புதை படிவங்களும் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களும்.
தற்பொழுது பனி மூடிய துருவப் பகுதிகளில் உள்ள தீவுகளில் ,வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் இருந்த தீவுப் பகுதிகள் வெப்ப மண்டலப் பகுதியில் இருந்ததாகவும் ,பின்னர் வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து என்பது ஒரு அடிப்படை ஆதாரமற்ற கருத்து.கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தொடர்பு துண்டிக்கப் பட்டது.கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது பூமியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்தது.
அதனால் துருவப் பகுதிகளிலும் கூட வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருந்தது.
அதனால் துருவப் பகுதிகளில் டைனோசர்கள் முதல் பாலூட்டிகள் வரை வாழ்ந்தன.
பின்னர் கடல் மட்டம் உயர்ந்து கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் பூமியில் கால நிலை குளிர்ந்தது.துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.
ஆனால் இன்று துருவப் பகுதிகளில் டைனோசர்களின் காலத்துக்கு முன்பு வளர்ந்த பெரனி போன்ற தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,தவளைகளின் மூததையான ஆதி கால நாற்காலிகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு அந்த நிலப் பகுதிகள் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து வட திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று தவறான விளக்கம் கூறப் படுகிறது.
பின்னர் டைனோசர்கள் அழிந்த பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டிகளின் புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் காணப் படுவதற்கு அந்தக் காலத்தில் துருவப் பகுதிகளிலேயே வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருந்ததாக முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள் கூறப் படுகிறது.
Comments