Abcd report
தெற்காசிய சுனாமிக்கு, நாசா முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதால், உண்மையில் தெற்காசிய சுனாமிக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்பும், கண்டத் தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் துருவப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், கண்டங்களுக்கு இடையில், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளில் நகர்ந்து தந்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின்படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு, கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுட...