ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்பட்டது?விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
ஹைத்தி தீவு நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்பட்டது?
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட பகுதியில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் வெளியிட்ட அறிக்கையில் வட அமெரிக்கக் கண்டத்தை பொறுத்த மட்டில் கரீபியன் தட்டு கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் கூறப் பட்டு இருக்கிறது.
உண்மையில் அறிக்கை வெளியிட்ட புவியியல் வல்லுனர்களுக்கு ஹைத்தி தீவு அமைந்து இருப்பதாகக் கருதப் படும் கரீபியன் தட்டு எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
அதனால்தான் குறிப்பாக கரீபியன் தட்டு எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகத் தெரிவிக்காமல் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரீபியன் தட்டு கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று மறைமுகமாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு நேரிடையாகத் தெரிவிக்காமல் மறைமுகமாகத் தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் அமெரிக்கப் புவியியல் வல்லுனர்களுக்கு ஏன் ஏற்பட்டது?
கரீபியன் தட்டின் பூர்வீகம்
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகக் கருதப் படுகிறது.
அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டம் வடக்கு தெற்காக இரண்டாகப் பிரிந்து நகர்ந்ததால் வடக்கில் லாரேசியா என்ற வட பெருங் கண்டமும் அதே போன்று தென் பகுதியில் கோண்டுவாணா என்று அழைக்கப் படும் தென் பெருங் கண்டமும் உருவானதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டத்திற்கு அடியில் பிளவு பட்டு விலகி நகர்ந்ததால் வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
அதே போன்று தென்பகுதிக் கோண்டுவாணாக் கண்டத்திற்கு அடியிலும் பிளவு ஏற்பட்டதால் மேற்குப் பகுதியில் உருவான தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
குறிப்பாக இந்த இரண்டு கண்டங்களும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப் படும் கடல் தட்டின் மேல் இருந்தபடி மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கோண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதாவது அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் உருவாகி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப் படும் கடல் தட்டின் மேல் இருந்தபடி வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசை நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலின் தென் பகுதியில் உருவாகி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப் படும் கடல் தட்டின் மேல் இருந்த படி தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப் படுகிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டத் தட்டுகளுக்கும் இடையில் கரீபியன் தீவுகள் எப்படி உருவாகின என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி வரிசையாக ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு பசிபிக் கடல் தரையில் வடமேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது பத்து கிலோ மீட்டர் தடிமன் உடையதாக கருதப் படும் பசிபிக் கடல் தரையானது பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் பகுதியில் புதிதாக உருவாகி தென் கிழக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது
இந்த நிலையில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தட்டிற்கு அடியில் உள்ள ஒரு எரிமலை மையத்தால் கடல் தட்டு தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் பசிபிக் கடல் தட்டின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசை நோக்கி வரிசையாக ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ வட அமெரிக்கக் கண்டத் தட்டு மற்றும் தென் அமெரிக்கக் கண்டத் தட்டு என்று அழைக்கப் படும் இரண்டு கண்டத் தட்டுகளுக்கு இடையில் உருவாகி இருப்பதால் ஹவாய் எரிமலைத் தீவு வரிசை உருவானதற்கு கூறப் படும் விளக்கம் பொருந்த வில்லை.
மேலும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஹவாய் எரிமலைத் தீவு வரிசையைப் போல் நேர் கோட்டுப் பாதையில் உருவாகாமல் ஹைத்தி போர்டோ ரிகோ போன்ற பெரிய தீவுகள் கிழக்கு மேற்கு திசையிலும் லெஸ்சர் ஆண்டிலிஸ் என்று அழைக்கப் படும் ட்ரினிடாட் டொபாக்கோ போன்ற எரிமலைத் தீவுகளானது வடக்கு தெற்கு திசைகளை நோக்கியும் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமே கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.அப்படியென்றால் இதற்கு முன்பு கரீபியன் தீவுக் கூட்டம் எங்கு இருந்தது என்ற கேள்வி எழுகிறது.இந்தக் கேள்விக்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த கடல் தட்டிற்கு அடியில் இருந்த எரிமலை மையத்தால் கடல் தட்டு துளைக்கப் பட்டதால் கடல் தட்டிற்கு மேல் கரீபியன் தீவுகள் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக கரீபியன் தீவுக்கு அடியில் இருந்த கடல் தட்டு மட்டும் லேசாக இருந்ததாகவும் அதனால் கிழக்கு திசை நோக்கி நகர்ந்த கடல் தட்டானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்த வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு அடியில் வளைந்து சென்ற பொழுது, மிதப்புத் தன்மையுடன் லேசாக இருந்த காரணத்தால் கரீபியன் தீவுத் தட்டு மட்டும் அமெரிக்கக் கண்டங்களுக்கு அடியில் செல்வதற்கு பதிலாக இடையில் நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் கூட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத் தட்டு மேற்கு திசை நோக்கியும் கரீபியன் தீவுக் கூட்டம் இருப்பதாகக் கருதப் படும் கடல் தட்டு கிழக்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டிற்கும் கரீபியன் தட்டிற்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக விளக்கம் கூறப் படுகிறது.
