எரிமலை, நில அதிர்ச்சி, சுனாமி
சுனாமிக்கு தற்பொழுது கூறப் படும் விளக்கங்கள் தவறு.
கடல் தரையுடன் கண்டங்கள் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது கடல்தரையுடன் கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடல் தரைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் கடல் தரையானது நகர்ந்து செல்வதாலேயே சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், கடல் தளம் தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் அடிப்படை ஆதாரமின்றி, வெறும் யூகத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைப் தெரிவித்து இருப்பதும், அறிவியல் ஆய்வு மையங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அதனால் அட்லாண்டிக் கடலுக்கு மேற்கு திசையில் உள்ள வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் மேற்கு பகுதியை நோக்கியும், அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குத் திசையில் உள்ள ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்குப் பகுதியை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தரையுடன் மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தரையுடன், வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் கடல் தரையுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகம் முழுவதும் ஏற்பட்ட 3.58.214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தை சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது.
இதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தரையுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையிலும் கூட தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலமாகத் தெரிய வந்துள்ளதால் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை, என்று நாசா ஆய்வு மையம் வெளியிட்ட கண்டத் தட்டுகளின் செயல் பாட்டைக் குறிப்பதாகக் கூறப் படும் வரைபடத்திலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்காசிய சுனாமிக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல்,இந்தியக் கண்டம் நகர்ந்து இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான் தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வெறும் யூகத்தின் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த விளக்கத்தை மறுக்காமல், அதே நாசா வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் ஆஸ்திரேலியாக் கண்டம் நகர்ந்ததால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தரையானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான் தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று, முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரமின்றி யூகத்தின் அடிப்படையில் விளக்கம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லாததால்,நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் கூறப் படும் விளக்கங்கள் யாவும் ஏற்கத் தக்கதல்ல.
எரிமலைகள் வெடித்ததால் சுனாமிகள் உருவாகின.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் சுமத்ரா,ஹைத்தி மற்றும் ஹோண்சு தீவுப் பகுதிகளில் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
குமுறும் எரிமலைகள் அவ்வபொழுது சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரளும் பொழுது, எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.
இவ்வாறு ஒரு எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குகிறது.
இதனால் எரிமலையைச் சுற்றியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக, வடுக்கள் போன்று எரிமலையைச் சுற்றிலும் வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
இதே போன்று நில அதிர்ச்சியும் சுனாமிகளும் ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவ வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,எரிமலைகளைச் சுற்றி உருவகுவதைப் போன்ற வளைய வடிவ மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
அத்துடன் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு அப்பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளிப்படும் ரேடான் வாயு பூமிக்கு அடியில் இருந்து கசிந்து இருப்பதும் கருவிகள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே லா அகுய் லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
ஆனால் இன்று வரை லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு பாறைத் தட்டுகள் நகர்ந்து சென்றதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் தவறாக நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
இதே போன்று ஹோண்சு தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவான பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்ற வளைய வடிவ வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
அத்துடன் ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாளைக்கு முன்பு, நில அதிர்ச்சி மையப் பகுதிக்கு மேலே உள்ள வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்திருந்ததும் வானிலை செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அப்பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளிப்படும், ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவின் கதிரியக்கத்தால் காற்று மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப் பட்டு, எலெக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால், வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கிறது என்று, நாசாவைச் சேர்ந்த டாக்டர் டிமிட்டார் ஒசனோவ் விளக்கமளித்து இருக்கிறார்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோண்சு தீவுப் பகுதியிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகி இருப்பதும் செயற்கைக் கோள் பட ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 12.01.2010 அன்று கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவுப் பகுதியில் ,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும்,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்ற, வளைய வடிவ வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
அத்துடன் ஹைத்தி தீவின் கடற் கரையோரத்தில் கடலுக்கு அடியில் இருந்த நிலம், கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்து உயர்ந்ததாலேயே ஹைத்தி தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுப் பகுதியில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியின் பொழுது, அப்பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.
இந்த நிலையில் அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில், 20.01.2008 அன்று, நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்ற வளைய வடிவ வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்து உயர்ந்ததாலேயே சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகி இருப்பதும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது.
Comments