ஜப்பான் சுனாமிக்கு காரணம் எரிமலை .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.



 ஜப்பான் தீவிற்கு அடியில் பசிபிக் கடல் தரை நகர்ந்து சென்றதால்தான் ஜப்பானில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
குறிப்பாக ஜப்பான் தீவுகள் பசிபிக் பெருங் கடலுக்கு வடமேற்கு பகுதியில் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் பசிபிக் கடல் தட்டானது பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்கு பகுதியில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கடலடி மேட்டு பகுதியில் பத்து கிலோ மீட்டர் தடிமன் உடையதாக கருதப் படும் கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.


குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள கடலடி மேட்டுப் பகுதியில் பூமிக்கு  அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வரும்பொழுது குளிருந்து இறுகி புதிய கடல் தட்டாக உருவாகிறது என்றும்,இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு புதிதாக பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தட்டை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்ந்தி விட்டு மத்திய பகுதியில் புதிய கடல் தட்டாக உருவாகிறது என்றும் விளக்கம் கூறப் படுகிறது.இவ்வாறு கிழக்கு கடலடி மேட்டுப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி கடல் தட்டு விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகரும் கடல் தட்டு ஜப்பான் தீவிற்கு அடியிலும் தென் கிழக்கு திசை நோக்கி நகரும் கடல் தட்டு தென் அமெரிக்கக் கண்டத்தீற்கு அடியிலும் உரசிய படி நகர்ந்து செல்வதால் ஜப்பானிலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு பகுதியிலும் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.




இந்த விளக்கத்தில் உள்ள குறைபாடு என்வென்றால் தென் அமெரிக்கக் கண்டமானது பூமியின் தென் கோளப் பகுதியில் உள்ளது.ஜப்பான் தீவுகளோ வடகோளப் பகுதியில் உள்ளது.இந்த நிலையில் தென் கோளப் பகுதியில் வடமேற்கு திசை நோக்கி உருவாகும் கடல் தட்டானது பசிபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் இருந்து பசிபிக் கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜப்பான் தீவுகளி நோக்கி நகர்ந்து வர வேண்டும் என்றால் பூமியில் கோளமான பரப்பின் மேல் வளைந்து நகர்ந்து வர வேண்டும்.
இவ்வாறு ஒரு இடத்தில் உருவாகும் கடல் தட்டு வளைந்து நகர்ந்தாலும் கடல் தட்டு ஒரே தட்டாக இருக்க சாத்தியம் இல்லை.எனவே பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியியில் உள்ள கிழக்கு கடலடி மேட்டு பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி பதினேழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் பெருங் கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜப்பான் தீவுகளை நோக்கி கடல் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கம் அடிப்படையில் சாத்தியமில்லாத கற்பனை விளக்கம்.
குறிப்பாக பசிபிக் கடல் தரையானது நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது பசிபிக் கடல் தரைக்கு அடியில் இருந்த எரிமலை வெப்ப மையத்தால் தொடர்ந்து துளைக்கப் பட்டதால்தான் பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் போன்ற எரிமலை வரிசைத் தீவுகள் உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
உண்மையில் பசிபிக் கடல் தரை நகர்ந்து செல்லும் பொழுது கடல் தரைக்கு அடியில் இருந்த எரிமலையால் பசிபிக் கடல் தரை உருவாகி இருந்தால் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் மற்ற எரிமலைத் தீவு வரிசைகளும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
(பசிபிக் கடல் தரையில் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகள்)
ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் பத்துக்கும் மேற்பட்ட எரிமலை வரிசைத் தீவுகள் அமைந்து இருக்கின்றன.அதில் லைன் எரிமலை வரிசைத்தீவும் ,லூயிஸ் வில்லி எரிமலை வரிசைத் தீவும் ஹாவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.
எனவே பசிபிக் கடல் தரையில் வெவ்வேறு திசை நோக்கி உஆவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகள் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
எனவே பசிபிக் கடலை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.


 
(ஜப்பானில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்ற்ளவிற்கு மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் படம்.)
 
(தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் உள்ள எரிமலைகள் உயர்ந்து இறங்கியதால் எரிமலையை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் படம்.)

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?