டைனோசர்கள் அழிந்தது ஏன்?

பூமியின் கால நிலை குளிர்ந்ததால் டைனோசர்கள் உண்ட தாவரங்கள் அழிந்ததால் டைனோசர்கள் அழிந்தன.

குறிப்பாக டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த சிறிய அளவு விலங்கினங்களான பாலூட்டி விலங்கினங்கள் இன்றும் கூட வாழ்கின்றன.

அதற்கு பாலூட்டி விலங்கினங்கள் உடலில் ரோமத்துடன் உருவானதும் ஒரு காரணம்.

பூமியின் வெப்ப நிலை ஏன் குளிர்ந்தது?

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் நில மட்டமும் கடல் மட்டமும் தாழ்வாக இருந்தன.

அதனால் பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்தன.

மலைகளின் மேல் பனி உருவாகுவதைப் போன்று துருவப் பகுதியில் உள்ள அண்டர்க்டிக் கிரீன்லாந்து போன்ற நிலப் பகுதிகள் உயர்ந்ததால் நிலத்தின் மேல் உருவாகியது.

இதனால் பூமியின் வெப்ப நிலையும் குறைந்தது.

நில மட்டம் உயர்ந்ததற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததே காரணம்.

அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின.

பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் உருவான புதிய பாறைத் தட்டுகளின் அடர்த்தி குறைந்ததுடன் அவைகளின் கன அளவும் அதிகரித்தது.

பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து புதிதாக உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்தன.

இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்து அடர்த்தி குறைந்த புதிய பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் படிப் படியாக நிலப் பகுதிகளும் உயர்ந்தன.

நிலம் உயர்ந்ததால் மலைகளும் மலைகளுக்கு அருகில் பள்ளத்த தாக்குகளும் உருவாகின.

ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் உள்ள பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசிய பொழுது நில அதிர்ச்சி ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகள் உருவான பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் கடலில் தொடர்ந்து கலந்ததால் கடல் மட்டமும் உயர்ந்தது.

பூமியின் பெரும்பாலான பரப்பில் கடல் பகுதி சூழ்ந்து கடல் மட்டம் அதிகரித்தாலும் பூமியின் வெப்ப நிலை குளிர்ந்து.

நிலப் பகுதிகளைப் போன்று நீர்ப் பரப்பு மேல் நோக்கி உயர்வதற்குப் பதிலாக நீரின் பாயும் தன்மை காரணமாக நீர் முதலில் நிலம் உயர்ந்ததால் உருவான பள்ளத் தாக்குகளில் நிரம்பிய பிறகே நீர் மட்டம் மேல் நோக்கி உயர ஆரம்பித்தது.

தற்பொழுது கடல் மட்டம் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கும் கண்டங்களை மூழ்கடிக்கத் தொடங்கியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?