பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.
பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.
ஆதாரம் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் காணப் படும் கற்காலப் பழங்குடிகள்.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய்த் தீவுகளை கேப்டன் ஜேம்ஸ் குக் என்று அழைக்கப் பட்ட ஆங்கிலேய மாலுமியால் தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பட்டது.
கேப்டன் குக்கின் பாய் மரக் கப்பலைக் கண்டதும் ஹவாய்த் தீவில் இருந்து தீவு வாசிகள் சிலர் சிறிய கட்டு மரங்களில் ஏறி துடுப்பின் உதவியால் குக்கின் கப்பலுக்கு அருகில் வந்தனர்.
அப்பொழுது அவர்கள் பேசிய மொழி,ஹவாய்த் தீவிற்குத் தென்கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தகித்தி தீவு வாசிகள் பேசிய மொழியைப் போலவே இருப்பதை அறிந்து குக் மிகவும் ஆச்சரியப் பட்டர்.
காரணம் தகித்தி தீவில் இருந்து தனது பாய் மரக் கப்பலில் ஹவாய்த் தீவிற்கு வந்து சேர குக்கிற்கு ஒரு மாதம் ஆனது.
பாய் மரக் கப்பல் என்று அழைக்கப் பட்டாலும் உண்மையில் குக்கின் கப்பலின் கோடி மரத்தில் கட்டப் பட்டிருந்தது கூடாரம் அடிக்கப் பயன் படுத்தும் உறுதியான துணி.
ஆனால் ஹவாய்த் தீவில் ஒரு சிலர் மட்டுமே புற்களால் பின்னிச் செய்யப் பட்ட பாவாடை போன்ற உடையை மட்டும் இடுப்பில் கட்டியிருந்தனர்.
மேலும் ஹவாய்த் தீவு வாசிகள் பன்றி கோழி ஆகியவற்றை வளர்த்தனர்.
வாழை சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டனர்.
ஆண்கள் பெண்கள் உள்பட இவை அனைத்தையும் ஒரே ஒரு கடல் பயணத்தால் கொண்டு வந்திருக்க இயலாது.
பல முறை கடலில் பயணம் செய்தால்தான் இது சாத்தியம்.
ஆனால் அவர்களிடம் கடலில் திசை அறிய உதவும் கருவி எதுவும் இல்லை,
திசை காட்டும் கருவி இல்லாமல் கடலில் தொடு வானத்திற்கு அப்பால் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவை தற்செயலாகக் கண்டு பிடித்தாலும் கூட ,திரும்பவும் புறப்பட்ட தீவை அடைய வேண்டும் என்றால் ஒரு மாதம் கடலில் வந்த வழி தெரிய வேண்டும்.
அதாவது முதலில் புறப்பட்ட தீவில் இருந்து கட்டு மரம் எந்த திசையில் எவ்வளவு தூரம் சென்றது?என்ற விபரத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இது போன்று ஒரு மாத காலத்தில் கட்டு மரம் முன்னேறிய.. பக்கவாட்டில் ...இழுத்துச் செல்லப் பட்ட தூரம் வேகம் ஆகிய விபரங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக தகித்தி தீவில் இருந்து நேரடியாக ஹவாய்த் தீவை நோக்கி செல்ல இயலாது.காரணம் ஹவாய் தீவானது பூமத்திய ரேகையில் இருந்து வடக்கே இரண்டாயிரத்தி முன்னூற்றி அறுபத்தியேழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
ஆனால் தகித்தி தீவோ அதே அளவு தொலைவில் பூமத்திய ரேகையில் இருந்து தென் கிழக்கே அமைந்திருக்கிறது.
இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே பூமத்திய ரேகைப் பகுதியில் கிழக்கில் இருந்து மேற்கு திசை நோக்கி கடல் நீரோட்டம் ஓடுகிறது.
அதன் வேகம் மணிக்கு ஒரு கிலோ மீட்டரில் இருந்து மூன்று கிலோ மீட்டர்.
இதனால் கட்டுமரம் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை மேற்கு திசையில் இழுத்துச் செல்லப் படும்.
குறிப்பாக இந்தக் கடல் நீரோட்டம் ஆயிரம் கிலோ மீட்டர் அகலம் உடையது.
கட்டு மரத்தின் வேகம் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு நாற்பது முதல் எழுபது கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் .
அதே நேரத்தில் கட்டு மரம் கடல் நீரோட்டத்தால், காற்றால் எவ்வளவு தொலைவுக்கு பக்க வாட்டில் இழுத்துச் செல்லப் பட்டது என்ற விபரம் தெரிய வேண்டும் .
அதற்கு கடிகாரம் போன்று நேரத்தை அறிய உதவும் கருவியும் அவசியம்.
இல்லையென்றால் கட்டு மரத்தைப் பொறுத்த மட்டில் ஹவாய்த் தீவு எந்த திசையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று கணிக்க இயலாது.
ஹவாய்த் தீவில் உயர்ந்த மலைகள் இருக்கின்றன.எனவே நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் ஹவாய்த் தீவைப் பார்க்க முடியும்.
ஆனால் இரவு வேளையில் பார்க்க இயலாது.பகலில் கூட மேக மூட்டத்துடன் இருக்கும் பொழுது ஹவாய்த் தீவைக் நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து காண இயலாது.
குறிப்பாக ஹவாய்த் தீவு தெரியும் நூறு கிலோ மீட்டர் பகுதியை அடையவும் திசை காட்டும் கருவி அவசியம்.
எனவேதான் ஹவாய்த் தீவு வாசிகள் பேசிய மொழி தகித்தி தீவு வாசிகளின் மொழியைப் போல இருப்பதை அறிந்து கேப்டன் குக் ஆச்சரியப் பட்டார்.
மேலும் '' இவ்வளவு பரந்த கடல் பரப்பில் இருக்கும் இந்த நாட்டைப் பற்றி எனவென்று குறிப்பிட '' என்று வியப்பு தெரிவித்தார்.
எனவே பசிப் பெருங் கடல் பகுதியில் கடல் மட்டம் ஆயிரம் அடி தாழ்வாக இருந்தபொழுது கடல் மட்டத்திற்கு மேலே தொடர்ச்சியாக இருந்த மலைத் தொடர் வழியாகவே கற்காலப் பழங்குடிகள் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு இடம் பெயர்ந்தனர் அதன் பிறகு கடல் ம ட்டம் உயர்ந்திருக்கிறது.
அதனால் பல மலைப் பகுதிகள் கடலில் மூழ்கி விட்டன.எஞ்சியிருக்கும் உயர்ந்த மலைப் பகுதிகளே தற்பொழுது தீவுகளாக காட்சியளிக்கின்றன.

Comments