இந்தோனேசியத் தீவுகளில் மட்டும் ஏன் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது? -விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று ( 03.09.2009 ) இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜாவா தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதில் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழந்தனர்.


இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும் இந்தப் பாறைத் தட்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகள் அமைந்திருக்கும் பர்மா நிலத் தட்டிற்குக் கீழே செல்வதால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் இந்தோனேசியாவில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் நேற்று ஜாவா தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?


ஏன் நேற்று சுமத்ரா தீவிலோ அல்லது அந்தமான் தீவிலோ நில அதிர்ச்சி ஏற்படவில்லை?


இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு ஜாவா தீவிற்கு கீழே மட்டும் கீழே சென்றதா?


இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளுக்கு கீழே செல்ல இயலுமா?


உண்மையில் இந்தோனேசியத் தீவுகளில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்ன?


இந்தோனேசியத் தீவுகளில் நூற்றி முப்பது எரிமலைகள் இருக்கின்றன.


இந்த எரிமலைகளுக்கு அடியில் உள்ள பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து நீரும் வெப்ப வாயுக்களும் வெளியேறுவதால் எரிமலைகளுக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைகள் உருவாகின்றன.


அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.


எனவே இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகளுக்கு அடியில் புதிதாக உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைகள் மேல் நோக்கி உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் உள்ள பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் குறிப்பிட்ட ஒரு தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?