Posts

Showing posts from 2026

எரிமலை வெடித்ததால் தெற்காசிய சுனாமி உருவானது.

தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் உறுதி படுத்தப் படாத விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததால், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில் அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களை மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரையின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று கண்டங்கள் கடல்தளங்களுடன் நகரும் பொழுது,கண்டங்களுக்கு அடியிலும்,தீவுகளுக்கு அடியிலும், உரசியபடி நகர்ந்து செல்வதாகவும் அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடலுக்கு அடியில் நில ...

axereport

axereport புதைப்படிவப் புதிர்களுக்கு கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. இந்த நிலையில் புதைப்படிவப் புதிர்களுக்கு நிலமட்டமும் கடல் மட்டமும் உயர்ந்ததே காரணம் என்பது நான் மேற்கொண்ட தெரியவந்துள்ளது. அதே போன்று,அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் ஆதாரங்கள் மூலம்,நிரூபிக்கப் பட்ட, விளக்கத்தைத் தெரிவிக்க இயலவில்லை. அதே போன்று தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட விளக்கத்தைத் தெரிவிக்க இயலவில்லை. இந்த நிலையில்,இந்த இரண்டு நிகழ்வுகளும் தீவுகளுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் ஏற்பட்டு இருப்பதைத் தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் நான் கண்டு பிடித்து இருக்கிறேன். விலங்கினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்குத் தாவரங்களை அல்லது மற்ற விலங்குகளை கொன்று உண்ணுவதன் மூலம் பெறுகின்றன.ஆனால் தாவரங்கள் தங்களின் உயிர் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்...

ஆய்வுச் சுருக்கம்.

ஆய்வுச் சுருக்கம். இந்த உலகமக்கள் ஆட்டுவிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.ஆம்...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் முக்கியமான காரணம் புவியடி எரிமலை வெடிப்புகளே என்பதே எனது ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. பூமியின் மேலோடானது கண்டங்களாலும் கடல் தளத்தாலும் ஆனது.கண்டங்களானது இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருக்கிறது.இதன் சராசரி தடிமனானது நாற்பது கிலோ மீட்டர்.கடல்தளமானது கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.இதன் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். இந்த மேலோடானது நிலையாக இருக்கிறது.புவியடி எரிமலை வெய்ப்புகளால் நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்பது எனது ஆய்வில் பல ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.'ஆனால் கண்டங்களானது கடல்தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாகக் கண்டங்களுக்கு இடையில் உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு, பாறைக் குழம்பு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இருகிப் புதிய கடல்தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி வி...

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது, பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. ---விஞ்ஞானி.க.பொன்முடி. "பூமியைப் பற்றி இது வரை யாரும் அறிந்திராத பல ரகசியங்களைத் தெரிவிக்கும் புத்தகம்'' 0000000000000000 ஒரு விஞ்ஞானியின் மூன்று கண்டுபிடிப்புகள். ஆசிரிய உரை. இந்தப் புத்தகம் எனது மூன்றாவது புத்தகம்.முதல் புத்தம்''பூமிப பந்தின் புதிர்கள்''விகடன் பிரசுரம் வெளியிட்டது.இரண்டாவது புத்தகம்''பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது''நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது.அடுத்து எழுதப் போகும் மூன்றாவது புத்தகம்தான்,நான் எழுதும் கடைசிப் புத்தகம் என்ற முடிவோடுதான், இந்தப் புத்தகத்தை எழுதினேன். அதனால் எனது ஆராய்ச்சியில் நான் கண்டறிந்த உண்மைகளை, மிச்சம் வைக்காமல் முழுவதுமாக தெரிவித்து விட வேண்டும் என்கிற முனைப்போடு இந்தப் புத்தகத்தை எழுதினேன். கடந்த 23 ஆண்டு காலமாக, இணையத்தின் புதை படிவங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அலசி ஆராய்ந்து கண்டறிந்தேன். எனது ஆய்வில்,குறிப்பாகக் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில...