எரிமலை வெடித்ததால் சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருக்கிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
ஆய்வுக் கட்டுரை
தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகள் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் பூகோள ரீதியில் கண்டத் தட்டுகள் நகர்வது சாத்தியமல்ல.
உண்மையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
எப்படி என்பதை அறிவதற்கு முன்பு முதலில் கண்டத் தட்டுகள் பற்றிய கருத்தாக்கம் உருவான விதம் பற்றி அறிவது அவசியம்.
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவை கடல் வழியாக அடைவதற்கு முயற்சி மேற்கொண்டார்கள்.
குறிப்பாக இந்தியாவில் விளையும் மிளகு,கிராம்பு பட்டை லவங்கம் சீரகம் போன்ற மசாலா பொருட்களும் அதே போன்று சீனாவில் தயாரிக்கப் படும் பட்டுத் துணிகளும் ஐரோப்பாவிற்கு இஸ்லாமிய நாடுகள் வழியாகவே கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் வியாபாரம் இஸ்லாமியர்களின் கட்டுப் பாட்டில் இருந்தது.
எனவே வியாபாரத்தை தங்களின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஐரோப்பியர்கள் இந்தியாவை கடல் வழியாக அடைவது அவசியமாயிற்று.இதற்காக மாலுமிகளுக்கு நல்ல சம்பளமும் பதவியும் வேலையாட்களும் வழங்கப் பட்டது.
ஐரோப்பாவில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட பாய்மரக் கப்பல்களில் மாலுமிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி கடலில் எழு மாதம் பயணம் செய்து இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து இந்தியாவை அடைந்தார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற மாலுமி ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டு இந்தியாவை அடைவதற்கு பதிலாக ஐரோப்பாவில் இருந்து நேராக மேற்கு திசையில் பயணம் செய்து அட்லாண்டிக் கடலைக் கடந்து கிழக்கு திசையில் இந்தியாவை எளிதாக அடைந்து விடலாம் என்று நினைத்து அட்லாண்டிக் கடலை கடந்தார்.
அந்த கால கட்டத்தில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு பெரிய கண்டங்கள் இருப்பது உலகின் கவனத்திற்கு தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் கொலம்பஸ் அட்லாண்டிக் கடலில் இரண்டு மாதம் பயணம் செய்து அமெரிக்காவிற்கு அருகில் உள்ள கரீபியன் தீவுகளைக் கண்டு பிடித்து இறங்கி அங்கே கருப்பு நிற பூர்வீகப் பழங்குடிகள் வசிப்பதைக் கண்டு அவர்களை தவறுதலாக இந்தியர்கள் என்று நினைத்ததால் இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடித்து விட்டதாக சந்தோசப் பட்டார்.
ஆனால் அவருக்கு பிறகு அட்லாண்டிக் கடலைக் கடந்தவர்கள் கொலம்பஸ் கண்டு பிடித்தது இந்தியா அல்ல என்பதை அறிந்து தொடர்ந்து மேற்கு திசையில் பயணம் செய்து வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களைக் கண்டு பிடித்து குடியேறினார்கள்.
அப்பொழுதுதான் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஏற்கனவே ஐரோப்பாவில் கண்ட குதிரை, காட்டெருமை,ஒட்டகம் போன்ற விலங்கினங்கள் காணப் படுவது ஐரோப்பியர்களுக்கு விநோதமாக இருந்தது.
எப்படி இந்த விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவிற்கு வந்தன என்று குழம்பினார்கள்.
எனவே முன் ஒரு காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தையும் அமெரிக்கக் கண்டத்தையும் இணைக்கும் வகையில் அட்லாண்டிக் கடலுக்கு குறுக்கே ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்து அதன் வழியாக விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அதன் பிறகு அந்த தற்காலிக நிலப் பாலம் மூழ்கி இருக்கலாம் என்றும் கருதினார்கள்.
