Posts

Showing posts from September, 2026

எரிமலை வெடித்ததால் தெற்காசிய சுனாமி உருவானது.

தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் உறுதி படுத்தப் படாத விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததால், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில் அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களை மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரையின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று கண்டங்கள் கடல்தளங்களுடன் நகரும் பொழுது,கண்டங்களுக்கு அடியிலும்,தீவுகளுக்கு அடியிலும், உரசியபடி நகர்ந்து செல்வதாகவும் அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடலுக்கு அடியில் நில ...