எரிமலைகள், நில அதிர்ச்சி, சுனாமி பற்றிய கற்பனைகளும் உண்மையும்.விஞ்ஞானி.க.பொன்முடி.
Media Release
Fact - 1,ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் அகழிகள் உருவாகி இருக்க வில்லை.
Fact-2,அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் அகழிகள் உருவாகி இருக்க வில்லை.
Fact-3, ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை.
Fact-4, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவித் தரையை பொத்துக் கொண்டு மேல் நோக்கி உயரும் பொழுது எரிமலைகள் உருவாகிறது.
ஆனால் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்கள் எரிமலைகளின் தோற்றத்திற்கு ஒரு வினோதமான விளக்கத்தை முன்வைக்கின்றனர்.
அதாவது கடலின் மத்தியப் பகுதியில் உள்ள மலைத் தொடர் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து வரும் பொழுது குளிர்ந்து இறுகி புதிய கடல் தரையாக உருவாகிறது.
அதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பு ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் பாறைத் தட்டை பக்கவாட்டுப் பகுதிகளுக்கு நகர்ந்தி விட்டு மத்திய பகுதியில் புதிய கடல் தட்டாக உருவாகிறது.
இதனால் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இவ்வாறு கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்லும் கடல் தட்டானது இறுதியில் கண்டங்களுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்று பூமிக்குள் சென்று மறுபடியும் பாறைக் குழம்பாக உருவாகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டங்களை உரசிய படி கடல் தட்டு நகர்ந்து செல்லும் பொழுதுதான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
அத்துடன் பூமிக்குள் சென்ற கடல் தட்டு உருகி மறுபடியும் பாறைக் குழம்பாக மாறிய பிறகு வெப்பத்தால் மேல் நோக்கி உயர்ந்து புவித் தரையை பொத்துக் கொண்டு நிலத்திற்கு மேலே எரிமலையாக உருவாகிறது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
குறிப்பாக பசிபிக் கடலை சுற்றிலும் ஐநூற்றுக்கும் அதிகமான எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இந்த எரிமலைகளானது பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்த பசிபிக் கடல் தரையானது பசிபிக் கடலை சுற்றியுள்ள கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் அடியில் சென்று பாறைக் குழம்பாக உருவாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து தரையைப் பொத்துக் கொண்டு உருவானது என்று விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருப்பதைப் போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை.
எனவே பூமிக்குள் செல்லும் கடல்தரை உருகி மறுபடியும் மேல் நோக்கி உயர்வதால்தான் எரிமலைகள் உருவாகின்றன என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு என்பது நிரூபணமாகிறது.
இதே போன்று பசிபிக் கடலின் சுற்றுவட்டப் பகுதியில் ட்ரென்ச்சஸ் என்று அழைக்கப் படும் கடல் அகழிகள் காணப் படுகின்றன.
இந்த அகழிகளானது பசிபிக் கடல் தரை நகர்ந்து சென்று பூமிக்கு அடியில் செல்வதால் உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறும் புவியியல் வல்லுனர்களால் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தரைக்கு இறுதியில் என்ன நேர்கிறது என்று விளக்கம் கூற இயலவில்லை.
குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் தரையில் அகழிகளும் உருவாகி இருக்க வில்லை எரிமலைகளும் உருவாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே கடலின் மத்தியப் பகுதியில் கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து பூமிக்கு அடியில் சென்று மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து வருவதால்தான் எரிமலைகள் உருவாகின்றன என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு என்பது ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களை சுற்றிலும் அகழிகள் மற்றும் எரிமலைகள் காணப் படாததன் மூலம் நிரூபணம் ஆகிறது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்புதான் பூமிக்கு மேல் உயர்வதாலேயே எரிமலைகள் உருவாகின்றன.என்பது நிரூபணம் ஆகிறது.
அதனால்தான் கண்டங்களின் ஓரப் பகுதிகளில் மட்டுமின்றி கண்டங்களின் மத்தியப் பகுதிகளிலும் எரிமலைகள் உருவாகின்றன.
எனவே கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணம் ஆகிறது., அதே போன்று கண்டங்களுக்கு அடியில் கடல் தரை உரசிச் செல்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்று கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறு என்பதும் நிரூபணம் ஆகிறது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளை சுற்றியும் அதே போன்று நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
குறிப்பாக,ஹைத்தி தீவிலும்,ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பிறகு நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.
இதே போன்று சுனாமியின் பொழுது கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த சிமிழு தீவில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருகிறது.
எனவே இந்தோனேசியாவிலும்,ஹைத்தி தீவிலும்,ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு தீவிற்கு அடியில் இருக்கும் எரிமலைகளே காரணம் என்பது நில அதிர்ச்சி மையத்தை சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள் மூலம் நிரூபணம் ஆகிறது.