மாபெரும் பொய்.

ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி கடலுக்கு அடியில் உருவாகி  இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்கள் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கத்தில் உண்மையில்லை.
 
(கடல் தரை வரைபடம்)



 குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியை  சுற்றியபடி வளைவாக இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் குறைந்த சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் அதிக சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலாது.



எனவே கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் எல் இருந்த படி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்  கூறப் படும் விளக்கத்தில் உண்மையில்லை.






கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதில்லை.
எனவே கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கண்டத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகின்றன என்று கூறப் படும் விளக்கத்தில் உண்மையில்லை.



(   வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு அருகருகே இருந்தபடி வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் உலகம் முழுவதும் நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படத்தில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதி வரை நில அதிர்ச்சிகள் தொடர்ச்சியாக பதிவாகி இருக்க வில்லை.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் அட்லாண்டிக் கடல் தரை தொடர்ச்சியாக இருக்கிறது.
எனவே வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கூற்றில் உண்மையில்லை  )


கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை உயர்ந்ததால் தரைக்கு மேல் பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு உருவான மேடுபள்ள வளையங்கள்.மஞ்சள் வட்டங்கள் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களைக் குறிக்கிறது. .அமெரிக்கப் புவியியல் துறை வெளியிட்ட செயற்கைக் கோள் படம்

-விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

விஞ்ஞானிகள் கூறிய தவறான விளக்கங்களும், அதற்கான உண்மை காரணங்களும்.