புதைப் படிவப் புதிர்கள்

ஆக்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம், கடல் தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரபூர்வமாக நிரூபண மாகியுள்ளது.
தற்பொழுது வடதுருவப் பகுதியில் பனிக் கரடி,ஓநாய்,மஸ்க் ஆக்ஸ்,முயல்,நரி போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழ்கின்றன பாலூட்டி வகை விலங்கினங்கள் உணவை செரிப்பதன் மூலம் சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்து கொள்வதுடன்,உடல் வெப்பத்தை பாதுகாப்பதற்காக மயிர்,கொழுப்புப் படலம் போன்ற தகவமைப்புகளையும் கொண்டிருகின்றன.
இதனால் பாலூட்டி வகை விலங்கினங்களால் குளிர் பிரதேசத்திலும் கடுங் குளிர் நிலவும் இரவுக் காலத்தையும் சமாளித்து வாழ்கின்றன .
ஆனால் இது போன்ற தகவமைப்புகள் இல்லாத ஊர்வன வகை விலங்கினங்களான பாம்பு,முதலை,ஆமை போன்ற விலங்கினங்கள் அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகிலேயே வாழ்கின்றன.
அத்துடன் ஊர்வன வகை விலங்கினங்கள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்கின்றன.இதன் முட்டைகள் பொறிய வேண்டும் என்றால்,அதற்கு இருபத்தி ஏழு முதல் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.எனவே அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதியில் சராசரி வெப்ப நிலை இருபது செண்ட்டி கிரேடாக இருக்கிறது. இந்தக் குறைந்த வெப்ப நிலையில் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரியாது.
இந்த நிலையில்,ஆர்க்டிக் வளையப் பகுதியில் பனியாறுகளும் பனி மலைகளும் உள்ள ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த பெரணி வகைத் தாவரங்கள் மற்றும் கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதற்கு,அந்தத் தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,அதிக வெப்ப நிலை நிலவும்,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும், பின்னர் வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர்,ஆல்பிரட் வெக்னர் என்ற வானிலையாளர் விளக்கம் தெரிவித்தார்.
இதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற,வாத்துக்கு இருப்பதைப் போன்று பாத விரல்களுக்கு இடையில் தசையுள்ள,கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்கள்,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள தென் அமெரிக்கா,மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது,எனவே இருபத்தி ஐந்து கோடி ஆணடுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததே காரணம் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று வெக்னர் விளக்கம் கூறினார்.
ஆனால் கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கு தடயங்கள் ஏதும் காணப் பட வில்லை என்பதால்,கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைப் பகுதியில், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்த பிறகுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இதன் அடிப்படையில் தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் குறிப்பாக மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் அரிசோனா பாலைவனப் பகுதியில், இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்களின் கற்படிவங்கள் மற்றும் சதுப்பு நிலப் பகுதியில் வாழக் கூடிய முதலைகளின் புதை படிவங்களும் காணப் படுவதற்கு,இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அரிசோனா நிலப் பகுதியானது, அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,குறிப்பாக இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கில், அதாவது தற்பொழுது கரீபியன் தீவு அமைந்து இருக்கும் பகுதியில் இருந்ததாகவும் ,பின்னர் வட பகுதியை நோக்கி வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்ததால், அரிசோனா நிலப் பகுதியானது தற்பொழுது உள்ள மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காராணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் வடகோடிப் பகுதிகள் கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கிறது.
இந்த நிலையில் வட அமெரிக்காவின் வடக்கில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள, கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் எலும்புப் புபுதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஆனால் டைனோசர்களானது முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் ஊர்வன வகை விலங்கினம் என்பதால், ஆர்க்டிக் பகுதியில் எப்படி டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி தற்பொழுது அறிவியல் உலகில் விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்திருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ஆசிய வகை நன்னீர் வாழ் அமையின் புதை படிவங்களை,ரோஸ்டர் பல் களைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் ஜான் டார்டுனோ என்ற புவியியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் டாக்டர் ஜான் டார்டுனோ,அந்த ஆமை வாழ்ந்த காலத்தில் ஆர்க்டிக் பகுதியிலேயே அதிக வெப்ப நிலை நிலவியிருந்ததாக விளக்கம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே போன்று ஆக்சல் ஹைபெர்க் தீவுக்கு அருகில் உள்ள பைலட் தீவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ஹேட்ரோ சாராஸ் என்று அழைக்கப் படும், வாத்தின் அலகைப் போன்ற வாயை உடைய தாவர உண்ணி வகை டைனோசர் மற்றும், கொன்று திண்ணி வகையைச் சேர்ந்த டைரானோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதையும் மெக்கில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர், ஹான்ஸ் லார்சன் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதே போன்று ஆக்சல் ஹை பெர்க் தீவுக்கு அருகில் உள்ள கேமரான் தீவில் இருபத்தி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ஆர்க்டோ சாராஸ் என்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே குளிர் பிரதேசக் கால நிலை நிலவும் நிலப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு அந்த விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், அந்த அட்ச ரேகைப் பகுதியிலேயே அதிக வெப்ப நிலை நிலவியிருப்பதே காரணம், என்பது ஆர்க்டிக் வளையப் பகுதியில் காணப் படும் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
எனவே குளிர் பிரதேசக் கால நிலை நிலவும் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை யைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தின் அந்த நிலப் பகுதியானது அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,பின்னர் அந்த நிலப் பகுதிகள் குளிர் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று டாக்டர் ஆல்பிரட் வெக்னர் கூறிய விளக்கம் தவறான விளக்கம் என்பது ஆர்க்டிக் வளையப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்கள் மற்றும் ஊர்வன வகை விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் ஏன் அதிக வெப்ப நிலை நிலவியது என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் நார்வே நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைநோசரில் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து சேகரிக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அந்தப் பாறைகளானது ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையாக இருப்பதும் அதில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை ,அற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 
இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் தொண்ணூறு கிழக்கு மேடு என்று அழைக்கப் படும் கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு படிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் புலனாகிறது.
எனவே அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டம் உள்பட மற்ற கண்டங்களிலும் டைனோசர்களி எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.
கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளி வரும் நீராவி குளிர்வதால் உண்டாகும் நீர், கோடிக் கணக்கான ஆண்டுகளாக கடலில் கலந்ததால் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.
கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருக்கிறது.அதனால் தவர வகைகளும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.