கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் , ஒரு நிலப் பகுதி மூழ்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


கடல் தரையிலிருந்து பத்தாயிரம் அடி உயர்ந்து இருக்கின்ற அந்த கடலடிப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் , வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.


அந்த எரிமலைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் எனபது தெரியவந்திருக்கிறது.


இதன் அடிப் படையில் தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அடியில் மூழ்கி இருக்கும் அந்த நிலப் பகுதி ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதுடன் ,அதில் காடுகளும் இருந்திருக்கிறது என்று மைக் காபின் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.


மேலும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.


இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்த நிலப் பகுதி தற்பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கியதற்கு காரணம் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததே காரணம்.

கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்குக் காரணம் என்ன?


கடலுக்கு அடியில் பல சுடு நீர் ஊற்றுக்கள் காணப் படுகின்றன.
ஒரு சுடு நீர் ஊற்றில் இருந்து வினாடிக்கு ஆயிரத்தி நூற்றி முப்பத்தி ஐந்து லிட்டர் தண்ணீர் வெளிவருவது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.


அதாவது கிணற்றிலிருந்து வயலுக்கு நீர் இறைக்கும் மோட்டார் பம்ப் செட்டிலிருந்து நீர் வெளிவருவதைப் போன்று ,கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றிலிருந்து நீர் வெளிவந்தது கொண்டிருக்கிறது.


கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சுடு நீர் ஊற்றுக்கள் அருகில் வாழ்ந்த உயிரினங்களின் புதைபடிவங்கள் பூமியில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.


எனவே கோடிக் கணக்கான ஆண்டுகளாக சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளிவந்த நீரால்தான் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.


இவ்வாறு இரண்டு கிலோ மீட்டர் கடல் மட்டம் உயர்ந்ததால்தான் முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்த கண்டம் தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருக்கிறது.


கெர்கூலியன் என்று அழைக்கப் படும் இந்தத் தீவுகளை முதன் முதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கெர்கூலியன் என்ற மாலுமி கண்டு பிடித்தார்.


குறிப்பாக இந்தத் தீவில் அரிய வகை மண்புழுக்களும் நத்தைகளும் காணப் படுகின்றன.


அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைத்திருக்கும் இந்தத் தனிமைத் தீவிற்கு மண்புழுக்கள் எப்படி வந்து சேர்ந்தன என்பது நீண்ட காலமாகவே புதிராக இருந்தது.


மண்புழுக்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவைகள்.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்தபொழுது தற்பொழுது தீவுகளாக இருக்கும் நிலப் பகுதிகளுக்கும் கண்டங்களுக்கும் இடையே நிலத் தொடர்பு இருந்ததையே கெர்கூலியன் தேவில் காணப் படும் மண்புழுக்கள் நிரூபிக்கின்றன.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?