பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்துக் குமுறுவதால் சுனாமி உருவாகிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகின்றன.

(படம்- அலாஸ்காவில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்)

குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலை உயர்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியுயும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை சிறிது இறங்குவதால் எரிமலையைச் சுற்றி உயர்ந்த தரைப் பகுதியும் சற்று இறங்குகிறது.
இவ்வாறு எரிமலையுடன் எரிமலையை சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வட்ட வடிவில் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.
இவ்வாறு எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களானது  தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
இதே போன்று நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.


(இந்தோனேசியா சுனாமிக்குப் பிறகு சிமிழு தீவுப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்த கடலடித் தாவரம்-நேசனல் ஜியாகிரபிக் வெளியிட்ட படம் )


(சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு தீவில் 20.02.2008 அன்று ஏற்பட்ட அதிர்ச்சியால் சிமிழு தீவின் தரையில் ஒரு மையப் பகுதியை சுற்றிலும் வளைய வடிவில் தரைப் பகுதியானது உயர்ந்து தாழ்ந்து இருப்பதைத் காட்டும் செயற்கைக் கோள்- பல்லிடைக் காட்சி தொகுப்பு படம் ஜப்பான் ஆய்வு மையம் வெளியிட்ட படம் )


குறிப்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு தெற்காசிய சுனாமியின் பொழுது நில அதிர்ச்சி மையத்திற்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வடமேற்கு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.
அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008  ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 59 சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
எனவே சிமிழு தீவிற்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததால்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது.


(படம்-ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது லியோகேங் என்ற துறைமுக நகரக் கடற் கரைப் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது)


(ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவான மேடு பள்ள வளையங்கள். ஆலோஸ் செயற்கைக் கோள்-கணிப்பொறி படம் )

இதே போன்று  கடந்த 2009 ஆம் ஆண்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது சுனாமி உருவானது.அந்த நில அதிர்ச்சியின் பொழுது ஹைத்தி தீவில் லியோகேங் என்ற நகரத்தின் கடற்கரைப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.
அத்துடன் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 35  சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
எனவே ஹைத்தி தீவிற்கு அடியில் இருந்த எரிமலையால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவாகி இருக்கிறது.



(ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சியி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்ற்ளவிற்கு மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் படம்.சிவப்பு நட்சத்திரக் குறி நில அதிர்ச்சி மையத்தைக் குறிக்கிறது.ஒவ்வொரு வளையமும் ஐம்பது சென்டி மீட்டர் உயரத்தைக் குறிக்கிறது)


இதே போன்று ஜப்பானின் ஹோண்சு தீவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஐம்பது சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ளவளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
எனவே ஹோண்சு தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவாகி இருக்கிறது.


(படம்-2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் நாள் இத்தாலியின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் லா அகுய்லா என்ற நகரில் நில அதிர்ச்சியினால் தரையில் ஏற்பட்ட மாறுபாடுகளைக் கட்டும் செயற்கைக் கோள் படம் படம்.வளையங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் 2.8 சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுகளைக் குறிக்கிறது,)

இதே போன்று இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் இரண்டு சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.

நாட்டில் கிறிஸ்ட் சர்ச் நகரில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும்உருவாகி இருந்த மேடு பள்ள வளையங்கள்

அதே போன்று நியூ சிலாந்து நாட்டில் கிறிஸ்ட் சர்ச் நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பனிரெண்டு சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலையால் தான் நில அதிர்ச்சி ஏற்படுவது நில அதிர்ச்சி மையத்தை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் மூலம் நிரூபணமாகிறது..

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.