மேலும் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகளானது வடக்கு தெற்கு திசையில் உருவாகஈ இருப்பதற்கும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது கரீபியன் தீவுகள் அமைந்து இருப்பதாகக் கருதப் படும் கடல் தட்டுக்கு அடியில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தட்டானது வளைந்து சென்று வெப்பத்தால் உர்கி பாறைக் குழம்பாகி மறுபடியும் கடல் தட்டை பொத்துக் கொண்டு எரிமலையாக கடல் கரீபியன் கடல் தட்டுக்கு மேலே உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக கரீபியன் தீவுத் தட்டு பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப் படும் கருத்தாக்கமானது பசிபிக் கடல் மாதிரி என்று அழைக்கப் படுகிறது.ஆனால் தற்பொழுது பசிபிக் கடல் மாதிரி கருத்தாக்கத்த்தின் அடிப்படையில் பல கேள்விகளுக்கு விடை காண இயலவில்லை.
குறிப்பாக தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் எப்படி கரீபியன் தட்டானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு கரீபியன் தீவுக் கடல் தட்டானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் நுழைந்த கால கட்டத்தில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியே உருவாகி இருக்க வில்லை என்றும் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவானது என்றும் கருதப் பட்டது.
ஆனால் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வஸ்தவா ஆகியோர் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை படிவங்களை கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று 1985 ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்களும் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும் அமோனிட்டிஸ் வகை கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களை கண்டு பிடித்து இருகின்றனர்.
எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்கப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாக கூறப் படும் கருத்தாக்கம் கேள்விக்குறியாகி விட்டது.
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் காலபாகஸ் தீவுக் கூட்டம் உள்ள இடத்தில் உருவானதாக நம்பப் படுகிறது.ஆனால் காலபாகஸ் தீவுக் கூட்டமானது ஐயாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலேயே அமைந்து இருக்கிறது.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
இது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் எழுந்ததால் பல புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டம் தோன்றியதாகக் கூறப் படும் கருத்தாக்கத்தை ஏற்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில் சில புவியியல் வல்லுனர்கள் பசிபிக் கடல் மாதிரிக்குப் பதில் அட்லாண்டிக் கடல் மாதிரி என்று ஒரு புதிய கருத்தாக்கத்தை முன் மொழிந்திருக்கின்றனர்.
இந்தப் புதிய கருத்தாக்கத்தின் படி கரீபியன் தீவுத் தட்டானது அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த எரிமலை மையத்தால் உருவாகி அமெரிக்கக் கண்டங்களைப் போலவே மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கருதப் படுகிறது.
ஆனால் அட்லாண்டிக் கடல் கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் சில கேள்விகளுக்கு விடை கூற இயல வில்லை.முதலில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய எரிமலை மையம் எங்கே என்ற கேள்வி எழுந்தது.குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் இருப்பதைப் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை என்பது முதல் பிரச்சினை.எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில் முன்பு ஒரு காலத்தில் ஒரு எரிமலை மையம் இருந்ததாகவும் அந்த எரிமலை மையம் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய பிறகு மறைந்து விட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
முக்கியமாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதற்கு கரீபியன் தீவுத் தட்டானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தட்டானது கரீபியன் தட்டிற்கு அடியில் வளைந்து சென்று வெப்பத்தில் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தட்டை துளைத்து கடல் தட்டிற்கு மேலே எரிமலையாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் பட்டது.
ஆனால் அட்லாண்டிக் கடல் மாதிரியின் படி கரீபியன் தீவுத் தட்டானது மேக்று திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப் படும் அட்லாண்டிக் கடல் தட்டின் மேல் உருவாகி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் எப்படி வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைத் தீவுகள் உருவாகின என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த நிலையில் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது உள்ள இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற கருத்தாக்கதையும் முன் வைத்து இருக்கின்றனர்.அப்படியென்றால் கரீபியன் தட்டு எந்த திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.ஏன் நகர்ந்து கொண்டு இருக்கிறது என அடுக்கடுக்காக பல கேள்விகள் எழுந்து இருக்கின்றன.
இவ்வாறு ஒவ்வொரு வகையான விளக்கத்திலும் விடை கூற இயலாத கேள்விகள் எழுந்ததால் சில புவியியல் வல்லுனர்கள் பசிபிக் கடல் மாதிரியையே மறுபடியும் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கி இருகின்றனர். இன்று வரையிலும் புவியியல் மாநாடுகளில் கரீபியன் பிரச்சினை குறித்து அலசப் பட்டு வருகிறது.
முடிவுதான் இன்னும் எட்டப் பட வில்லை.
கரீபியன் தீவுப் பகுதியானது நிலையாக இருக்கிறது.
நில அதிர்ச்சி வரை படத்தில் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட பகுதியில் இந்த இரண்டு கண்டங்களையும் தனித் தனியாக பிரித்துக் காட்டும் வண்ணம் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பாடாமல் இருப்பதன் மூலம் உண்மையில் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பது நிரூபணம் ஆகிறது.
உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு தீவுக்கு அடியில் இருக்கும் எரிமலைகளே காரணம்.
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் மத்தியில் இருப்பதால் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுத் தட்டுக்கு அடியில் வட அமெரிக்கக் கண்டம் சென்றதால் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகள் உருவானதாக நம்புகின்றனர்.அதே நேரத்தில் வேறு சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுத் தட்டுக்கு அடியில் தென் அமெரிக்கக் கண்டம் சென்றதால் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகள் உருவானதாக நம்புகின்றனர்.

Comments