Posts

Showing posts from 2009

நிலம் உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி.

ர ஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சக்ஹாலின் தீவில், கடந்த 02.08.2007 அன்று, ரிக்டர் அளவில் 6.8 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இரண்டு பேரின் உயிர்களைப் பறித்த அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு,சக்ஹாலின் தீவை ஒட்டி,மூன்று சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு, கடலுக்கு அடியில் இருந்த நிலம்,கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து காணப் பட்டது. எனவே கடலுக்கு அடியில் இருந்த நிலம் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.ஆனால் கண்டங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் பாறைத் தட்டுகள் பக்க வாட்டில் நகர்ந்து உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கூறுகிறார்கள். உதாரணமாகப் பசிபிக் பெருங் கடலைச் சுற்றிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக் கொண்டு இருப்பதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப் படுகிறது. இந்த எரிமலைகள் அமைந்திருக்கும் நியூஸிலாந்து இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஜப்பான் அலூசியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் பெருங் கடல் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கம்சட்கா தீபகற்பம்,கலிபோர்னியா ஒரிகன் மெக்சிகோ பெரு மற்றும் சிலி ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன. குறிப்பாகப் பசிபிக் பெருங் கடலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் தீவுகளிலும் கண்டங்களின் நிலப் பகுதிகளிலும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு. பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து தீவுகளுக்கு கீழே செல்லும் பொழுது. இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதே நில அதி...

பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதை முன்னறிவிக்கும் மகாபலிபுரக் கடலடிக் கோவில்கள்.

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. ஸ்டீகோ டோன்ட் என்று அழைக்கப் படும் தற்கால யானைகளின் மூதாதை யானைகள் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன.இன்று இந்த ஸ்டீகோ டோன்ட் யானையின் எலும்புப் புதை படிவங்கள் உலகில் பல இடங்களில் காணப் படுகின்றன. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் சீன ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா தென் அமெரிக்காவிலும் காணப் படுவதுடன், இந்தோனேசியத் தீவுகளான சுமத்ரா ஜாவா சுலாவெசி புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன. ஆனால் புளோரஸ் தீவை அடைய வேண்டும் என்றால் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் பகுதியைக் கடக்க வேண்டும்.அத்துடன் லம்போக், ஸ்ட்ரைட் என்று அழைக்கப் படும் இரண்டு கடல் நீரோட்டப் பகுதிகளையும் கடந்தாக வேண்டும். மேலும் புளோரஸ் தீவில் இருந்து திமோர் தீவிற்கு செல்ல வேண்டும் என்றால் ஓம்பை என்று அழைக்கப் படும் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் நீரோட்டப் பகுதியைக் கடக்க வேண்டும். மேலும் திமோர் தீவு மூவாயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.(பத்தாயிரம் அடி ). இதன் அடிப்படையில் ,டி .எ .ஹூய்ஜர் என்ற ...

பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் திருப்பதி மலை உருவானது.விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் திருப்பதி மலை உருவானது.விஞ்ஞானி.க.பொன்முடி.

சிமிலு தீவு உயர்ந்ததால்தான் சுனாமி உருவானது .

பத்திரிகைச் செய்தி வெளியீடு. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்குப் பணிவுடன் விஞ்ஞானி.க.பொன்முடி தெரிவித்துக் கொள்வது. சுனாமி ஏன் உருவானது? சிமிலு தீவு உயர்ந்ததால்தான் சுனாமி உருவானது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 26.12.2004. ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் அமைந்திருக்கும் சிமிலு என்ற தீவு மூன்று அடி வரை உயர்ந்து இருந்தது. அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.03.2005, அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்குப் பிறகும் சிமிலு தீவு ஆறு அடி வரை உயர்ந்து இருந்தது.சிறிய அளவில் சுனாமியும் ஏற்பட்டது. அத்துடன் சிமிலு தீவைச் சுற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்தன. எனவே சிமிலு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். ஆனால் 26.12.2004. ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில அதிர்ச்சிக்கு மற்ற ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு காரணத்தைக் கூறியிருந்...

நில நடுக்கம் என்றால் என்ன?

