சிறிது சிறிதாகப் பெருகி நீண்டு படர்ந்து பின்னர் சிறிதாகுவதாகவும் நம்பப் படுகிறது.


இது போன்று பனிப் படலம் பெருகுவது பனிப் படல உச்சம் என்றும் சிறிதாகுவது பனிப் படலச் சுருக்கம் என்றும் அழைக்கப் படுகிறது.


இது போன்று இரண்டு பனிப் படலப் பெருக்கம் மற்றும் சுருக்கதிற்கு இடைப் பட்ட காலம் பனிப் படலப் பெருக்க இடைக் காலம் என்று அழைக்கப் படுகிறது.


இது போன்று பூமியில் பனி உருவாகி உருகுவதற்கு சூரியனைச் சுற்றிவரும் பூமியின் வட்டப் பாதையானது சில காலம் பெரிதாகிப் பின்னர் மறுபடியும் சிறிதாகுவதால் ஏற்படுவதாக நம்பப் படுகிறது.


இதே போன்று பூமியின் அச்சுச் சாய்வில் ஏற்படும் மாற்றத்தாலும் ஏற்படுவதாக நம்பப் படுகிறது.


இது போன்ற மாற்றத்தால் ஒரு லட்சம் ஆண்டு முதல் நாற்பதாயிரம் ஆண்டு கால இடைவெளியில் பனிப்பெருக்கம் ஒரு சுழற்சி முறையில் ஏற்படுவதாக நம்பப் படுகிறது.


யூகத்தின் அடிப்படையிலான இந்தக் கருத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்பு  மிலன்கோவிச் என்ற செர்பிய நாட்டு ஆராய்ச்சியாளர் முன்மொழிந்தார்.( மிலன்கோவிச்சின் விளக்கம் தவறு என்பதை நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி உள்ளேன். )

(     அதாவது சூரியனை நீள் வட்டப் பாதையில் பூமி சுற்றிவரும் பொழுது, சில காலம் சூரியனை விட்டு விலகிச் சென்று பெரிய வட்டப் பாதையில் வலம் வந்ததாகவும் ,அப்பொழுது பூமியின் மேல் விழும் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் அதனால் ,பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவகியதால் கடல் நீர் மட்டம் குறைந்ததாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இந்த விளக்கத்தில் உள்ள தவறு என்னவென்றால்,உண்மையில் பூமியானது சூரியனை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் பூமியின் மேல் விழும் சூரிய ஒளியின் தாக்கம் குறையும் பொழுது,ஏற்கனவே நிலத்தின் மேல் உள்ள நீர்தான் பனியாக உறையும்,அதே போன்று நிலப் பகுதிகளின் மேல் உள்ள வளி மண்டலத்தில் உள்ள மேகங்களில் உள்ள நீர்தான் நிலத்தின் மேல் பனியாக உறையும் ,எனவே  கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.ஏனென்றால்பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது கடல் நீர் ஆவியாகி மேலே செல்வதும் நின்று விடும்.

அதே போன்று பூமியானது சூரியனை நோக்கி நகர்ந்து சிறிய வட்டப் பாதையில் வலம் வரும் பட்சத்தில்,பூமியின் மேல் விழும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது,நிலத்தின் மேல் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது வெப்ப நிலை உயர்வால் கடலில் இருந்தும் நீர் ஆவியாகத் தொடங்கும்.

எனவே சூரியனை வலம் வரும் பூமியின் வட்டப் பாதையில் ஏற்பட்ட மாற்றத்தால் பூமியில் பனிப் படலங்கள் உருவாகியதாலும்  உருகியதாலும் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப் படும் விளக்கம் தவறு.)


பனியுகக் கொள்கை உருவான கதை 


1742 ஆம் ஆண்டு, ஜெனிவாவைச் சேர்ந்த பியரி மார்ட்டெல் என்ற பொறியாளர் மற்றும் புவியியலாளர் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் சென்ற பொழுது அங்கு பெரிய அளவிலான பாறைகள் இருப்பதைக் கண்டார்.

அந்தப் பாறைகளானது பனியாறால் கொண்டுவரப் பட்டது என்று அப்பகுதியில் வசித்தவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பியரி அப்பகுதியில் பனி ஆறுகள் இருந்ததாக அவரது பயணக் குறிப்பில் தெரிவித்தார்.


பின்னர் அதே போன்ற அறிக்கைகள் ஆல்ப்ஸ் மலையில் வேறு சில பகுதிகளிலும் பெரிய பாறைகள் இருப்பதன் அடிப்படையில் வெளிவந்தன.

பின்னர் இதே போன்ற விளக்கங்கள் மிச்சிகன் ,ஆஸ்திரேலியா ,ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைப் பகுதியில் காணப் படும் பாறைகளுக்கும் கூறப் பட்டது.


( பனியாறால் கொண்டு வரப் பட்டதாக நம்பப் படும் பாறை ) erak.jpg( பனியாறால் கொண்டு வரப் பட்டதாக நம்பப் படும் பாறை ) erak.jpg

sno17.pngsno17.png


அந்தப் பாறைகளின் தொண்மை கணிக்கப் பட்டதன் அடிப்படையில் 46 முதல்42 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் அதே போன்று ,36முதல் 26 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் பூமியில் பனியாறுகள் நீண்டு பரந்து இருந்ததாக விளக்கம் கூறப் பட்டது.

கடைசிப் பனியுகம் இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிலியோசீன் காலத்தில் உருவானதாகக் கூறப் படுகிறது.

***********************************************************************************************
ref

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.