எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.ஆனால் கண்டங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் பாறைத் தட்டுகள் பக்க வாட்டில் நகர்ந்து உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கூறுகிறார்கள்.

உதாரணமாகப் பசிபிக் பெருங் கடலைச் சுற்றிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக் கொண்டு இருப்பதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப் படுகிறது. இந்த எரிமலைகள் அமைந்திருக்கும் நியூஸிலாந்து இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஜப்பான் அலூசியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் பெருங் கடல் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கம்சட்கா தீபகற்பம்,கலிபோர்னியா ஒரிகன் மெக்சிகோ பெரு மற்றும் சிலி ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.

குறிப்பாகப் பசிபிக் பெருங் கடலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் தீவுகளிலும் கண்டங்களின் நிலப் பகுதிகளிலும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு. பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து தீவுகளுக்கு கீழே செல்லும் பொழுது. இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதே நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்று முற்றிலும் கற்பனையான ஒரு விளக்கத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டு வருகின்றனர்.

உண்மையில் கடல் தரையோ அல்லது கண்டங்களோ நகர்ந்து கொண்டு இருக்கவில்லை.

மாறாக பசிபிக் பெருங் கடல் பகுதியில் அமைந்திருக்கும் எரிமலைகள் அவ்வப்பொழுது மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.

சமீபத்தில் பசிபிக் கடலையொட்டி அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் ஒரிகன் நகரக் கடற் பகுதியில் தொடர்ந்து பல நூறு சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்ப்பட்டன.

கடந்த 1981 ஆண்டில் இதே கடல் பகுதியில் கடல் தரையில் சில இடங்களில் நீரில் அதிக அளவில் கனிமங்கள் இருப்பதை டாக்டர் ராபர்ட் எம்ப்ளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்தனர்.

அப்பொழுது அந்த இடத்தில் எரிமலைகள் எதுவும் காணப் படவில்லை.

ஆனால் அதே இடத்தில் ஒன்பது ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு மீயொலி அலை எதிரொலிப்புக் கருவி மூலம் ஆராய்ந்து பார்த்ததில்,அங்கு புதிதாகப் பத்து சிறிய எரிமலைகள் பத்து மைல் தூரத்திற்கு உருவாகியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

குறிப்பாக அந்த எரிமலைகள் கடல் தரையில் இருந்து நூற்றி ஐம்பது அடி உயரம் வரை உயர்ந்து இருந்தது.

எனவே கடல் தரையில் இருந்து எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது நிரூபணமாகிறது. ஆனால் பசிபிக் பெருங் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் தீவுகளிலும் கண்டங்களின் ஓரப் பகுதிகளிலும் அடிக்கடி ஏற்படும் நில அதிர்ச்சிக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பாறைத் தட்டுகள் நகர்வதே காரணம் என்று உண்மையை அறியாமல் கூறுகின்றனர்.

அதாவது பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு நகரும் கடல் தரை. தீவுகளுக்கு கீழாக செல்லும் பொழுது, இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான். நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாக பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை. வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஆதாரமாக. பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில். வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி. ஆறாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு. வரிசையாக அமைந்திருக்கும் ஹவாய் எரிமலைத் தீவுகளை ஒரு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதாவது பசிபிக் பெருங் கடல் தரை. வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது. கடல் தரைக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலை மையத்தின் வழியாக. பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடல் தரைக்கு மேலே எரிமலையாக உருவாகியாதாகவும்.....அதே நேரத்தில் கடல் தரையும் வட மேற்கு திசையில் நகர்ந்ததால். கடல் தரைக்கு மேலே எழுந்த எரிமலையும். வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


அதன் பிறகு எரிமலை மையத்தின் மேல் வந்து சேர்ந்த புதிய கடல் தரைப்பகுதியின் மேல் மறுபடியும் ஒரு புதிய எரிமலை உருவானதாகவும். இதே போன்று தொடர்ந்து நடந்ததால். பசிபிக் கடல் தரையின் மேல் வரிசையாகப் பல எரிமலைத் தீவுகள் உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் ஹவாய்த் தீவுகள் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்க வில்லை.

குறிப்பாக மிட் வே என்ற தீவில் இருந்து அறுபது டிகிரி கோணத்தில் வளைந்து அமைந்திருக்கிறது. முக்கியமாக மிட் வே தீவில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகள். நாற்பத்தி மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.


இதன் அடிப்படையில் நாற்பத்தி மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்த பசிபிக் கடல் தரை. திடீரென்று வட மேற்கு திசையில். தன நகரும் திசையை மாற்றிக் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


இவ்வாறு பசிபிக் கடல் தரை நகர்ந்து கொண்டு இருந்த திசை திடீரென்று மாறியதால் அதன் மேல் உருவான எரிமலைத் தீவுகளும் நேர் கோட்டில் உருவாகாமல் வளைவான வரிசையில் உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதே பசிபிக் பெருங் கடலில் ஹவாய்த் தீவுகளைப் போலவே கில்பர்ட் தீவுகள் தொக்கிலா தீவுகள் லைன் தீவுகள் குக் ஆஸ்ட்ரல் தீவுகள் துமத்து தீவுகள் என மொத்தம் பனிரெண்டு எரிமலைத் தீவு வரிசைகள் காணப் படுகின்றன.


அதில் குறிப்பாக லைன் தீவுகளும் துமத்து தீவுகளும் ஹவாய்த் தீவுகளைப் போன்றே நீளமானதும் தொன்மையானதும் ஆகும். ஆனால் கில்பர்ட் மற்றும் தொக்கிலா என்ற இரண்டு தீவுகள் மட்டுமே ஹவாய்த் தீவுகளைப் போன்று அறுபது டிகிரி கோணத்தில் வளைவாக அமைந்து இருக்கின்றன. மற்ற தீவுகள் ஹவாய்த் தீவுகளுக்கு இணையாக சரியாக அறுபது டிகிரி கோணத்தில் அமைந்து இருக்க வில்லை.


எனவே ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று பசிபிக் கடல் தரை வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பது உண்மையென்றால். பசிபிக் பெருங் கடல் பகுதியில் அமைந்திருக்கும் மற்ற எரிமலைத் தீவுகளின் வரிசையும் ஹவாய்த் தீவு வரிசைக்கு இணையாக அறுபது டிகிரி கோணத்தில் வளைவாக அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் மற்ற தீவுகளின் வரிசை ஹவாய்த் தீவுகளின் வரிசைக்கு இணையாக சரியாக அறுபது டிகிரி கோணத்தில் அமைந்து இருக்க வில்லை.


எனவே பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பது பசிபிக் கடல் பகுதியில் வெவ்வேறு கோணத்தில் வரிசையாக அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

எனவே பசிபிக் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூஸிலாந்து இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஜப்பான் ஆகிய தீவுகளிலும். கம்சட்கா தீப கர்ப்பம் அலூசியன் தீவுகள் கலிபோர்னியா மெக்சிகோ பெரு மற்றும் சிலி ஆகிய நிலப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அங்கு அமைந்திருக்கும் எரிமலைகளே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.