கடல்...பூமிக்குள் இருந்து வந்தது ! ஆய்வில் கண்டு பிடிப்பு.


பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,  வால் நட்சத்திரங்கள் லட்சக் கணக்கில்கொத்துக் கொத்தாகப்  பூமியில் விழுந்ததாகாவும், அப்பொழுது  அதில் இருந்த நீர்  திரண்டதால்தான் கடல் உருவானதாக அறிவியல் உலகில் பரவலாக நம்பப் பட்டது.

theoriginofocean4.jpgtheoriginofocean4.jpg



ஆனால் நான்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவாகும் பொழுது பிரிந்த நீரால்தான் கடல் உருவானது என்று புதை படிவ ஆதாரங்கள் குறித்த  ஆய்வின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்து இருந்தேன்.


அத்துடன் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும் கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவரும்  நீர் தொடர்ந்து கடலில் கலந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் தெரிவித்து இருந்தேன்.


theoriginofocean1.pngtheoriginofocean1.png


இந்த நிலையில் தற்பொழுது  புவியின் மேற்பரப்பில் இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில் நீர்  பூமிக்கு அடியில் பாறைக்குள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்  அறிவித்து இருக்கிறார்கள்.


theoriginofocean.pngtheoriginofocean.png


அத்துடன் புவியின் மேற்பரப்பில் உள்ள நீர் பூமிக்குள் இருந்தே வந்திருக்கிறது என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும்  குறிப்பிடத் தக்கது.


theoriginofocean5.pngtheoriginofocean5.png


Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.