உயரும் கண்டங்கள் மற்றும் கடல் விளக்கம்

 
 '' உயர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்கள் மற்றும் கடல் மட்டம் ''
 
'' Rising continents and rising sea level ''
 
  
 Through fossils evidence I came to know that the continents are rising and the sea level is also rising .
 
as the underground molten rock cooled and solidified the volume of the rock increased therfore the rock is rising.
 
as the molten rock cooled water is seperated from the magma which then released by the hot spring which caused the rising of sea level as well as the clooing of earth atmosphere including the formation of ice on the earth surface.
 
 
நில மட்டமும் ,நீர் மட்டமும் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கின்றன.
 
 
'' பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதன் கண அளவு அதிகரிப்பதால் பூமிக்கு அடியில் இருந்து பாறைகள் மேல் நோக்கி உயர்கின்றன.பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர் சுடு நீர் ஊற்றுக்கள் மூலம் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.''
 
 
மலைகளின் மேலும் நிலத்தின் மேலும் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம் நிலப் பகுதிகளும் மலைகளும் கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புலனாகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புலனாகியுள்ளது.
 
இந்த நிலையில் தற்பொழுது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படும் டைனோசர் போன்ற தரைவாழ் விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் அதன் வழியாக விலங்கினங்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ  மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதும் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் கண்டங்களுக்கு இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருபதையும் புலப் படுத்துகிறது.அத்துடன் சுடு நீர் ஊற்று நீரால் கடல் மட்டம் உயர்ந்து இருப்பதையும் புலப் படுத்துகிறது.
 
அதே போன்று கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் காடுகளுடன் டைனோசர்கள் வாழ்ந்திருப்பதும் எலும்புப் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருப்பதும் புலனாகியுள்ளது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட ஆதாரங்கள் மூலம்  தெரியவந்துள்ளது.
 

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.