ஆனால் தற்பொழுது ஆசியக் கண்டத்தில் சைபீரியாவிற்கும் வட அமெரிக்காவின் அலாஸ்காவிற்கும் இடையில் பெர்ரிங் என்று அழைக்கப் படும் சிறிய கடல் பகுதி இருப்பதும் அப்பகுதியில் கடல் மட்டம் தாழ்வாக இருந்த கால கட்டத்தில் அப்பகுதியில் தரை வழியாகவே காட்டெருமை மான் போன்ற ஒட்டகம் குதிரை போன்ற விலங்கினங்கள் ஆசியாவில் இருந்து வட அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து இருப்பதற்கு ஆதாரமாக அலாஸ்காவிலும் சைபீரியாவிலும் விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
மேலும் பெர்ரிங் கடல் தரை வழியாகவே செவ்விந்தியர்கள் உள்பட அமெரிக்க பூர்வீக பழங்குடிகள் யாவரும் ஆசியக் கண்டத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கால் நடையாகவே சென்று இருக்கிறார்கள்.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெர்ரிங் கடல் பகுதியின் முக்கியத்துவம் உணரப் படவில்லை.எனவே ஐரோப்பாவில் இருந்து விலங்கினங்கள் அட்லாண்டிக் கடல் வழியாகவே சென்றதாக கருதப் பட்டது.இந்த நிலையில் கடல் பயணத்திற்கு உதவும் வகையில் நிலவியல் வரைபடங்கள் வரையப் பட்டன.
அப்பொழுதுதான் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களின் கிழக்கு கடற்கரை ஓரப் பகுதிகளும் அதே போன்று அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் மேற்கு கடற்கரை ஓரப் பகுதிகளும் ஒன்றுக் கொன்று பொருந்துவதைப் போன்று இணையான வடிவில் இருப்பது பலரின் கவனத்தைக் கவர்ந்தது.
அதிலும் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியும் பொருந்துவது போல் இருந்தது,இதன் அடிப்படையில் முன்பு ஒரு காலத்தில் இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப் பட்டது.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களிலும் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த மெசோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை வல்லுநர் முன்பு ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்திருக்கின்றன என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கின்றன என்று ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் ஏன் நகர்கின்றன? கண்டங்களை நகர்ந்தும் சக்தி எது?போன்ற கேள்விக்கு வெக்னரால் உறுதியாக ஒரு பதிலைக் கூற இயலவில்லை.
வெக்னரின் கருத்து ஏற்கப் பட வில்லை என்றாலும் புவியியலாளர்களால் மலைகள் எப்படி உருவாகின்றன நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
ஆனால் கண்டங்கள் நகர்ந்து மோதிக் கொள்வதால்தான் நிலம் புடைத்துக் கொண்டு உயர்ந்து மலைகளாக உருவாகின்றன என்று வெக்னர் விளக்கம் கூறினார். இந்த நிலையில் விலங்கினங்கள் எவ்வாறு கடல் கடந்து கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன என்பதும் புதிராகவே இருந்தது.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது.
அப்பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றுக்கு தலைமை வகித்த ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர் அவரது கப்பலில் சோனார் என்ற கருவியை பயன் படுத்தினார்.
குறிப்பாக அவர் சோனார் கருவி மூலம் ஒலி அலைகளை கடலுக்குள் அனுப்பி அவைகள் கடல் தரையில் பட்டு எதிரொலிக்கப் பட்டு திரும்பவும் கப்பலை அடையும் பொழுது வரைபடக் கருவிகள் மூலம் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரைபடத்தை தயாரிதார்.
அப்பொழுதுதான் அவர் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடல் தரையில் வடக்கு தெற்காக நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் ஒரு ராட்சஸ பாம்பு போன்று வளைந்து ஆங்கில s எழுத்து வடிவில் நெளிந்து உருவாகி இருப்பதை அறிந்தார்.அது வரை கடல் தரை சம தளமாகவே இருக்கும் என்றே பலரும் நினைத்தனர்.
இதன் அடிப்படையில் ஹெஸ் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஒரு விளக்கத்தைக் கூறினார்.
குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வரும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகி புதிய கடல் தரையாக உருவகிறது என்றும், மறுபடியும் அதே இடத்திற்கு பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தரையை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தரையாக உருவாகிறது என்றும் விளக்கம் கூறினார்.
இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால் மத்திய அட்லாண்டிக் கடலடி மலைத் தொடருக்கு மேற்கு பகுதியில் இருக்கும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று அட்லாண்டிக் கடலடி மலைத் தொடருக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹெஸ் கூறினார்.