நில நடுக்கம் என்றால் என்ன? நில நடுக்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலம் அதிர்வது. நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது? பூமிக்கு அடியில் பல அடுக்குகளில் பாறைத் தட்டுகள் இருக்கின்றன. இந்தப் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் இருக்கும் பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசும் பொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி பரவுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. பாறைத் தட்டுகள் ஏன் உயர்கின்றன? பூமிக்கு அடியில் அதிக அடர்த்தியுள்ள பாறைக் குழம்பு இருக்கிறது. பாறைக் குழம்பில் பல வாயுக்களும் நீராவியும் இருக்கிறது. பாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீராவியும் வெளியேறுவதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகள் உருவாகின்றன. வாயுக்கள் வெளியேறியதால் பாறைத் தட்டுகளின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. அதிக அடர்த்தியுள்ள திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும். எனவே அதிக அடர்த்தியான பாறைக் குழம்பில் உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.

பத்திரிகைச் செய்தி வெளியீடு.

பத்திரிகைச் செய்தி வெளியீடு. விஞ்ஞானி.க.பொன்முடி.சென்னை. பொருள்:எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம். இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாறைத் தட்டில் அமைந்திருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்தை ஏற்க இயலாது. பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் ஒன்றாக இருந்ததாகவும், அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் இருந்ததாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்பொழுது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பாறைத் தட்டுகள் நகர்வதால் அவற்றின் மேல் அமைந்திருக்கும் கண்டங்களும் நகர்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே பாறைத் தட்டின் மேல் அமைந்திருப்பதாகக் கூறப் படும் இரண்டு நிலப் பகுதிகள் எப்படி எதிர் எதிர் திசையில் நகர்ந்து சென்றிருக்க முடியும்? நில அதிர்ச்சிக்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருப்பதே காரணம் என்று ஒரு தவறான விளக்கத்தைக் கூறிக் கொண்டிருக...

எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம்-விஞ்ஞானி.க.பொன்முடி.

எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம். -விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவு நகர்ந்து வந்திருக்க முடியும்?

இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்ததாகக் கூறுகிறார்கள். அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.ஆனால் இந்தியாவோ எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நிலையில், இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து வந்திருகக முடியும்? விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் பதினேழாயிரம் தீவுகள் இருக்கின்றன. மேலும் இந்தோனேசியாவில் நூற்று முப்பதுக்கும் அதிகமான எரிமலைகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவில் வெவ்வேறு தீவுகளில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. எனவே எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன்.விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தோனேசியத் தீவுகளில் மட்டும் ஏன் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது? -விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று ( 03.09.2009 ) இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜாவா தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதில் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும் இந்தப் பாறைத் தட்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகள் அமைந்திருக்கும் பர்மா நிலத் தட்டிற்குக் கீழே செல்வதால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் இந்தோனேசியாவில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் நேற்று ஜாவா தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்? ஏன் நேற்று சுமத்ரா தீவிலோ அல்லது அந்தமான் தீவிலோ நில அதிர்ச்சி ஏற்படவில்லை? இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு ஜாவா தீவிற்கு கீழே மட்டும் கீழே சென்றதா? இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளுக்கு கீழே செல்ல இயலுமா? உண்மையில் இந்தோனேசியத் தீவுகளில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்ன? இந்தோனேசியத் தீவுகளில் நூற்றி முப்பது எரிமலைகள் இருக்கின்றன. இந்...

நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கெர்கூலியன் தீவில் தென் அமெரிக்க வகை மண் புழுக்கள் காணப் படுவது, நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞானி.க.பொன்முடி. நிலப் பகுதிகளில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பல தீவுகளில், நிலத்தில் வாழும் விலங்கினங்கள் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும் நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இந்தியப் பெருங் கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கெர்கூலியன் தீவுகள் அமைந்திருக்கின்றன. எரிமலைத் தீவான கெர்கூலியன் மற்றும் அந்தத் தீவைச் சுற்றி அமைந்திருக்கும் முன்னூறு சிறிய தீவுகளும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கின்றன. கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப படும் அந்தக் கடலடிப் பீட பூமியும், கெர்கூலியன் தீவுகளும் எப்பொழுது உருவாகின என்று அறிவதற்காக கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில...

நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

மலைகளின் மேல் கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் காணப் படுவது மலைகள் யாவும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அதே போன்று பசிபிக் பெருங் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் எரிமலைத் தீவுகளில் நிலத்தில் வாழும் நத்தைகள் காணப் படுவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது . நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

பூமியில் உள்ள விலங்கினங்கள் எல்லாம் ஒரு பொது மூதாதையில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றி பல இடங்களுக்குப் பரவின. இந்நிலையில் நிலத்தில் வாழும் விலங்கினங்கள் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்ட பல தீவுகளில் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும்,நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி

பூமி மூழ்கி கொண்டிருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

மடகாஸ்கர் நியூஸிலாந்து பாக்லாந்து ஆகிய தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவது பூமி மூழ்கிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

டைனோசர்கள் அழிந்தது ஏன்?

