சிமிலு தீவு உயர்ந்ததால்தான் சுனாமி உருவானது .
பத்திரிகைச் செய்தி வெளியீடு. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்குப் பணிவுடன் விஞ்ஞானி.க.பொன்முடி தெரிவித்துக் கொள்வது.
சுனாமி ஏன் உருவானது?
சிமிலு தீவு உயர்ந்ததால்தான் சுனாமி உருவானது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 26.12.2004. ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் அமைந்திருக்கும் சிமிலு என்ற தீவு மூன்று அடி வரை உயர்ந்து இருந்தது.
அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.03.2005, அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்குப் பிறகும் சிமிலு தீவு ஆறு அடி வரை உயர்ந்து இருந்தது.சிறிய அளவில் சுனாமியும் ஏற்பட்டது. அத்துடன் சிமிலு தீவைச் சுற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்தன.
எனவே சிமிலு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.
ஆனால் 26.12.2004. ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில அதிர்ச்சிக்கு மற்ற ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு காரணத்தைக் கூறியிருந்தனர். அதாவது இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இந்தோ- ஆஸ்திரேலியப் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் அமைந்திருப்பதாகவும் அந்தப் பாறைத் தட்டு வடகிழக்குத் திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகர்ந்தபொழுது இந்தோ- ஆஸ்திரேலியப் பாறைத்தட்டின் முன் பகுதி பர்மா நிலத் தட்டிற்கு கீழே சென்றதால்தான், 26.12.2004 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
குறிப்பாக பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக் கண்டமும் தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இவ்வாறு கண்டங்கள் நகர்வதற்கு கண்டங்களுக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் பிரிந்து நகர்வதே காரணம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று இந்தியாவும் ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக் கண்டமும் பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் ஒன்றாக இருந்து, பிறகு தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் உள்ளது போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் விலகியது உண்மையென்றால் நிச்சயம் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டின் மேல் அமைந்திருக்க வேண்டும்.
ஒரே பாறைத் தட்டின் மேல் இருந்து கொண்டே ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்குப் பிரிந்து விலகிச் சென்றிருக்க சாத்தியம் இல்லை.
ஆனால் தற்பொழுது ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கும் இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டின் மேல் அமைந்திருப்பதாகக் கூறுவதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆதாரம்.
அமெரிக்க ஆய்வு மையமான நாசா வெளியிட்ட, 1963 ஆம் ஆண்டு முதல் 1998 , ஆம் ஆண்டு வரை 3,58,214 , நில அதிர்ச்சிகள் ஏற்ப்பட்ட இடங்களைக் குறிக்கும் வரைபடம் மற்றும் நாசா வெளியிட்ட கண்டத் தட்டுகளின் எல்லைகளைக் குறிக்கும் வரைபடம்.
குறிப்பாக கண்டங்களைச் சுற்றிலும் எல்லைக் கோடு வரைந்தது போன்று தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.இந்த எல்லைக் கோட்டுப் பகுதியை கண்டங்களின் எல்லைகளாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உதாரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் ஒரு கோடு வரைந்ததைப் போன்று நில அதிர்ச்சிகள் ஒரே இடத்தில தொடர்ச்சியாக செறிவாக ஏற்பட்டிருக்கின்றன.இதன் அடிப் படையில் ஆப்பிரிக்கக் கண்டம் ஒரு தனிப் பாறைத் தட்டின் மேல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்தியாவையும் ஆஸ்திரேலியக் கண்டத்தையும் தீர்க்கமாகப் பிரித்துக் காட்டும் வண்ணம், இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கவில்லை.
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டின் மேல் இருப்பதாகக் கருதுவதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை.
எனவே நாசா வெளியிட்ட கண்டங்களின் எல்லைகளைக் குறிக்கும் வரை படத்தில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.(நாசா வரைபடம் )
எனவே 26.12.2004. ஆம் ஆண்டு, சுமத்ரா தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், இந்தியத் தட்டு பர்மாத் தட்டிற்கு கீழே சென்றதால்தான் ஏற்பட்டது என்று கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.
எனவே 26.12.2004. ஆம் ஆண்டு, சுமத்ரா தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் சிமிலு தீவு மேல் நோக்கி உயர்ந்ததே காரணம் என்பது ஆய்வு மூலமும் உறுதியாகிறது.

Comments