நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் நான் கூறும் விளக்கத்தை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

சுனாமிகளுக்கு கூறப் படும் யூகத்தின் அடிப்படையிலான விளக்கங்களும் ஆதாரப்பூர்வமான விளக்கமும்.
 
தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியானது தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடல் தரையுடன் கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
 
இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரையானது தனித் தனியாக நகரும் பொழுது கடல் தரைப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
 
ஆனால் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரி படத்தில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன் அடிப்படையில் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.
 
முக்கியமாக ஹைத்தி தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்தது என்று கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமாகத் தெரிவிக்க இயலாத நிலையில் ஹைத்தி தீவுப் பகுதியில் ஏற்பட்ட சுனாமிக்கு புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் ஏற்கத் தக்கதல்ல.
 
 
அத்துடன் நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களையும் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
 
இந்த நிலையில் , ஹைத்தி ,ஹோண்சு மற்றும் சுமத்ரா தீவுப் பகுதிகளில், பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது, இணைய தளங்களில் வெளியான தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 
ஹைத்தி மற்றும் சுமத்ரா தீவுப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமிக்கு புவியியல் வல்லுனர்கள் வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே விளக்கத்தைக் கூறி  இருக்கும் நிலையில்,எனது விளக்கத்திற்கு தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் ஆதாரமாக இருப்பதால் எனது விளக்கமானது ஏற்கத் தக்கது.
 
 
இதே போன்று புதை படிவ ஆதாரங்களுக்கும் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள்.  
 
 
குறிப்பாக குளிர்பிரதேசமான வட துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த ஆதிகாலத் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு முதலில் ,அந்த நிலப் பகுதிகள் வெப்ப மண்டலம் நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து பின்னர் துருவப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.



இந்த நிலையில் அதே வடதுருவப் பகுதிகளில் ஒன்பது கோடி முதல் ஐந்தரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை ,வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் பாடுவதற்கு,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியிலேயே வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 
எனவே எனது விளக்கங்களே  சரியாக இருக்கிறது.

மேலும் படிக்க ...

இது ஊரையும் உலகையும் ஏமாற்றும் செயல் அன்றி வேறல்ல.

http://earthquakreason.blogspot.in/2012_04_01_archive.html

 


http://earthquakreason.blogspot.in/2011/09/blog-post.html


 

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?