Posts

Showing posts from July, 2026

tsunami1000

தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதே போன்று,கண்டங்கள் கடல் தரையுடன் நகரும் பொழுது,கடலுக்கு அடியில் இருக்கும் கண்டங்களின் அடிப்படகுதிக்கும்,தீவுகளுக்கு அடிப் பகுதியிலும்,உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல்நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவாகு வதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு,வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக...