சுனாமிகளை உருவாக்கிய எரிமலை வெடிப்புகள்.

''எரிமலையைச் சுற்றியும் சுனாமியின் பொழுது உருவாகிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும் வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.''

அலாஸ்காவில் உள்ள ஆக்மோக் எரிமலையில் இருந்து 1945,1958 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கரிய நிறத்தில் பாறைக் குழம்பானது வெளிப்பட்டது.

குறிப்பாக அந்த எரிமலையானது 1992-95 ஆண்டுகளில் 18 சென்டி மீட்டர் உயர்ந்தது.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டில் சீறியதற்கு முன்பு 1995-96 ஆண்டில் 1-2 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.அத்துடன் 1997 சீறியபொழுது 140 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.

அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆண்டுக்கு 5 முதல் 15 சென்டி மீட்டர் வரை மறுபடியும் உயர்ந்து இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.(படம்-1)

இவ்வாறு எரிமலைகளுக்குள் பாறைக் குழம்பு திரளும் பொழுது எரிமலைகள் உயர்கின்றன.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் உயர்கிறது.

இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்களும் பாறைக் குழம்பும் வெளிவருவதால் எரிமலையின் உயரம் சிறிது இறங்குகிறது.அப்பொழுது எரிமலையுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.

இவ்வாறு எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக எரிமலையைச் சுற்றி வளைய வடிவில் சிறிய அளவிலான வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

இந்த எரிமலையைச் சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் துல்லியமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது 

இதே போன்று சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும் (படம்-2)ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் (படம் -3)ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் (படம்- 4) நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

 Okmok volcano, a broad shield topped with a 10-km-wide caldera, produced blocky basaltic flows during relatively large effusive eruptions in 1945, 1958 and 1997. Multiple InSAR images mapped: 1) the surface inflation of more than 18 cm during 1992-95 and subsidence of 1-2 cm during 1995-96, prior to the 1997 eruption; 2) more than 140 cm of surface deflation during the 1997 eruption; and 3) 5-15 cm/year inflation during 1997-2003, after the 1997 eruption

சுனாமியின் பொழுது கடல் மட்டதிற்குமேலே உயர்ந்த சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி உருவான மேடுபள்ளவளையங்கள்


ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது.



ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?