இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன.

மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது.

இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும்.

ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும்.

இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

இதன் அடிப் படையில் அந்தக் கடலடிப் பீட பூமி இருந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே தீவாக இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே கெர்கூலியன் கடலடிப் பீட பூமியில் காணப் படும் தாவரங்களின் புதை படிவங்களும் இரண்டு கோடி ஆண்களுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதை நிரூபிக்கிறது.

கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே இருந்த நிலத் தொடர்பு வழியாகவே மற்ற நிலப் பகுதிகளில் இருந்து மண்புழுக்களும் தாவரங்களும் கெர்கூலியன் நிலப் பகுதிக்கு வந்திருக்கின்றன.

விஞ்ஞானி.க.பொன்முடி

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?