இதுதான் உண்மை
ஆப்பிரிக்கக்
கண்டத்தை சுற்றி கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில்
புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்
படும் விளக்கங்கள் உண்மை அல்ல.
எவ்வாறெனில் குறைந்த
சுற்றுவட்ட பகுதியில் உருவாகும் கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப
இயலாது.
எனவே கடல் தரை
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
கூறப் படும் விளக்கம் உண்மையல்ல.
இந்த நிலையில் கண்டத்
தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதால் கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில்
உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்சசி ஏற்படுவதாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு,
ஏனென்றால் இந்தியா
மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு
இருக்கின்றன கூறப் படும் நிலையில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில்
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்க வில்லை
பூமிக்கு அடியில்
இருக்கும் எரிமலைகள் அவ்வப் பொழுது உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சுற்றியுள்ள
தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சுற்றி பல கிலோ மீட்டர்
சுற்றளவுக்கு சில அங்குல உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி
இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி
இருக்கின்றன.
அதே போன்று நில
அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு சில அங்குல உயரமுள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட
மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கின்றன.
எனவே பூமிக்கு
அடியில் இருக்கும் எரிமலைகள் திடீரென்று உயர்ந்து இறங்குவதாலேயே நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்படுகிறது.
-விஞ்ஞானி.கணபதி
பொன்முடி.
Comments