நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கெர்கூலியன் தீவில் தென் அமெரிக்க வகை மண் புழுக்கள் காணப் படுவது, நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

விஞ்ஞானி.க.பொன்முடி.

நிலப் பகுதிகளில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பல தீவுகளில், நிலத்தில் வாழும் விலங்கினங்கள் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும் நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இந்தியப் பெருங் கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கெர்கூலியன் தீவுகள் அமைந்திருக்கின்றன.

எரிமலைத் தீவான கெர்கூலியன் மற்றும் அந்தத் தீவைச் சுற்றி அமைந்திருக்கும் முன்னூறு சிறிய தீவுகளும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கின்றன.

கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப படும் அந்தக் கடலடிப் பீட பூமியும், கெர்கூலியன் தீவுகளும் எப்பொழுது உருவாகின என்று அறிவதற்காக கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து, பாறை மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப் பட்டது.

அப்பொழுது அந்தப் பாறைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதை அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

அத்துடன் அந்தப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டன.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும், அதனால் தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் கெர்கூலியன் பீட பூமி கடல் மட்டத்திற்கு மேலே மரம் செடி கொடிகளுடன் ஒரு தீவாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.

அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.

அத்துடன் கெர் கூலியன் பீட பூமியின் மேல் எரிமலைகளும் உருவாகி உயர்ந்திருக்கின்றன.

கடல் மட்டம் ஏன் உயர்ந்தது?எரிமலைகள் ஏன் உயர்ந்தது?

பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் உருவான புதிய பாறைத் தட்டுகளின் அடர்த்தி குறைந்ததுடன் அவைகளின் கன அளவும் அதிகரித்தது.

இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்து அடர்த்தி குறைந்த புதிய பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் எரிமலைகள் உயர்ந்தன.

பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகள் உருவான பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் கடலில் தொடர்ந்து கலந்ததால் கடல் மட்டமும் உயர்ந்தது.

தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே ஆயிரம் அடிக்கும் அதிக உயரத்தில் அமைந்திருக்கும் கெர்கூலியன் தீவில்உலகில் வேறு எங்குமே காண இயலாத அறிய வகை மண்புழுக்கள் காணப் படுகின்றன.

கெர்கூலியன் தீவில் காணப் படும் மண் புழுக்கள் மைக்ரோ ஸ்கோலக்ஸ் என்ற வகையைச் சேர்ந்தது.

இந்த வகை மண்புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படுகின்றன. அதாவது குரங்கினம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றியது.

ஆனாலும் அதன் மற்ற வகைகள் தென் அமெரிக்கக் கண்டத்திலும் காணப் படுகின்றன.

அதே போன்று மைக்ரோ ஸ்காலேக்ஸ் வகை மண்புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் பட்டாலும் அதே வகையில் இருந்து சிறிது மாறுபட்ட மைக்ரோ ஸ்காலெக்ஸ் வகை மண்புழுக்கள் கெர்கூலியன் தீவில் காணப் படுகின்றன.

மண் புழுக்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பொது மூதாதையில் இருந்து தோன்றின.

ஒரு வகை உரினத்தில் இருந்து புதிய வகை உயிரினங்கள் தோன்ற பல லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகும்.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,கெர்கூலியன் எரிமலைத் தீவுப் பகுதிக்கு வந்து சேர்ந்த மைக்ரோ ஸ்காலெக்ஸ் மண் புழுக்களில் இருந்து,லட்சக் கணக்கான ஆண்டுகளில் கெர்கூலியன் தீவில் தற்பொழுது காணப் படும் தனி வகை மண் புழுக்கள் படிப் படியான பரிணாம மாற்றத்தின் மூலம் தோன்றியிருக்கின்றன.

ஆனால் மண் புழுக்கள் மண்ணுக்கு அடியில் உள்ள காற்றை சுவாசித்து மட்கிப் போன தாவரப் பொருள்களை உண்டு வாழும் உயிரினம்.

மழை பெய்யும் பொழுது மண்ணுக்குள் இருக்கும் இடை வெளிகளில் நீர் செல்வதால் மழை நேரத்தில் மண் புழுக்கள் காற்றை சுவாசிப்பதற்காக நிலத்தின் மேற்பரப்பிற்கு வருகின்றன.

இந்நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் எட்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கெர்கூலியன் தீவிற்கு மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்கள் எட்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவுக் கடல் பகுதியைக் எப்படிக் கடந்திருக்க முடியும்?

நிலத்தில் வாழும் நத்தைகள் சில தீவுகளில் காணப் பட்டத்திற்கு,நத்தைகள் ஏதாவது மரத்தின் இலைகளில் ஒட்டிக் கொண்டு புயல் சூறாவளி காற்றால் அடித்துக் கொண்டு தீவுகளுக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப் பட்டது.

ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவத்திற்கு ஓட்டும் தன்மை கிடையாது.

எட்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் கடல் பகுதியை நிச்சயம் மண் புழுக்கள் காற்றின் மூலம் கடந்திருக்க இயலாது.

அதே போன்று மென்மையான தோலை உடைய மண் புழுக்களால் எட்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் கடல் பகுதியையும் கடந்திருக்க இயலாது.

எனவே மண் புழுக்கள் நிச்சயம் தரை வழியாகவே தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெர்கூலியன் தீவுப் பகுதிக்கு வந்திருக்க இயலும்.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது,கெர்கூலியன் தீவில் காணப் படும் தென் அமெரிக்க வகை மண் புழுக்கள் மூலமும் நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?