அதாவது கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் நகர வில்லை ஆனால் புதிதாக உருவாகி நகரும் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று நகரும் கண்டங்கள் கருத்திற்கு புது வடிவம் கொடுத்தார்.
ஆனால் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்காக நீண்டு இருக்கும் கடலடி மலைத் தொடரானது ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் பகுதியில் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
அதில் ஒரு கிளையானது மேற்கு திசை நோக்கி வளைந்து பசிபிக் கடலுக்குள் சென்று மறுபடியும் வடக்கு திசை நோக்கி திரும்பி தென் அமெரிக்கக் கண்டத்தை சுற்றியபடி நீண்டு செல்கிறது.
அதே போன்று கிழக்கு திசை நோக்கி வளைந்த இரண்டாவது கிளையானது இந்தியக் கடல் பகுதிக்குள் நீண்டு மறுபடியும் வடக்கு திசை நோக்கி வளைந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி செங்கடல் பகுதியில் முடிவடைகிறது.
இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி அமைந்து இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து செல்வது பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் வடக்கு தெற்காக நீண்டு இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து செல்வதாகவும் அதனால் அந்தக் கடலடி மலைத் தொடருக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் அதே கடலடி மலைத் தொடரின் தொடர்ச்சி ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்கு பகுதியில் குறிப்பாக இந்தியக் கடல் பகுதியில் வடக்கு தெற்கு திசை நோக்கி நீண்டு இருக்கும் நிலையில் அந்தக் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருந்தால் அந்தக் கடலடி மலைத் தொடருக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டமானது தென் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு கண்டம் ஒரே நேரத்தில் கிழக்கு திசை நோக்கியும் மேற்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருக்க சாத்தியம் இல்லை.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இந்தியக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடலடி மலைத் தொடருக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை விட்டு விலகி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுவது முற்றிலும் தவறான விளக்கம்.
மேலும் ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் குறைந்த சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் ஆப்பிரிக்கக் கண்டத்தை விட்டு தொலைவில் உள்ள அதிக சுற்றளவு பகுதியை நிரப்ப இயலாது.
அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி இருக்கும் கடலடி மலைத் தொடரில் புதிய கடல் தரை உருவாகி குறைந்த சுற்றளவுப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கியும் கடல் தரை நகர்ந்து சென்றால் கடல் தரைப் பாறைகளுக்கு இடையே நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி விடும்.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து தென்துருவப் பகுதியில் கோண்டுவாணா என்ற பெருங் கண்டமாக இருந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.அதன் பிறகு அந்தத் தென் பெருங் கண்டம் பல சிறிய பகுதிகளாகப் பிரிந்ததால் தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி வட மேற்கு திசை நோக்கியும், அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டம் உருவாகி வடக்கு திசை நோக்கியும்,அதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகி வட கிழக்கு திசை நோக்கியும் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்த படி தென் பகுதிக் கண்டங்கள் அதிக சுற்றளவு உள்ள பூமத்திய ரேகைப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியானது தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்றளவுப் பகுதியில் இருக்கிறது.
ஆனால் பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவு அதிகம்.எனவே குறைந்த சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் அதிக சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலாது.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அதிக சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் குறைந்த சுற்றளவுப் பகுதியில் அமைந்து இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி நகர்ந்தால் கடல்தரைப் பாறைகளுக்கு இடையே நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி விடும்.
எனவே அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தரையின் மேல் இருந்தபடி தென் பகுதிக் கண்டங்களான தென் அமெரிக்கா வடமேற்கு திசை நோக்கியும் ,ஆப்பிரிக்காக் கண்டமானது வடக்கு திசை நோக்கியும் அதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் வடகிழக்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும் பூகோள ரீதியில் சாத்தியமில்லாத விளக்கம்.

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரே ஒரு கண்டம் மட்டுமே இருந்ததாக நம்பப் படுகிறது பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டம் வடக்கு தெற்காக பிரிந்து நகர்ந்ததால் பூமியின் வடபகுதியில் ஒரு கண்டமும் தென் பகுதியில் ஒரு கண்டமுமாக இரண்டு பெருங் கண்டங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டம் கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிந்து நகர்ந்ததால் வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையில் நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டம் பிரிந்ததால்தான் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.வடபெருங் கண்டம் பிரிந்து நகர்ந்ததற்கு கண்டத்திற்கு அடியில் உள்ள தரைப் பகுதி பிளவு பட்டு பிரிந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது.
