தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்.
1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம்.
1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம்.
1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.
1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.
1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.
1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.
1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.
1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி..
1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு.
1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம்.
2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் லேசான நில நடுக்கம்.
2001 ஜனவரி 7 அன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 ஜனவரி 26 குஜராத்தில் ஏற்ப்பட்ட கடுமையான நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 செப்டம்பர் 26 அன்று புதுவை கடலோரத்தில் லேசான நில நடுக்கம்.
2001 செப்டம்பர் 26 அன்று சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்.இரண்டு பேர் பலி.
2001 அக்டோபர் 28 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் நாகர் கோவிலில் லேசான நில அதிர்ச்சி.
-மூலம்: இணையம்.
மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன,டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.(தினத்தந்தி-19.07.2009)
தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம்.
எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும்.
சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
Comments