நில நடுக்கம் என்றால் என்ன?

நில நடுக்கம் என்றால் என்ன?

நில நடுக்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலம் அதிர்வது.

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பூமிக்கு அடியில் பல அடுக்குகளில் பாறைத் தட்டுகள் இருக்கின்றன.

இந்தப் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் இருக்கும் பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசும் பொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது.

இந்த அதிர்ச்சி பரவுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

பாறைத் தட்டுகள் ஏன் உயர்கின்றன?

பூமிக்கு அடியில் அதிக அடர்த்தியுள்ள பாறைக் குழம்பு இருக்கிறது.

பாறைக் குழம்பில் பல வாயுக்களும் நீராவியும் இருக்கிறது.

பாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீராவியும் வெளியேறுவதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகள் உருவாகின்றன.

வாயுக்கள் வெளியேறியதால் பாறைத் தட்டுகளின் அடர்த்தி குறைவாக இருக்கிறது.

அதிக அடர்த்தியுள்ள திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.

எனவே அதிக அடர்த்தியான பாறைக் குழம்பில் உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.