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்த பெருங் கண்டதிற்கு அடியில் இருந்த தரைப் பகுதி பிளவு பட்டு பிரிந்ததால் மேற்கு பகுதியில் தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்தது என்று நம்பப் படுகிறது.
அத்துடன் இன்றும் கூட தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக இந்த இரண்டு கண்டங்களும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வரும் பாறைக் குழம்பு குளிர்ந்து புதிய பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தரையின் மேல் இருந்த படி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாக கண்டத் தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
எனவே வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து உருவாகி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தரையின் மேல் இருந்தபடி முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தை தயாரித்தனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடைப் பட்ட பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்காக் கண்டத்திற்கும் கிழக்கு பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல் தரையானது வட பகுத் தென் பகுதி என்று தனித் தனியாக நில அதிர்சிகளால் பிரிக்கப் படாமல் தொடர்ச்சியாக இருக்கிறது.
எனவே வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் இரண்டு பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியாக புதிய கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்த படி வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்புவது அடிப்படை ஆதாரமற்ற நம்பிக்கை.
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ் திரேலியா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இணைந்து அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கிறது.
ஆனால் இந்தியாவிற்கும் ஆஸ் திரேலியா விற்கும் இடையில் புதிய கடல் தரை உருவாகும் எரிமலைத் தொடர் பகுதி எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
முக்கியமாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அருகருகே இருந்த பிறகு தற்பொழுது உள்ளதைப் போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கண்டத் தட்டுகளின் மேல் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாக வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல்தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் ஒன்றாக இருந்ததாகவும் அதன் பிறகு அங்கிருந்து பிரிந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்புவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.
எனவே இந்தோனேசியா உள்பட இமய மலைப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளே காரணம் என்பது தெளிவாகிறது.
முக்கியமாக கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கடலுக்கு அடியில் இருந்த எரிமலையே காரணம்.
குறிப்பாக தெற்காசிய சுனாமிக்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வட மேற்கு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து இருந்தது.
அதனால் அந்தப் பகுதியில் புதிதாக கடற்கரையும் உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் அதுவரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களும் வெளியில் தெரிந்தன.
எனவே சிமிழு தீவுப் பகுதி உயர்ந்ததே நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம்.
தீவு ஏன் உயர்ந்தது.?
சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த நில அதிர்ச்சியால் சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் குறிப்பாக நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயர மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது போன்று ஒரு மையப் பகுதியை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையை சுற்றி உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலை உயர்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியுயும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை சிறிது இறங்குவதால் எரிமலையைச் சுற்றி உயர்ந்த தரைப் பகுதியும் சற்று இறங்குகிறது.
உதாரணமாக அலாஸ்காவில் உள்ள பெலிக் என்ற எரிமலை உயர்ந்து இறங்கியதால் எரிமலையை சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
(படம்-அலாஸ்காவில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி வளைய வடிவில் உயர்ந்த தரைப் பகுதி.) குறிப்பு;இந்த எரிமலையானது 1814 மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் புகையைக் கக்கியது. கடந்த அக்டோபர் 1996 முதல் செப்டம்பர் 1997 ஆண்டு காலகட்டத்தில் பெலிக் எரிமலையின் மேல் பறந்த செயற்கைக் கோள் அனுப்பிய படங்களைத் தொகுத்துப் பார்த்த பொழுது அந்த எரிமலையைச் சுற்றியும் ஆறு வளையங்கள் வரைந்தது போன்று தரைப் பகுதி உயர்ந்து இருந்தது.ஒவ்வொரு வளையமும் 17 சென்டி மீட்டர் (ஆறரை அங்குலம்)உயரத்தைக் குறிக்கிறது.அதன் பிறகு செப்டம்பர் 1997 முதல் செப்டம்பர் 1998 ஆண்டு கால கட்டத்தில் கூடுதாலாக ஒரு வளையம் ஆறு சென்டி மீட்டர் (ஒரு அங்குலம்)உயர்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.)
எனவே எரிமலை வெடித்ததால்தான் 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருக்கிறது.

Comments