பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதை முன்னறிவிக்கும் மகாபலிபுரக் கடலடிக் கோவில்கள்.

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

ஸ்டீகோ டோன்ட் என்று அழைக்கப் படும் தற்கால யானைகளின் மூதாதை யானைகள் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன.இன்று இந்த ஸ்டீகோ டோன்ட் யானையின் எலும்புப் புதை படிவங்கள் உலகில் பல இடங்களில் காணப் படுகின்றன.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் சீன ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா தென் அமெரிக்காவிலும் காணப் படுவதுடன், இந்தோனேசியத் தீவுகளான சுமத்ரா ஜாவா சுலாவெசி புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன.

ஆனால் புளோரஸ் தீவை அடைய வேண்டும் என்றால் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் பகுதியைக் கடக்க வேண்டும்.அத்துடன் லம்போக், ஸ்ட்ரைட் என்று அழைக்கப் படும் இரண்டு கடல் நீரோட்டப் பகுதிகளையும் கடந்தாக வேண்டும்.

மேலும் புளோரஸ் தீவில் இருந்து திமோர் தீவிற்கு செல்ல வேண்டும் என்றால் ஓம்பை என்று அழைக்கப் படும் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் நீரோட்டப் பகுதியைக் கடக்க வேண்டும். மேலும் திமோர் தீவு மூவாயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.(பத்தாயிரம் அடி ).

இதன் அடிப்படையில் ,டி .எ .ஹூய்ஜர் என்ற தொல்விலங்கியல் ஆராய்ச்சியாளர், யானைகளால் குறிப்பாக ஸ்டீகோ டோன்ட் குள்ள யானையால் கடல் நீரோட்டங்களைக் கடந்து திமோர் ஆகிய தீவுகளுக்குச் சென்றிருக்க இயலாது என்று தெரிவிக்கிறார்.

மேலும் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த எம்.ஜி.ஆட்லி என்ற புவியியல் வல்லுநர்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புளோரஸ் மற்றும் திமோர் ஆகிய தீவுகளுக்கு இடையே நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

எனவே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பத்தாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது புளோரஸ் மற்றும் திமோர் ஆகிய தீவுகளில் காணப் படும் ஸ்டீகோ டோன்ட் குள்ள யானையின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.

பத்தாயிரம் அடி கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்?

கடலுக்கு அடியில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான சுடுநீர் ஊற்றுகளில் இருந்து வெளிவரும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

தற்பொழுது கடல் மட்டம் மனிதர்கள் வசித்த நிலப் பகுதிகளையும் மூழ்கடிக்கத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக எகிப்து இளவரசி கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனையும் அலெக்சான்ட்ரியா நகரமும் தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் இடப்பதை தொல் பொருளாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள்.

இதே போன்று சென்னைக்கு அருகில் மகாபலி புரம் கடற்கரையில் தற்பொழுது ஒரே ஒரு கடற்கரைக் கோவில் அமைந்திருக்கிறது.ஆனால் இந்த இடத்தில் எழு கோயில்கள் இருந்ததாக இப்பகுதி மக்கள் பரம்பரை பரம்பரையாகக் கூறிவருகின்றனர்.

மீதி ஆறு கோவில்களும் கடலுக்கு அடியில் மூழ்கி விட்டன என்று நம்பப் பட்டது.சென்னையை சுனாமி தாகிய பொழுது கடல் உள்வாங்கியத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டிட இடிபாடுகள் இருந்ததை அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களும்,சுற்றுலாப் பயணிகளும் நேரில் கண்டனர்.

எனவே எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப் பட்ட கோவில்கள் தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது ஒரு அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது நம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?