பூமியின் கால நிலை குளிர்ந்ததால் டைனோசர்கள் உண்ட தாவரங்கள் அழிந்ததால் டைனோசர்கள் அழிந்தன. குறிப்பாக டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த சிறிய அளவு விலங்கினங்களான பாலூட்டி விலங்கினங்கள் இன்றும் கூட வாழ்கின்றன. அதற்கு பாலூட்டி விலங்கினங்கள் உடலில் ரோமத்துடன் உருவானதும் ஒரு காரணம். பூமியின் வெப்ப நிலை ஏன் குளிர்ந்தது? டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் நில மட்டமும் கடல் மட்டமும் தாழ்வாக இருந்தன. அதனால் பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்தன. மலைகளின் மேல் பனி உருவாகுவதைப் போன்று துருவப் பகுதியில் உள்ள அண்டர்க்டிக் கிரீன்லாந்து போன்ற நிலப் பகுதிகள் உயர்ந்ததால் நிலத்தின் மேல் உருவாகியது. இதனால் பூமியின் வெப்ப நிலையும் குறைந்தது. நில மட்டம் உயர்ந்ததற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்...

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்.

1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம். 1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம். 1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம். 1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம். 1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம். 1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி. 1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம். 1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம். 1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி. 1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம். 1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.. 1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி. 1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி. 1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு. 1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம். 2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்ப...

ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப் பட்டது. அனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் ? இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமி...

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி. இந்தியாவில் இருந்து எடுக்கப் பட்ட பாலூட்டி விலங்கின் எலும்புகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் கண்டங்கள் நகர்கின்றன என்ற கருத்தை தவறாக்கி விட்டது. இந்திய நிலப் பகுதியானது பதின்மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிசால்புரி என்ற கிராமத்தில் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆடு மாடு போன்ற குளம்புக் கால் இனத்தைச் சேர்ந்த விலங்கின் பற்களை தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வு மூலம் எடுத்திருக்கின்றனர். இதற்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் மான்டனா என்ற நகரில் இருந்து எடுக்கப் பட்ட ஆறு கோடியே முப்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான குளம்புக் கால் விலங்கின் எலும்புகளே தொன்மையானதாக இருந்தது. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக் குளம்புக் கால் விலங்குகளின் ...

பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து கொண்டிருக்கிறதா?

பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விளக்கத்தைக் கூறி வருகின்றனர். உதாரணமாக பசிபிக் பெருங் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து ஜப்பான் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படும்பொழுது, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிப் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் தரைப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் பசிபிக் கடல் தரை கண்டங்களுக்கு அடியில் வளைந்து சென்று பூமிக்குள் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு பூமிக்குள் வளைந்து செல்லும் பசிபிக் கடல் தட்டு கண்டங்களின் விளிம்புகளுடன் உரசும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் தருகின்றார்கள். ஆனால் பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தகித்தி போன்ற எரிமலைத் தீவில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு நகரும் கண்டங்கள் ஆராய்ச்சியாளர்களால் எந்த ஒரு விளக்கத்தைக் கூற இயலவில்லை. குறிப்பாக தகித்தி என்ற எரிமலைத் தீ...

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆதாரம் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் காணப் படும் கற்காலப் பழங்குடிகள். -விஞ்ஞானி.க.பொன்முடி. பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய்த் தீவுகளை கேப்டன் ஜேம்ஸ் குக் என்று அழைக்கப் பட்ட ஆங்கிலேய மாலுமியால் தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பட்டது. கேப்டன் குக்கின் பாய் மரக் கப்பலைக் கண்டதும் ஹவாய்த் தீவில் இருந்து தீவு வாசிகள் சிலர் சிறிய கட்டு மரங்களில் ஏறி துடுப்பின் உதவியால் குக்கின் கப்பலுக்கு அருகில் வந்தனர். அப்பொழுது அவர்கள் பேசிய மொழி,ஹவாய்த் தீவிற்குத் தென்கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தகித்தி தீவு வாசிகள் பேசிய மொழியைப் போலவே இருப்பதை அறிந்து குக் மிகவும் ஆச்சரியப் பட்டர். காரணம் தகித்தி தீவில் இருந்து தனது பாய் மரக் கப்பலில் ஹவாய்த் தீவிற்கு வந்து சேர குக்கிற்கு ஒரு மாதம் ஆனது. பாய் மரக் கப்பல் என்று அழைக்கப் பட்டாலும் உண்மையில் குக்கின் கப்பலின் கோடி மரத்தில் கட்டப் பட்டிருந்தது கூடாரம் அடிக்கப் பயன் படுத்தும் உறுதியான துணி. ஆனால் ஹவாய்த் தீவில் ஒரு சிலர்...

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆதாரம் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் காணப் படும் கற்காலப் பழங்குடிகள். -விஞ்ஞானி.க.பொன்முடி.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது. இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும். ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும். இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் அடிப் படையில் அந...

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல். பாலைவனங்களில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுகின்றன. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவங்கள் கடல் மட்டத்திற்கு அடியில் இருந்திருக்கின்றன. அப்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பாறைகளை கடல் நீர் அரித்ததால் மணல் உருவானது. அவைகள் காற்று மழை மற்றும் .ஆறினாலும் கூட கடலுக்கு அடியில் கொண்டுவரப் பட்டன. அதன் பிறகு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்ததால் இன்று நிலத்தின் மேல் மணல் வெளி காணப் படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும், வட கிழக்குப் பகுதியில் எகிப்திலும், தென்மேற்குப் பகுதியில் நமீபியாப் பாலைவனப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. விஞ்ஞானி.க.பொன்முடி.

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது?

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாறைக் குழம்புக் கோளமாக இருந்த நம் பூமி படிப்படியாகக் குளிர்ந்து. இதனால் முதலில் புவி ஓடும் அதன் பிறகு உள் அடுக்குகளும் உருவானது. பாறைக் குழம்பு குளிர்ந்து இருகிய பொழுது அதில் இருந்து நீரும் மற்ற வாயுக்களும் பிரிந்து வெளியேறியது. பாறைக் குழம்பில் இருந்து சூடான நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவானது. அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.எனவே பூமிக்கு அடியில் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்தது. பூமிக்கு அடியில் உருவான புதிய பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் மலைகள் உருவாகின.உயராத பகுதிகள் பள்ளத் தாக்குகளாக உருவாகின. நிலப் பகுதிகள் உயர்ந்தன.ஆனால் நிலப் பகுதிகளைப் போன்று நீரால் உயர இயலாது.நீரின் பரவும் தன்மையால்,முதலில் நீர் பக்கவாட்டில் பரவிய பிறகு தான் மேல் நோக்கி உயர முடியும்.எனவேதான் நிலப் பகுதிகளை விட கடல் பகுதி அதிகமாக இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் , ஒரு நிலப் பகுதி மூழ்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடல் தரையிலிருந்து பத்தாயிரம் அடி உயர்ந்து இருக்கின்ற அந்த கடலடிப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் , வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அந்த எரிமலைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் எனபது தெரியவந்திருக்கிறது. இதன் அடிப் படையில் தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அடியில் மூழ்கி இருக்கும் அந்த நிலப் பகுதி ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதுடன் ,அதில் காடுகளும் இருந்திருக்கிறது என்று மைக் காபின் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கிறது என்றும் அவர்...

பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.

பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது - விஞ்ஞானி.க.பொன்முடி. பூமிக்கு அடியில் உள்ள அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகும் பொழுது அதிலிருந்து நீர் மற்றும் வாயுக்கள் பிரிவதால் அடர்த்தி குறைவான பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதால் கடல் மட்டடம் உயர்கின்றது. பூமிக்கு அடியில் புதிதாக உருவாகும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் கடல் தரையில் இருந்து நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்கின்றன. ஒரு இடத்தில் மட்டும் பாறைத் தட்டுகள் உயரும்பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. நில மட்டம் உயர்வதாலும் , நீர்ப்பரப்பு அதிகரித்து நீர் மட்டமும் உயர்ந்து கொண்டிருப்பதால் பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. - விஞ்ஞானி க.பொன்முடி. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நிலநடுக்கதிற்குப் பிறகு.அப்பகுதியில் இருந்த சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்திலிருந்து மூன்று அடி உயர்ந்து இருந்தது. இதனால் தீவில் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்தது.மேலும் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன. மேலும் 26, டிசம்பர்,2004 ,நில நடுக்கத்திற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.மார்ச்,2005.அன்று ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகும் சிமிலு தீவு நான்கு அடி உயர்ந்து காணப்பட்டது. அத்துடன் தீவைச் ச்ற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு,கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் வெளியில் தெரிந்தன. தீவு ஏன் திடீரென்று நான்கு அடி உயர்ந்தது? பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு படிப்படியாகக் குளிர்ந்து கொண்டிருப்பதால் பல்வேறு அடுக்...